எதை எப்போது சேர்க்கலாம்? --வீட்டுக்குறிப்புக்கள்,
எதை எப்போது சேர்க்கலாம்? இங்கு அளிக்கப்படும் சமையல் குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம...

இங்கு அளிக்கப்படும் சமையல் குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்.
கோழிக் கறியில் மஞ்சள் பொடி தூவி நன்கு கிளறி 10 நிமிடம் கழித்து நமக்குத் தேவையான அளவிற்கு நறுக்கினால் மாமிசத்திலிருந்து வரும் துர் நாற்றம் போகும். கிருமிகள் அகலும்.
கேக் தயாரிக்கும்போது முந்திரி, பாதாம் போன்றவைகளை பாலில் ஊற வைத்த பின்னர் சேர்த்தால் அவை கேக்கிலிருந்து விழாது.
கடுகு, ஏலக்காய், சீரகம், கிராம்பு போன்றவற்றை அதிகமாக சேர்த்தால் அதன் சுவைதான் கூடுதலாக தெரியும். எனவே இவற்றை அளவாகப் பயன்படுத்தவும்.
கீரையை சமைக்கும் போது சிறிது சர்க்கரையை சேருங்கள். சத்தும் போகாது. நிறமும் மாறாது. குழந்தைகளுக்கும் பிடிக்கும்.
மசாலா அரைக்கும் போது முதலில் காய்ந்த மிளகாயைத் தனியாக வைத்து மசித்துக் கொண்டு பிறகே மற்ற பொருள்களைச் சேர்த்து அரைக்க வேண்டும். இல்லையென்றால் மிளகாய் திப்பித் திப்பியாக இருக்கும். உடலுக்கும் நல்லதல்ல.
சூப்பில் உப்பு அதிகமாகிவிட்டால் உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி போடுங்கள். சில நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்னர் உருளைக் கிழங்கை நீக்கிவிட்டு சூப்பை பரிமாறுங்கள்.
பன்னீர் கடினமாகிவிட்டால், மீண்டும் மிருதுவாக மாற்ற சிறிது நேரம் வென்னீரில் வைக்கலாம்.
Post a Comment