துளித் துளியாய்..குறையில்லா பிரசவம் வேண்டும்! --ஹெல்த் ஸ்பெஷல்
துளித் துளியாய்.. குறையில்லா பிரசவம் வேண்டும்! 'உலக அளவில், குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளில் நான்கில் ஒன்று இந்த...

குறையில்லா பிரசவம் வேண்டும்!
'உலக அளவில், குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளில் நான்கில் ஒன்று இந்தியாவில் பிறக்கிறது’ என்கிறது இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவ ஆய்வு இதழான 'லான்செட்’. 2010-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 35.19 லட்சம் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளதாக புள்ளிவிபரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியானக் குழந்தைகள் மரணத்துக்கு இந்தக் குறைப்பிரசவமும் மிகப் பெரிய காரணியாக உள்ளது. 'மிகச் சிறிய வயதில் திருமணம் மற்றும் குழந்தைப்பேறு, போதுமான ஊட்டச் சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளாமை, உடல் நலம் பற்றி கர்ப்பிணிகளுக்குப் போதிய விழிப்பு உணர்வு இன்மை...’ போன்றவையே இதற்கானக் காரணம் என்றும் எச்சரித்துள்ளது லான்செட்.
அச்சுறுத்தும் அஜினோமோட்டோ!
இதை உணர்ந்த சீனா தங்கள் நாட்டில், அஜினோமோட்டோவைத் தடை செய்திருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், சீனா தன் உபயோகத்தைத் தடை செய்திருக்கிறதே தவிர, உற்பத்தியைத் தடை செய்யவில்லை. அதாவது, உள்ளூரில் தடை செய்யப்பட்ட அஜினோமோட்டோவைத் தான் இந்தியாவுக்கு அனுப்பிவருகிறது. இந்தியாவில் அஜினோமோட்டோவின் ஆபத்தை உணர்ந்து தடை செய்வது அரசின் கையில் இருக்கலாம். ஆனால், நம் வீட்டுக்குள் அஜினோமோட்டோ வராமல் தடுக்கும் வாய்ப்பு நமது கரங்களில்தான் இருக்கிறது.
அழகு சாதன ஆபத்து!
'பாதரசம் கலந்த சோப்பு, க்ரீம், ஐ லைனர், மஸ்கரா, க்ளென்சிங்’ போன்ற அழகு சாதனங்களால் சிறுநீரகம் பழுதடைவதோடு, ஒட்டுமொத்த உடலுமே பாதிக்கப்படும் அபாயம் உள்ளது’ என்று எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
இந்தியாவில் விற்பனையாகும் அழகு சாதனப் பொருட்களில் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம் வகைகளே 61 சதவிகிதம். பாதரசம் சருமத்தில் உள்ள மெலனின் என்கிற நிறமியுடன் சேர்ந்து சருமத்தை மேலும் வெள்ளையாக்க உதவுகிறது. தோல் பளிச்சென ஆனாலும், நாளடைவில், சருமம் பாதிக்கப்படும். அழகு சாதனப் பொருட்களின் லேபிளில் பாதரச அயோடைடு, பாதரச குளோரைடு, க்விக் சில்வர், பாதரச சல்பைடு, பாதரச ஆக்சைடு போன்றவை சேர்மானப் பொருட்களாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால், பல அழகு சாதனப் பொருட்களில், பாதரச துணைப் பொருட்கள் சேர்ப்பதுபற்றிய எந்த விவரமும் லேபிளில் இருப்பது இல்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளது. பாதரசம் கலந்த சோப் மற்றும் க்ரீம் வகைகளைப் பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு பிறக்கும் குழந்தைக்கு நரம்பு தொடர்பான பாதிப்பும் ஏற்படுகிறது என்கிறது இந்த ஆய்வு.
'துப்பாக்கி’த் துள்ளல்!
விஞ்ஞான விஸ்வரூபம்!
Post a Comment