புதினா ரசம்--சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள்... புதினா இலைகள் – ஒரு கப் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் ...
https://pettagum.blogspot.com/2012/06/blog-post_8797.html
புதினா இலைகள் – ஒரு கப்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
தக்காளி சாறு – 2 கப்
கடுகு –அரை ஸ்பூன்
எண்ணெய் –2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு
செய்முறை:
•
புதினா இலைகளை நன்கு கழுவி தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி அந்த நீரில்
உப்பு, மிளகாய்தூள், சீரகத்தூள் பெருங்காயத் தூள், தக்காளி சாறு சேர்த்து
இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும்.
• கடாயில்
எண்ணெயில் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை கொதிக்கும்
ரசத்தில் கொட்டவும். கடைசியாக கொத்தமல்லி தழை, புதினா இலைகள் தூவி
பரிமாறவும்..
• சுவையான இந்த ரசம் ஆரோக்கியமானதாகும்,
Post a Comment