நகைகளை பாதுகாப்பது எப்படி? - உபயோகமான தகவல்கள்
தங்க நகைகளை, தனித்தனிப் பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒன்றோடு ஒன்றாக பலவற்றை சேர்த்தால், நகைகளில் கீறல் ஏற்படும், கலரும் மங்கி...

* சிறிதளவு பற்பசை அல்லது தரமான பல்பொடியை, பழைய பிரஷில் வைத்து, நகைகளை சுத்தம் செய்யலாம்.
* சோப்பு தூளும், மஞ்சள் தூளும் கலந்த நீரில், நகைகளை போட்டு, ஐந்து நிமிடம் சூடாக்கி விட்டு கழுவினால், நகைகள், "பளிச்'
* கல் பதித்த நகைகளை, சுடுநீரில் போட்டு விடக் கூடாது. இவ்வாறு செய்தால், கற்களுக்கு சேதம் ஏற்பட்டு, அதன் கவர்ச்சி தன்மை நீங்கி விடும்.
* காஸ்டிங் சோடா அல்லது உயர்ந்த வகை ஷாம்புவை பயன்படுத்தி, முத்து, பவளம், கற்கள் பதித்த நகைகளை சுத்தப்படுத்தலாம்.
* முத்து, வைடூரிய நகைகள் மென்மையானவை. அவற்றை பிளாஸ்டிக் பையில் வைக்கக் கூடாது. வெல்வெட் அல்லது மிருதுவான துணியில் பொதிந்து வைக்க வேண்டும்.
* வியர்வை, சென்ட் போன்றவை, இந்த வகை நகைகளில் படுவது நல்லதல்ல. விசேஷ நாட்களில் மட்டுமே, இந்த வகையான நகைகளை அணிய வேண்டும்.
* வைரம் பதித்த நகைகளை, பற்பசை மற்றும் மிருதுவான பிரஷ் பயன்படுத்தி சுத்தம் செய்யவும்.
* கல் பதித்த நகைகளை மிகக் கவனமாக பயன்படுத்த வேண்டும். கல் பதித்த அணிகலன்களை அணியும்போது, மெத்தைகளில் அல்லது மிருதுவான விரிப்புகளின் மீது அமர்ந்து கொள்வது நல்லது. ஏனெனில், அணியும் போது, கை தவறி கீழே விழுந்தால், கற்கள் உடைந்து விடும்.
* கல் நகைகளை அதற்குரிய பெட்டிகளில், தனித்தனியாக அடுக்கி வைக்கவும்.
* கம்மல், மூக்குத்திகளை, குளியல் அறை, வாஷ் பேசின் போன்றவற்றின் அருகில் நின்று அணிய கூடாது. கை தவறினால் அவை கழிவு ஓடையிலோ, தண்ணீரிலோ மூழ்கி விடும்.
Post a Comment