லைம் - பார்லி எனர்ஜைசர்--சமையல் குறிப்புகள்,
பார்லி - 100 கிராம், எலுமிச்சைசாறு - 100 மி.லி., மாங்காய்இஞ்சி - 50 கிராம், சர்க்கரை - 200 கிராம், தண்ணீர் - 50 மி.லி. பார்லியை தண்ணீர் வ...

எலுமிச்சைசாறு - 100 மி.லி.,
மாங்காய்இஞ்சி - 50 கிராம்,
சர்க்கரை - 200 கிராம்,
தண்ணீர் - 50 மி.லி.
பார்லியை தண்ணீர் விட்டு வேக வைத்து, ஆறியதும் மிக்சியில் அரைத்து, வடிகட்டித் தனியே வைக்கவும். சர்க்கரையில் தண்ணீர் விட்டுக் கரைந்து, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து வைக்கவும்.
அதில் வடிகட்டிய பார்லி நீர், தோல் நீக்கி அரைத்த மாங்காய் இஞ்சி, எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். சர்க்கரை வேண்டாம் என்போர், தேன் சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் கலவையில் சிறிதளவு எடுத்து தண்ணீர் அல்லது சோடா கலந்து பரிமாறவும்.
Post a Comment