சமையல் டிப்ஸ் !!! -- வீட்டுக்குறிப்புக்கள்,
கறிவேப்பிலை,புதினா,மல்லி இலை போன்றவைகளை துணியில் பொதிந்து 'பிரிஜ்'ஜில் வைத்தால் புத்தம் புதிது போல் இருக்கும். சோறு வடித்த நீரை பயன...

சோறு வடித்த நீரை பயன்படுத்தி,கூந்தலைக் கழுவினால் கூந்தல் 'பளிச்'சென ஆகும்
வடை மாவில் தண்ணிர் அதிகப்பட்டுவிட்டால்,அதில் சிறிதளவு நெய் சேருங்கள். மாவு இறுகிவிடும்.
மிக்ஸியை சோப் தண்ணீரால் கழுவுதற்க்கு பதில் டுத் பேஸ்ட் பயன்படுத்தி கழுவினால் நன்றாக பளிச்சிடும்
எந்த காய் போட்டு சாம்பார் செய்தாலும் அத்துடன் 2 பெரிய நெல்லிக்கய்காளையும் பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்த்தால் சுவைக் கூடும்
இளநீரில் சிறிதளவு சர்க்கரையை போட்டு அடைத்து 1 நாள் முழுவதும் வெளியில் வைத்திருங்கள்.பின்பு அதை மாவில் சேர்த்து ஆப்பம் வார்த்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
புளிசாதம்,தேங்காய் சாதம்,எலுமிச்சம் பழ சாதங்கள் செய்யும் போது சில சமயம் சாதக் கட்டிகள் அங்கங்கே தங்கிவிடும்,ஒரு கரண்டி வெண்ணெயைச் சேர்த்து கலந்து கொண்டால் சாதத்தில் கட்டிகள் இல்லாமலும்,சுவை கூடுதலாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.மணமாகவும் இருக்கும்.
விரளி மஞ்சலை விளக்கில் காட்டிச் சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உறிஞ்ச நெஞ்சு சளி,தலைவலி நீங்கும்.
ஆரஞ்சு பழத் தோலினை அரைத்து சாறுபிழிந்த அந்த சாற்றுடன் ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் பூசி ஊறவைத்து பின் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவிவர முகம் பளப்ளப்புடன் நல்ல நிறமும் கொடுக்கும்,கூடவே கரும் புள்ளிகளும் போய்விடும்
இறைச்சி கழுவிய பிறகுகைகளில் வாடை கையினை விட்டு போகாது. சுடுநீரில் எலுமிச்சையினை கலந்து கைகளை ஊற வைத்து கழுவவும்.
Post a Comment