இந்த டிப்ஸைப் படிச்சா வெயில வின் பண்ணிடலாம்!--வீட்டுக்குறிப்புக்கள்

இந்த டிப்ஸைப் படிச்சா வெயில வின் பண்ணிடலாம்! நீர்க்கடுப்பு நீங்க வெயிலால் அதிகம் பாதிக்கப்படுவது தோல்தான். அதனால் பால் பொருட்கள், சிவ...

இந்த டிப்ஸைப் படிச்சா வெயில வின் பண்ணிடலாம்!

நீர்க்கடுப்பு நீங்க

வெயிலால் அதிகம் பாதிக்கப்படுவது தோல்தான். அதனால் பால் பொருட்கள், சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற பழங்கள், கீரைகள், காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடவும்.

குளிப்பதற்கு முன் சிறிது பயத்தமாவை உடலில் பூசி ஊறியதும் குளித்தால் குளிர்ச்சியாக இருக்கும்.

குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வெயிலுக்கு இதமாக இருப்பதுபோல இருந்தாலும் தாகத்தை முழுவதுமாக போக்குவது தண்ணீர் மட்டும்தான். பழச்சாறு தயாரிக்கும்போது சர்க்கரை சேர்க்கக்கூடாது.


சூடு தணிக்கும் சுரைக்காய்

சுரைக்காய் வெயிலுக்கு நல்லது. ஒரு சுரைக்காய் ஒரு குடம் நீருக்கு சமம். சுரைக்காயை சாம்பார் அல்லது கூட்டு வைத்து சாப்பிடலாம். அதேபோல சௌசௌ, முள்ளங்கி, பூசணி ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வெயில் காலத்தில் அனைவரையும் படுத்துவது நீர்க்கடுப்பு. இதைத் தவிர்க்க வயிற்றில் விளக்கெண்ணையை தடவலாம். புளியங்கொட்டையை வறுத்துச் சாப்பிட்டாலும் சூடு மட்டுப்படும்.

சூட்டுக்கட்டிகள் மீது திருநீற்றுப்பச்சிலையை அரைத்து பற்றுப்போட்டால் கட்டிகள் விரைவில் குணமாகும்.

வெட்டிவேரை ஜன்னலில் செருகி வைத்து அதில் தண்ணீர் தெளித்தால், வீட்டுக்குள் நுழையும் காற்று குளிர்ச்சியாக இருக்கும். வெட்டிவேரால் பின்னப்பட்ட ஜன்னல் திரைகளையும் பயன்படுத்தலாம்.


புளிக்காத மாவு

தர்பூசணி சாறுடன் சிறிது எலுமிச்சை சாறு, கசக்கிய புதினா தழை, சர்க்கரை சேர்த்து குடித்தால் வெயிலால் ஏற்படும் உடல் சூடு தணியும்.
தர்பூசணியில் இனிப்பு சர்பத்தான் செய்யவேண்டும் என்பதில்லை. பழத்தை தோல் சீவி மிக்ஸியில் போட்டு புளிக்காத மோர்விட்டு மிளகு, சீரகம், தட்டிப்போட்டு குடித்துப் பாருங்கள். சம்மர் முழுக்க இதை விடமாட்டீர்கள்.

தர்பூசணியின் வெள்ளைப் பகுதியை கூட்டு செய்யலாம். இல்லையெனில் தர்பூசணி தோலை மெல்லியதாக சீவிவிட்டு, ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்துவிட்டு துருவினால் எளிதாக துருவ வரும். இதில் தயிர்ப்பச்சடி செய்யலாம்.
நுங்குடன் சர்க்கரை அல்லது கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து பொடியாக நறுக்கிய மாம்பழம், வாழைப்பழம் கலந்து வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்குக் கொடுத்தால் நிச்சயம் உங்களுக்கு பாராட்டு மழைதான்!

கேரட்டை சதுரமாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும்போது சிறிது கேரட், சர்க்கரை, ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் அரைத்து பால் சேர்த்ஷேக் அசத்தல் சுவையுடன் அருமையான மில்க் தயார்.

இரண்டு தக்காளி பழங்களை மிக்ஸியில் விழுதாக அரைத்து நீர் மோரில் கலந்து ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து குடித்து வந்தால் களைப்பும் சோர்வும் பறந்துபோகும்.

ஒரு கப் ஜவ்வரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்தால் நன்றாக வெந்துவிடும். அதில் உப்பு, மோர் ஊற்றி கரைத்து குடித்தால் வயிற்று வலியும் உடல் சூடும் தணியும்.
கோடையில் தோசை மாவு சீக்கிரம் புளித்துவிடும். இதைத் தவிர்க்க அரிசி, உளுந்தை கழுவி ஊறவைக்கும்போது ஒரு மணிநேரத்தில் அந்தத் தண்ணீரை வடித்துவிட்டு வேறு தண்ணீரை ஊற்றவும். இப்படி இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் மாற்றினால் மாவு சீக்கிரம் புளிக்காது.

Related

வீட்டுக்குறிப்புக்கள் 6837867053580918222

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item