கால்களுக்கான எளிய பயிற்சி--உடற்பயிற்சி
தற்போதுள்ள கால கட்டத்தில் உடல் உழைப்பு இல்லாததால் 30 வயதுக்கு மேல் கால் மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள். கால் வலியால் அவதிபடுப...
https://pettagum.blogspot.com/2012/06/blog-post_1802.html
தற்போதுள்ள கால கட்டத்தில் உடல் உழைப்பு இல்லாததால் 30
வயதுக்கு மேல் கால் மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள். கால்
வலியால் அவதிபடுபவர்களுக்கு எளிய உடற்பயிற்சி இதே...சுமார் ஆறு அங்குலம்
உயரமுள்ள சதுரமான ஒரு பலகையில் மேல் இரு கால்களின் முன் பாதங்களை ஊன்றி,
குதிகால்களைத் தரையில் படிய வைத்துக் கொள்ளுங்கள் .
முழங்கால்களை
மடக்காமல் விறைப்பாக வைத்துக் கொள்ளுங்கள் . கைகளை உயரே தூக்கி ஏதாவது
ஒன்றை ஆதரவாகப் பற்றிக் கொண்டு (பிடித்துக்கொண்டு ) கால்களை விறைப்பாக
வைத்துக் கொண்டு (மடக்காமல் ) குதிகால்களை மட்டும் பலகைக்கு மேல் வருமாறு
கூடுமானவரை உயர்த்த வேண்டும். பிறகு முன்போல் குதிகாலை தரைமட்டத்திற்கு
தாழ்த்த வேண்டும்.
குதிகால்களை உயர்த்தும் பொழுது
சுவாசத்தை உள்ளுக்குள் இழுக்க வேண்டும் தாழ்த்தும் பொழுது சுவாசத்தை வெளியே
விட்டும் கெண்டைத் தசைகள் சிறிது களைப்பு அடையும் வரை செய்தல் வேண்டும்.
இந்த பயிற்சி முடிந்ததும் ஒருகாலை மட்டும் முன்பு சொன்னது போல் பலகையில்
நுனிகாலை (முன்பாகம் )ஊன்றிக் கொண்டு மற்றொரு காலை தரையில் படாமல்
உயர்த்திக் கொள்ள வேண்டும்.
பலகையில் ஊன்றிய காலை
மட்டும் குதிகாலை உயர்த்தி பின்பு தரை மட்டத்திற்கு தாழ்த்த வேண்டும்.
பிறகு கால் மாத்தி செய்ய வேண்டும் . இந்த இரண்டு பயிற்சியாலும் கெண்டைக்
கால்கள் உருண்டு திரண்டு அழகாக மாறும். கால் வலி நீங்கி கால்கள் பலமும்
பெறும் .
Post a Comment