ஸ்பெஷல் மசாலா நூடுல்ஸ்--சமையல் குறிப்புகள்
நூடுல்ஸ் - 200 கிராம், மெலிதாக, நீளமாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ், குடமிளகாய் - தலா அரை கப், நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1, பச்சை மிள...

மெலிதாக, நீளமாக நறுக்கிய கேரட்,
பீன்ஸ், கோஸ்,
குடமிளகாய் - தலா அரை கப்,
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 4,
வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்,
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய லீக்ஸ் மற்றும் செலரி - 1 பிடி,
எண்ணெய் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப.
அரைப்பதற்கு:
இஞ்சி - 1 துண்டு,
காய்ந்த மிளகாய் - 6,
பூண்டு - 10 பல்.
அடுப்பில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, நூடுல்ஸை போட்டு, சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு வெந்தவுடன், சூடான தண்ணீரை வடிகட்டி, பிறகு குளிர்ந்த தண்ணீரில் அலசி, ஒரு பாத்திரத்தில் பரத்தி, சிறிது எண்ணெய் தடவி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் வைத்து சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். நிறம் மாறியதும், இஞ்சி-பூண்டு-மிளகாய் விழுது சேர்த்து வதக்கி, காய்கறிகளை ஒவ்வொன்றாகப் போட்டு, உப்பு, சோயா சாஸ், வினிகர் சேர்த்து மூடி வைக்கவும்.
தயாராக உள்ள நூடுல்ஸை அத்துடன் கலந்து வதக்கி, சூடாகப் பரிமாறவும். மண்டை பாரம் நீங்க ஸ்பெஷல் மசாலா நூடுல்ஸ் சாப்பிடலாம்
Post a Comment