குர்ஆனை உன் கரத்தில் எடு! -- பெட்டகம் சிந்தனை

குர்ஆனை உன் கரத்தில் எடு! என் அன்பான புதிய தலைமுறை முஸ்லிம் இளைஞர்களே!  உணர்ச்சி வசப் படாமல் சிந்தித்து - என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க...

குர்ஆனை உன் கரத்தில் எடு!
என் அன்பான புதிய தலைமுறை முஸ்லிம் இளைஞர்களே! 
உணர்ச்சி வசப் படாமல் சிந்தித்து - என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்! உங்களுக்கென்று ஒரு குர்ஆன் பிரதி உண்டா?
 உங்களுக்கென்று ஒரு குர்ஆன் மொழிபெயர்ப்பு உண்டா? 
குர்ஆனை - பிழையின்றி ஓதத் தெரியுமா? 
குர்ஆன் மொழிபெயர்ப்பை ஒரு தடவையாவது படித்தது உண்டா? 
குர் ஆனின் கருத்துக்களைக் குறித்து சிந்தித்துப் பார்த்ததுண்டா? 
என்ன வாழ்க்கை வாழ்கிறோம் நாம்?
 ஊரோடு ஒத்து வாழ் என்று உலகத்தை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டு உண்டு கழித்து உறங்கி விழித்து வளர்ந்து தேய்ந்து போய்விடவா நாம் முஸ்லிம் ஆனோம்? 
நவீன மனிதர்களாகிய நாமே உருவாக்கிக் கொண்ட பிரச்னைகளால் நாம் அனைவருமே மூழ்கிக் கொண்டிருக்கின்றோம். இது உண்மையா, இல்லையா? இன்றளவும் கூட தீர்வு காண இயலாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நவீன உலகின் எல்லாப் பிரச்னைகளுக்கும் குர் ஆன் மட்டுமே நடைமுறை தீர்வாகும் என்பது உனக்குத் தெரியுமா? 
என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்: மக்களின் மூட நம்பிக்கைகளை அகற்றுவது எப்படி? 
மதுவிலிருந்து மக்களை காப்பது எப்படி? 
இனப்பிரச்னைக்கு தீர்வு என்ன? எய்ட்ஸ் வராமல் தடுப்பது எப்படி? சிசுக்கொலையைத் தடுக்க வழி ஏதும் உண்டா?
 லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பது எப்படி? 
வரதட்சனைப் பிரச்னைக்கு தீர்வு உண்டா? 
வட்டியின் பிடியிலிருந்து உலகைக் காப்பது எப்படி? 
குற்றங்களைக் குறைத்திட வழி ஏதும் உண்டா? 
நீதியும் நியாயமும் செழித்திட வழி ஏதும் உண்டா? 
குர்ஆனில் மட்டுமே இவை அனைத்துக்கும் தீர்வு உண்டு! 
குர்ஆனைத் தவிர வேறு தீர்வு உண்டா? குர் ஆன் ஒரு புறம் இருக்கட்டும். இன்றைய மனிதனின் மனக்கவலையை போக்கிட வழி உண்டா?
 மன அழுத்தத்துக்கு மருந்து உண்டா? 
தனி மனித வாழ்க்கைக்கு வழி காட்டுதல் உண்டா? 
குடும்ப வாழ்க்கைக்கு வழி காட்டுதல் உண்டா? 
சுரண்டலற்ற பொருளாதாரத்துக்கு வழி காட்டுதல் உண்டா?
 தூய்மையான அரசியலுக்கு வழி காட்டுதல் உண்டா? 
இன்றைய மனிதனுக்கு - தன்னைப் பற்றி, தன் உள்ளத்தைப் பற்றி இவ்வுலகத்தில் தனது இருப்பு எதற்கு என்பது பற்றி தெரியுமா? 
அறிவு படைத்த மனிதனுக்கு அறிவியலை அணுகுவது எப்படி என்று தெரியுமா? 
தொழில் நுட்பத்தினை முறையாக எப்படி கையாள வேண்டும் என்று தெரியுமா? தன் வரலாற்றிலிருந்து பாடம் படிப்பது எப்படி என்று தெரியுமா? 
நல்லதொரு சமூக மாற்றத்தை நிகழ்த்துவது எப்படி என்பது தெரியுமா? இன்றைய மனிதனுக்கு நேர்மையாக வணிகத்தில் ஈடுபடுவது எப்படி என்று தெரியுமா? ஒரு கூட்டமைப்பை நேர்மையான முறையில் எவ்வாறு மேலாண்மை செய்திடுவது என்பது தான் தெரியுமா? 
நீதியை நிலை நிறுத்தும் சட்டம் வகுக்கத் தெரியுமா? 
குற்றங்களைக் குறைக்கத் தான் தெரியுமா? 
மேலே சொல்லப்பட்ட எல்லாப் பிரச்னைகளுக்கும் குர் ஆனில் மட்டுமே தீர்வு இருக்கிறது என்று உனக்காவது தெரியுமா? 
ஓ எனதருமை முஸ்லிம் இளைஞனே! 
குர் ஆனை உன் கரத்தில் எடு! 
முறைப்படி ஓது! மொழி பெயர்ப்பைப் படி! சிந்தித்துப் பார்! கேள்வி கேள்! கருத்துக்களைச் சேகரி! நடைமுறைப் படுத்து! 
எடுத்துச் சொல்! புரிய வை! 
மாறும் ஒரு நாள் இவ்வுலகம்!
 எல்லாப் பிரச்னைகளும் தீரும். 
தீர்க்கப் படும். உலகம் அமைதியைத் தழுவும். அப்போது தான் 'இஸ்லாம்' என்றால் 'அமைதி' என்று உலகம் ஒத்துக் கொள்ளும். அதற்கு - நீயும் நானும் முஸ்லிம்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்ற நம் அனைவரும் செய்திட வேண்டியதெல்லாம் குர் ஆனை நம் கரத்தில் ஏந்துவது ஒன்று மட்டுமே!

Related

பழமொழிகளில் மருத்துவம். -- பெட்டகம் சிந்தனை

பழமொழிகளில் மருத்துவம். மருந்துக்கு அடிமையாவதைவிட மனைவிக்கு அடிமையாகலாம்! மருந்தும் விருந்தும் மூன்று நாட்கள்! மனப்பொருத்தம் நல்ல திருமணத...

தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்!--பெட்டகம் சிந்தனை

“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103) ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழு...

நேரத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா?--பெட்டகம் சிந்தனை

நேரத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா? ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்! ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று குறைப்பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்! ஒரு வாரத்தின் மதி...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 9:25:45 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,374

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item