சமையல் குறிப்புகள்--வீட்டுக்குறிப்புக்கள்!
சமையல் குறிப்புகள் புதுப் புது சமையல்களை எப்படி செய்வது என்று சொல்வதோடு அல்லாமல் சில குறிப்புகளையும் அளிக்க வேண்டு...

புதுப் புது சமையல்களை எப்படி செய்வது என்று சொல்வதோடு அல்லாமல் சில குறிப்புகளையும் அளிக்க வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் இந்த சமையல் குறிப்புகள்
கேக் தயாரிக்கும்போது முந்திரி, பாதாம் போன்றவைகளை பாலில் ஊற வைத்த பின்னர் சேர்த்தால் அவை கேக்கிலிருந்து கீழே விழாது.
கீரையை சமைக்கும் போது சிறிது சர்க்கரையை சேர்த்தால் சத்தும் போகாது. நிறமும் மாறாது.
பருப்பு வேக வைக்கும்போது ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளிப் போடவும். பருப்பு சீக்கிரம் வெந்து விடும்.
குழம்பில் உப்பு கூடிவிட்டால் சிறு வாழைத்தண்டு அல்லது உருளைக்கிழங்கு அளவிற்கு சாதத்தை துணியில் கட்டிப் போட்டு குழம்பு கொதித்ததும் எடுத்துவிடவும்.
உருளைகிழங்கு வாங்கும்போது பச்சையாக இல்லாமல் பார்த்து வாங்கவும்.
உருளைக் கிழங்கு கெட்டியாகத் தோல் உரிந்திருந்தால் அது நல்ல உருளைக்கிழங்கு.
வாழைக்காய் உணவில் சேரும்பொழுது மிளகு, சீரகம் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் வாயு தொல்லை இருக்காது.
இனிப்புகள் செய்யும் போது நெய்க்கு பதிலாக வெண்ணெய் சேர்த்துக் கொண்டால் மிருது தன்மை அதிகரிக்கும்.
Post a Comment