தெம்பா சாப்பிடுங்க! சமையல் குறிப்புகள்
தெம்பா சாப்பிடுங்க! தினைத் தேன் உருண்டை: தினையைப் பொன்னிறத்தில் வறுத்து, மாவாக்கி அதில் கருப்பட்டி அல்லது வெல்லப்பாகு, கொஞ்சம் தேன...

கேழ்வரகுக் கூழ்: கேழ்வரகை முந்தைய நாளே முளைகட்டிவைத்து, வெயிலில் உலர்த்தி, அரைத்து மாவாக்கி, அந்த மாவைத் தண்ணீரில் கொதிக்கவைத்து இறக்கி, மோர் சேர்த்து சின்ன வெங்காயம், மல்லித் தழை தூவினால் ஊட்டச்சத்து மிக்க காலை உணவு தயார்.
கொள்ளு ரசம்: கொள்ளைக் குழைய வேகவைத்து வடிகட்டினால் கிடைக்கும் நீரில், தக்காளி, மிளகு, சீரகம் சேர்த்து வைக்கப்படும் ரசம். கொழுப்பைக் கரைக்கும்.
கறிவேப்பிலைப் பழரசம்: கறிவேப்பிலையுடன் தேங்காய் சேர்த்து, இரண்டையும் அரைத்து எடுத்த பாலில் கருப்பட்டி, ஏலக்காய் சேர்த்தால், சத்து மிக்க உடனடி பானம் தயார்.
Post a Comment