வலுவைத் தரும் கிழங்கு வாதத்தையும் தரும்!--மருத்துவ டிப்ஸ்
வலுவைத் தரும் கிழங்கு வாதத்தையும் தரும்! கிழங்கு வகைகளைப் பயன்படுத்துவது எப்படி? ''கிழங்கு வகைகளை வேகவைத்துச் சாப்பிடுவதுதா...

''கிழங்கு வகைகளை வேகவைத்துச் சாப்பிடுவதுதான் நல்லது. இவற்றில் மாவுச் சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு நல்ல சக்தி கொடுக்கும். ஆனால் ருசிக்காக, எண்ணெயில் வறுத்து, பொரித்துச் சாப்பிடுவதால், கிழங்கில் இருக்கும் சத்துக்கள் நம் உடலில் சேராமல் போய்விடுவதோடு, எண்ணெயில் உள்ள கொழுப்பும் பல்வேறு பிரச்னைகளையும் ஏற்படுத்திவிடும்!'' - எச்சரிக்கையோடு ஆரம்பிக்கிறார் உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தி. ''உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கிழங்குகளைச் சேர்த்துகொண்டால் நல்ல பலன் கிடைக்கும். கடின உழைப்பாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வளரும் குழந்தைகள் ஆகியோருக்குக் கிழங்குகள் நல்ல வலுவைத் தரும். கருணைக் கிழங்கு நீங்கலாக ஏனைய கிழங்குகள் அனைத்துமே வாயுப் பிரச்னையையும் வாத நோயையும் ஏற்படுத்த வல்லவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே, கிழங்குகளை அளவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். வாயுப் பிரச்னை, வாத நோய் மற்றும் மூலநோய்ப் பிரச்னை இருப்பவர்கள் கிழங்கு வகைகளைக் குறைத்துக்கொள்வது நல்லது'' என்றவர் கிழங்கு வகைகளில் இருக்கும் சத்துக்களைப் பட்டியலிட்டார்.
Post a Comment