பிள்ளைக ராத்திரில பல்ல கடிக்குதா...பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம் பிள்ளைக ராத்திரில பல்ல கடிக்குதா...              வீட்டுக்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில், பந்தலில் படர்ந்திருந்த அவரைக...

பாட்டி வைத்தியம்
பிள்ளைக ராத்திரில பல்ல கடிக்குதா...


             வீட்டுக்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில், பந்தலில் படர்ந்திருந்த அவரைக் கொடியில், பூச்சி விழுந்திருக்கிறதா என்று ஆய்வு செய்து கொண்டிருந்தாள் பாட்டி.

வயல் காட்டில் விவசாயம் செய்வதைப் போலவே, வீட்டுத் தோட்டத்தில் பயிர்க்குழி போடுவதிலும் பாட்டிக்கு அலாதி ஆர்வம்.

கிளர்த்திப் பண்படுத்தப்பட்ட மண்ணில், அவரை, சுரை, புடலை, பாகை, பீர்க்கன் என, அனைத்துவகைப் பயிர்க் கொடிகளுக்கான விதைகளையும், வெளியூர்களில் இருந்து வாங்கிவரச் செய்து, ஆடி பிறந்தவுடன் தவறாமல் பதித்து வைப்பாள்.

மண்ணைக் கீறிக் கொண்டு, ஒன்று, இரண்டு என பச்சைப் பசுந்தளிர்களாக, பிறந்த குழந்தையின் பிஞ்சு விரல்களைப்போல் ஒவ்வொன்றாக அவை முளைவிட்டு வெளிவரும் அழகை, நாள்தோறும் பார்த்துப் பூரிப்பாள்.

பின்னர் அந்தக் கொடிகள் ஒவ்வொன்றும் வளர்ந்து, படர்ந்து, பூத்துக் காய்க்கும் வரை அவள் கவனிப்பு ஓயாது.

இப்போதெல்லாம் பயிர்க்குழி போடும் பழக்கம் கிராமங்களிலேயே குறைந்துவிட்டது.

ஆனால் பாட்டி அதனை விடுவதில்லை. வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், கீரைகள், கருவேப்பிலை வரை தோட்டத்திலிருந்தே கிடைத்துவிடும்.

அவரைக் கொடியில் ஒன்றிரண்டு இலைகள் பழுத்திருந்ததைப் பார்த்த பாட்டிக்கு ஒருவேளை பூச்சி எதுவும் விழுந்து விட்டதோ என அச்சம்.

மற்ற கொடிகளுக்கும் அது தொற்றிவிடுமே என்ற அச்சம். அவரையை ஆய்வு செய்த பின்னர், பூச்சி இல்லை என்பதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கும், வாசலில் யாரோ அழைப்பதற்கும் சரியாக இருந்தது.

அவசரமாக வந்து எட்டிப்பார்த்த பாட்டி, அங்கு வசந்தா தனது மகளுடன் வந்து நிற்பதைப் பார்த்தாள்.

“வாடியம்மா வசந்தா... என்ன மகளையும் கையோட கூட்டிக்கிட்டு வந்திருக்கே... பாட்டி மேல அவ்வளவு பாசமாக்கும்....”
பாட்டியின் செல்லக் கோபம் கலந்த வரவேற்புக்குப் பின் வீட்டிற்குள் வந்து அமர்ந்த வசந்தா, மகளைக் கவலையுடன் பார்த்தாள்.

“எங்க பாட்டி... அப்பப்ப உன்ன வந்து பார்க்கணும்னுதான் நினைக்கிறது. எங்கே நேரம் ஒழியுது. இப்ப இவ என்னடான்னா ராத்திரில தூங்கும் போது நரநரன்னு பல்லைக் கடிச்சுக்கிட்டே இருக்கா.. எழுப்புனா அப்போதைக்கு விட்டுட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் கடிக்க ஆரம்பிச்சுடுறா... அது மட்டுமில்ல படுக்கையிலேயே சிறுநீரும் கழிச்சுடுறா... இப்படி இருந்தா எபபுடி இவளுக்கு கல்யாணம் காச்சி பேசுறது... ஒண்ணுமே புரியலை... நீ தான் பாட்டி இதுக்கு ஏதாவது வழி சொல்லணும்..”

வசந்தா வருத்தத்துடன் சொன்ன வற்றையெல்லாம் பாட்டி கவனமாகக் கேட்டாள்.

“இதெல்லாம் பயப்படற அளவுக்கு பெரிய நோய் இல்லைடி அம்மா... நிறைய வயசுப் பொண்ணுகளுக்கு இந்த மாதிரிப் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்... மன ரீதியான காரணம்னு சிலர் சொல்லுவாங்க... அதுவும் இருக்கலாம்... ஆனா உடல் ரீதியாவே சில குறைகள் இருந்தால் தான் இது மாதிரிப் பிரச்சனைகள் வரும்... சத்துக்குறைவு, போதிய சாப்பாடு இல்லாதது, பசியில்லாம இருக்குறது, வெளிப்படுத்த முடியாத ஆத்திரம்... இப்படிப் பல காரணங்கள் இதுக்கு உண்டு... திருப்தியான உணவு, நிம்மதியான தூக்கம், பசியைத் தூண்டுமளவு செரிமானம்... இது மூணும் ஒழுங்கா இருந்தா இதெல்லாம் வராது... நான் சொல்றத கவனமா கேட்டுக்க.

அரைக்கீரை        - 1 கைப்பிடி
வல்லாரை        - 1 கைப்பிடி
மணத்தக்காளிக் கீரை    - 1 கைப்பிடி
சீரகம்        - 1 ஸ்பூன்
சோம்பு        - 1 ஸ்பூன்
மிளகு        - 5
பூண்டுப்பல்        - 3
சின்ன வெங்காயம்    - 3
கறிவேப்பிலை    - 1 இணுக்கு
கொத்தமல்லி    - 1 கொத்து
இவைகள எடுத்து ஒண்ணாச் சேத்து சூப் மாதிரி செஞ்சு நாளைக்கு 2 வேளைக்கு குடுத்துக்கிட்டு வா.

அதோட, தானிய வகைகளயும், கீரைகளையும் தெனமும் சாப்பாட்டுல சேத்துக் கொடு.  அதுலயும் உலர்ந்த பழ வகைகள கொடு.  முக்கியமா காலை நேர சாப்பாட்ட மறக்காமக் கொடு.

படிக்கிற புள்ளைகள அதச்செய்யி இதச்செய்யின்னு தொந்தரவு பண்ணாத.  அதுவே பிள்ளைகளுக்கு மன அழுத்தத்த கொடுக்கும்.  அப்புறம், அதிக நேரம் கண்முழிச்சி டிவி பாக்க விடாத.  இது உனக்கும்தான்..
பாட்டி சொன்ன அறிவுரைகளைக் கேட்டுக்கொண்ட வசந்தா, மகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து விடை பெற்றாள்.

Related

பாட்டி வைத்தியம் 2036978268107313849

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item