உளுவா கஞ்சி (சுகப்பிரசவத்திற்கு)---சமையல் குறிப்புகள்
தே.பொருட்கள் ************************** அரிசி = கால் கப் வெந்தயம் = ஒரு மேசை கரண்டி பனைவெல்லம் = ஒரு பெரிய துண்டு தேங்காய் பால் = அரை ம...

**************************
அரிசி = கால் கப்
வெந்தயம் = ஒரு மேசை கரண்டி
பனைவெல்லம் = ஒரு பெரிய துண்டு
தேங்காய் பால் = அரை முறி
முட்டை = ஒன்று
பூண்டு = ஒரு முழு பூண்டு
செய்முறை
**************************
1.அரிசியை பொடித்து அத்துடன் வெந்தயம் சேர்த்து நன்கு ஊறவைக்கவும்.
2.தேங்காயை முதல் பால், இரண்டாம் பால் எடுத்து வைக்கவும்.
3. பூண்டு, ஊறிய அரிசி மற்றும் வெந்தயத்தை இரண்டாம் தேங்காய் பால் ஊற்றி வேக வைக்கவும்.
4. நன்கு வேகவைத்து அதில் வெல்லத்தை இளக்கி வடிக்கட்டி சேர்த்து கிளறவும்.
5.முதல் தேங்காய் பாலில் முட்டையை நன்கு கலக்கி கொண்டு வெந்து கொண்டிருக்கும் அரிசி கலவையோடு சேர்த்து கட்டி பிடிக்கமல் நன்கு கிளறவும்.
நிறை மாத கர்பிணி பெணகளுக்கு சுகப்பிரசம் ஆக இந்த உளுவா கஞ்சியை செய்து கொடுக்கலாம்
குறிப்பு:
இது கர்பிணி பெண்களுக்கு பிள்ளை பெறும் நேரத்தில் கொடுக்கவும். உடல் சூட்டை தணிக்கும்.
கட்டியாக காய்ச்சினா முன்று டம்ளர் அளவிற்கு வரும், கொஞ்சம் தண்ணி மாதிரி காய்ச்சினால் ஐந்து டம்ளர் வரும்.
குளுமை உடம்பு உள்ளவர்கள் வெந்தயத்தை சிறிது குறைத்து போடவும்
இந்த கஞ்சியை கர்பிணி பெண்கள் நிறைமாததில் சாப்பிடுவதால் கர்ப்ப பை வாய் இளக்க்ம் கொடுத்து வயிற்றில் உள்ள வாயுவை கலைத்து சுகப்பிரசவம் ஏற்பட உதவும்.
உடல் சூடு மற்றும் கேஸ் பிராப்ளம் உள்ளவர்களும் இதை செய்து சாப்பிடலாம்
Post a Comment