ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தலின் ரகசியம்---அழகு குறிப்புகள்
ஏன் சில பெண்களின் கூந்தல் பளபளப்பாகவும், அழகாகவும் இருக்கின்றது? ஆனால் மற்றவர்களுக்கோ என்ன தான் மணிக்கணக்காக நேரத்தையும் அத்தோடு பணத்தை...

1. குளிப்பதற்கு முன்பு கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும்
2. அதிக அளவில் ஷாம்பூ உபயோகிப்பதை தவிர்க்கவும். அதிக நுரை வந்தால் தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம்.
3.ஷாம்பூ தடவிய முடியை நன்றாக அலசவும்.
4. ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது மிகவும் அவசியமாகும்.
கண்டிஷரை முடியின் வேர்களைவிட நுணிப் பாகத்தில் தடவுவது நல்லது.
5.கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலசவும்.
6.ஈரமான கூந்தலை வேகமாக துவட்டுவதை தவிருங்கள். அதற்கு பதிலாக 5
நிமிடங்களுக்கு உங்கள் கூந்தலை டவலில் சுற்றி வையுங்கள்.
7.முடி முழுவதாக உலர்வதற்கு முன்பே உங்கள் விரல்களால் சிக்குகளை நீக்கவும்.
8.ஹேர் ட்ரையரை அடிக்கடி உபயோகிப்பதைத் தவிர்க்கவும். அப்படி உபயோகிக்கும் நேரத்தில் ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதைத் தவிர்க்கவும்.
9. நீங்கள் உபயோகிக்கும் சீப்புகளை அடிக்கடி சோப்புப் போட்டு நன்றாகக் கழுவவும். அதில் அழுக்கிருந்தால் உங்கள் முடியின் பளப்பளப்பை மங்கச் செய்யும்.
10.முடியை சீவுவதற்கு அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும்.
11.முடியின் நுனிப்பாகத்தை விட, வேர்களில் ஹேர் ட்ரையரை நன்றாகக் காட்டுங்கள். நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக் கூடும்.
12. உங்கள் தலையை நன்றாக மஸாஜ் செய்யுங்கள். கைகளால், முடியைதலையில் தேய்ப்பதற்கு பெயர் மஸாஜ் அல்ல! உங்கள் விரல் நுனிகளால் தலையை மெதுவாக தேய்த்துவிடவும். இது உங்கள் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் உங்கள் முடி நீண்டதாகவும்,ஆரோக்கியமாகவும் வளரும்.
13. நன்றாக மசித்த வாழைப்பழத்தை 15 நிமிடங்கள் முடியில் பூசி வைத்து பின்பு ஷாம்பூவால் அதை கழுவி விடவும். இது உலர்ந்த கூந்தல் இருப்பவருக்கு மிகவும் நல்லது.
14.ஒரு முட்டை, ஒரு வெள்ளரிக்காய், மற்றும் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் இவற்றை நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொண்டு, கூந்தலில் 10நிமிடங்களுக்கு தடவி வைக்கவும். பிறகு முடியைக் கழுவவும். இது உங்கள் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்கும்.
Post a Comment