எடுத்துவிட்டீர்களா ரெஸ்டோர் பாலிசி?---இன்ஷூரன்ஸ்
எடுத்துவிட்டீர்களா ரெஸ்டோர் பாலிசி? வி யாதிகளும் விபத்துகளும் எப்படி அதிகமாகிவிட்டனவோ... அதேபோல்தான் ம...

உதாரணத்துக்கு மூன்று லட்ச ரூபாய்க்கு ஒரு ஃப்ளோட்டர் ஹெல்த் பாலிசி எடுக்கிறீர்கள். திடீரெனக் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்குச் சிகிச்சைக்கான தேவை ஏற்பட்டு, உங்களின் பாலிசி தொகை முழுவதும் செலவாகிவிடுகிறது. அடுத்த சில மாதங்களில் இன்னொரு குடும்ப உறுப்பினருக்கு ஏதாவது சிகிச்சை தேவைப்பட்டால், காப்பீட்டு நிறுவனத்தை நாட முடியாது. வேறு வழி இல்லாமல், நம் கைக்காசைத்தான் செலவு செய்ய வேண்டி இருக்கும். இல்லை என்றால், 'சூப்பர் டாப் அப்’ என்று வேறு வகையான பாலிசிகள் எடுக்கலாம். ஆனால், அவற்றின் பிரீமியம் அதிகமாக இருக்கும். இந்தப் பிரச்னையைச் சமாளிக்கத்தான் காப்பீட்டு நிறுவனங்கள் ரெஸ்டோர் பாலிசி என்ற புதிய வகை பாலிசிகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றன.
சாதாரணமாக இரண்டு பெரியவர்களுக்கு (36 முதல் 45 வயதுக்குள்) மூன்று லட்ச ரூபாய்க்கு, சாதாரண மருத்துவக் காப்பீடு பாலிசிகளை எடுத்தால், சுமார் 5,000 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கும் (இந்தத் தொகை நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்). அதுவே நீங்கள் ரெஸ்டோர் பாலிசி எடுத்தால், சுமார் 2,000 ரூபாய் அதிகமாகச் செலுத்தினால் போதும்.
கூடுதலாக இன்னும் ஒரு மூன்று லட்ச ரூபாய்க்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். இதுவே இரண்டு பெரியவர்களுக்கு (36 முதல் 45 வயதுக்குள்) மொத்தமாக ஆறு லட்ச ரூபாய்க்குச் சாதாரண மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளை எடுத்தால், அதிகப்படியாக 9,000-க்கும் மேல் பிரீமியமாகச் செலுத்த வேண்டி இருக்கும். இதைப் பார்க்கும்போது சூப்பர் டாப் அப் பாலிசி எடுத்தாலே போதும் என்று நினைக்கலாம். சூப்பர் டாப் அப் பாலிசி பிரீமியம் விலை குறைவுதான். ஆனால், அடிப்படையாக ஒரு பாலிசி எடுத்த பிறகுதான் சூப்பர் டாப் அப் பாலிசி எடுக்க முடியும். இந்த இரண்டையும் சேர்த்தால், பாலிசி பிரீமியம் குறைந்தது 1000 ரூபாய்க்கு மேல் அதிகமாக இருக்கும். ஆனால், ரெஸ்டோர் பாலிசி குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் கொடுக்கிறது.
புதிதாக பாலிசி எடுக்க நினைப்பவர்கள், இதைப் பரிசீலனை செய்யலாம்.
Post a Comment