கருணைக்கிழங்கில் கொத்சு செய்யலாமா? --சமையல் குறிப்புகள்
கருணைக்கிழங்கில் கொத்சு செய்யலாமா? கருணைக்கிழங்கு என்ற...

தேவை:
கருணைக் கிழங்கு 100 அல்லது 150 கிராம்
இஞ்சி சிறிது
புளி சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பூண்டு - தேவையானால் 3 பல்
துவரம்பருப்பு - 2 மேஜைக்கரண்டி
சீரகம் 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி _ 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
வென்ங்காயம் - 5
மன்சள் தூள்.
செய்முறை:
கௌணைக்கிழங்கை தோலை நீக்கி வேகவைத்து நன்றாக மசிக்கவும். தனியாக துவரம்பருப்பு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து தூளாக்கவும். பாத்திரத்தில் 3 கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்புப் போட்டு நறுக்கின வெங்காயம், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். மசித்த கிழங்கை அதோடு சேர்த்து கிளறி, புளி கரைசலை ஊற்றி சாம்பார் பொடி, துள் செய்த பொடி, உப்பு, மஞ்சள் சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கி வைக்கவும்.
கருணைக்கிழங்கு கொத்சு ரெடி.
Post a Comment