ரெக்கரிங் டெபாசிட்: நடுத்தர மக்களின் உண்டியல்!--உபயோகமான தகவல்கள்
ரெக்கரிங் டெபாசிட்: நடுத்தர மக்களின் உண்டியல்! ஆர்.டி. - எத்தனையோ முதலீடுகள் வந்த பின்பும் சிறு முதலீட்டாளர்கள் தேடிச் சென்று பணம் ச...

வங்கியில் ஆர்.டி. கட்டிவரும் சமயத்தில் ஒரு மாதம் கட்டாமல் போனால், அடுத்த மாதம் 100 ரூபாய்க்கு 1.50-2.00 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். ஆர்.டி. முதிர்வுக்கு முன்னதாகவே அதிலிருந்து விலக விரும்பினால், நீங்கள் ஆர்.டி. ஆரம்பித்தபோது இருந்த வட்டி விகிதத்திலிருந்து 1% வட்டி கழிக்கப்படும்.
வங்கி ஆர்.டி-யின் மூலம் கடன் பெற்றுக் கொள்ளலாம். மூன்றாண்டுகளுக்குள் ஆர்.டி இருக்குமெனில் 90%-மும், மூன்றாண்டுகளுக்கு மேல் என்றால் 70%-மும் கடன் கிடைக்கும். இதற்கான வட்டி விகிதம் 10.75%. ஒவ்வொரு மாதமும் ஆர்.டி. கட்டும்போது கடனையும் வட்டியோடு சேர்த்து கட்டலாம். அப்படி கட்டவில்லை எனில் ஆர்.டி. முதிர்வின்போது அசலும், வட்டியும் பிடித்தம் செய்துகொண்டு மீதித் தொகை மட்டுமே தரப்படும்'' என்றார்கள் வங்கித் துறை அதிகாரிகள்.
''அஞ்சலக ஆர்.டி.யில் குறைந்தபட்சம் மாதம் பத்து ரூபாயிலிருந்து அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டு மானாலும் சேமிக்கலாம். இதற்கு 8.4% வட்டி தரப்படுகிறது. காலாண்டு அடிப்படையில் வட்டி கணக்கிடுகிறார்கள். ஆர்.டி. ஆரம்பிக்கும்போது என்ன வட்டி விகிதமோ, அதே வட்டி விகிதம்தான் ஆர்.டி. முடியும்போதும் தரப்படும். அஞ்சலக ஆர்.டி-ன் குறைந்த பட்ச கால அளவே ஐந்து ஆண்டுகள்.
இடையில் விலகினால்..?
மாதம் 50 ரூபாய் ஆர்.டி. போடுபவர்களுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்கும். 15 மாதம் முதலீடு செய்தால், பதினாறாவது மாதத்தில் அவருக்கு ஏதாவது அசம் பாவிதம் நடந்தால், ஐந்தாண்டு களில் அவர் கட்ட நினைத்த 3,000 ரூபாய் அவரது குடும்பத் திற்கு கிடைக்கும்'' என்றார் அனிதாபட்.
அஞ்சலகமோ, வங்கியோ உங்கள் தேவைக்கு ஏற்ப ஆர்.டி. முதலீட்டை ஆரம்பியுங்கள்!
Post a Comment