கோடை டிப்ஸ்! உபயோகமான தகவல்கள்
கோடை டிப்ஸ்! * மெலிதான, தளர்ச்சியான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். * சோப்பை தவிர்த்து, பயத்தம் பருப்பு மாவு குளியல் செய்யலாம். * ஒரு கப்...

* சோப்பை தவிர்த்து, பயத்தம் பருப்பு மாவு குளியல் செய்யலாம்.
* ஒரு கப் தயிரில், பிஞ்சு வெள்ளரிக்காயை நறுக்கி போட்டு, கொஞ்சம் உப்பு, காரம் சேர்த்து பருகலாம்.
* காலையில் ஒரு சொம்பு நீராகாரமும், ஒரு வெங்காயமும் சாப்பிடுவது நல்லது.
* தினசரி இளநீர், மோர் என்று, ஏதாவது அருந்துவது நல்லது.
* கோடை காலத்தில், தலைக்கு எண்ணெய் தடவவும்.
* வெயிலில் தினமும் திரிவதால், சில சமயம் வயிறு வலிக்கும். ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வாயில் போட்டு, நீர் குடிக்க வேண்டும்; சரியாகி விடும்.
* மாலை நேரத்தில், வீட்டு தரையில் இரண்டு முறை தண்ணீர் தெளித்து, உலர விட வேண்டும்.
* கோடையில் வரும் வியர்குரு, கண் நோய், வேனல் கட்டி போன்றவற்றை தவிர்க்க, இளநீரில் வெந்தயம் போட்டு குடித்து வர வேண்டும்.
* நார்ச்சத்து உணவு வகைகளை சேர்த்துக் கொள்வது நல்லது.
* இளநீரில், எலுமிச்சை சாறு கலந்து அருந்துவது நல்லது.
* இளநீரில், மல்லித்தூள் அல்லது ஏலத்தூள் கலந்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.
* சிறிது வால்மிளகை எடுத்து, இளநீர் விட்டு அரைத்து நெற்றிப் பொட்டில் பூசிட, வெப்ப தலைவலி தீரும்.
* சன் ஸ்கீரின் லோஷன் பூசிக் கொண்டு வெளியில் செல்லலாம்.