தவ்ஹீது கம்பெனிகள்---பெட்டகம் சிந்தனை!!!

 தவ்ஹீது கம்பெனிகள் 18 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் பல நாடுகள் அடிமைப்பட்டன. முஸ்லிம்களின் கிலாபத்தான துருக்கியோ மிகவ...

 தவ்ஹீது கம்பெனிகள்

Post image for கள்ளத் தவ்ஹீது கம்பெனிகள்
18 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் பல நாடுகள் அடிமைப்பட்டன. முஸ்லிம்களின் கிலாபத்தான துருக்கியோ மிகவும் பலஹீனமான நிலையில் இருந்தது.  ஏகத்துவம் மலர்ந்த அரேபியாவிலோ, அனாச்சாரமும்,  ஜாஹிலியாவும் இஸ்லாம் பெயரில் அனுசரிக்கப்பட்டது.  ஷிர்க் ஏகத்துவமாகவும்,  பித்அத் சுன்னத்தாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது. புனித மரங்கள், நல்லோர் கபுருகள், புனித கற்கள் எல்லாம் வணக்க வழிபாடு செய்யும் தலங்களாக மாறின.
நஜ்து அரேபியர்கள் தங்களுக்குள் செய்யவேண்டிய எல்லா காரியங்களையும் குறிகாரர்கள், ஜோதிடர்களை கேட்டே செய்தனர்.  புகழ்பெற்ற பேரிச்சை மரமான “அல் பஹ்கள்” நோக்கி ஆண்களும் பெண்களும் தங்கள் நேர்ச்சையை நிறைவேற்ற சென்றனர். ”தர்ஜியா” என்ற மரத்திடம் குழந்தை பாக்கியம் கேட்டு வேண்டுதல் நிறைவேறினால், அம்மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டனர்.  அம்மரத்தில் இலைகளையே பார்க்கமுடியாத அளவுக்குக்கு சேலை துணிகள் தொங்கிக்கொன்டிருந்தன.
“தாரியா” என்ற மலைகுகைக்கும் சென்று பெண் அவ்லியாக்களின் அருள் வேண்டினர்.  குபைலா என்ற ஊரிலிருந்த புகழ்பெற்ற ஜைது இப்ன் அல் கத்தாப் கப்ருக்கு மக்கள் கூட்டம் சென்றது. மொத்தத்தில் இன்று எப்படி இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இஸ்லாமிய பெயர்களில், இருக்கும் தர்கா, தரீக்கா கத்தம் பாத்தியா, கந்தூரி மௌலிது, பால்கிதாப் போன்ற அனைத்து இபாதத்துகளும்? அங்கும் இருந்தன.
இந்தச் சூழலில்தான் முஹம்மது இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்)-1703-1792. அவர்கள் களத்தில் இறங்குகிறார்கள். மதினாவில் கற்ற மார்க்கக்கல்வியுடன் 1740 ல் தமது சொந்த ஊரான “உயைனா” வந்து தூய இஸ்லாத்தை பிரச்சாரம் செய்கிறார்கள். கடும் எதிர்ப்பு ஆயினும் அல்லாஹ்வின் துணையைக்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்கிறார்கள். அங்குள்ள குறுநில ஆட்சியாளர்களின் உதவியுடன் மக்களின் மனங்களை வெல்கிறார்கள். முதலில் அவர்கள் ஊரிலிருந்த உயைனாவின் புகழ்பெற்ற புனித மரத்தையும், அங்கிருந்த சிலைகளையும் அம்மக்களைக்கொண்டே உடைத்தெரிகிறார்கள்.
இரண்டாவதாக,  “குபைலா” என்ற ஊரிலிருந்த ஜைது இப்ன் அல் கத்தாப் சஹாபி பெயரில் இருந்த புகழ்பெற்ற தர்கா கட்டிடத்தை அம்மக்களைக் கொண்டே தரைமட்டம் ஆக்கினார்கள். அன்றிலிருந்து இன்றுவரை அரபு மண்ணில் ஏகத்துவம் நிலைபெற்று நிற்கிறது.
இந்தியாவிலும், தமிழகத்திலும் தர்காக்களே அபயமளிக்கும் ஆன்மீக பீடமாக விளங்குகின்றன, . இந்நிலையில்தான் இங்கிருந்து மதினா சென்று படித்து திரும்பிய மதனி, குறிப்பாக கமாலுதீன் மதனி,  மற்றும் திருச்சி அபூ அப்துல்லாஹ்,  ஜைனுலாப்தீன் உலவி ஒன்று சேர்ந்து அந்நஜாத் மாத இதழை ஆரம்பித்தனர்.
கலக்கமடைந்த ஷைத்தான்
அல்லாஹ்வின் கிருபையால் தூய இஸ்லாத்தை அந்நஜாத் மக்கள் மத்தியில் எடுத்துவைத்தது. மிகவும் குறுகிய காலத்தில் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் மார்க்க விழிப்புணர்வு எழுந்தது. ஷைத்தான் கலக்கமடைந்தான். இந்நிலை நீடித்தால் தமிழகத்திலிருந்து வெளியேற்றப்படுவோம் என்பதை உணர்ந்து சதி வலையை வீசினான்.
ஆலிம்களை பிடித்தால் ஒரு பெரும் கூட்டத்தையே தன் பிடிக்குள் கொண்டு வரலாம் என்று கணக்குப்போட்டு  மதனியை முதலில் பிடித்தான். அன்றைய தாருல் நத்வாவின் தலைவன் மார்க்க அறிஞன் அறிவின் தந்தை என புகழப்பட்ட அபூ ஜஹீலுக்கு சொன்ன டெக்னிக்கையே இங்கும் பயன்படுத்தினான்.
அல்லாஹ்வின் படைப்பில் அனைத்தும் சமம், ஆனால் தான் நெருப்பில் படைக்கப்பட்டதால் உயர்ந்தவன் என்றும் மண்ணில் படைக்கப்பட்ட ஆதம் தாழ்ந்தவர் என்று பிரிவினை செய்து வெளியேறிய இப்லீஸ் மதனியாரிடம் ஆலிம், அவாம் என்ற பிரிவினை விஷ விதையை தூவி, “நீங்களெல்லாம் ஏழு வருடம் படித்து பட்டம் பெற்ற ஆலிம்கள், நீங்கள் படிக்காத அபூஅப்துல்லாஹ் உடன் சேர்ந்து தாவா செய்தால் அது எடுபடாது. ஆகவே ஆலிம்களாக ஒன்று சேர்ந்து இயக்கம் ஆரம்பியுங்கள். ” என்ற ஷைத்தானின் வழிகாட்டுதலில் புதிய தாருல் நத்வாவை மதனியார் ஆரம்பித்தார். அதற்க்கு பெயர் “தவ்ஹீத் ஜமாத்துல் உலமா”.
மதனியும் உலவியும் சேர்ந்து மார்க்கம் சொன்னார்கள், அதன் விளைவு தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் தகராறு ஆரம்பமாகியது. சத்தியத்தை சொல்லும்பொழுது எதிர்ப்பு, அடிதடி சண்டை சச்சரவு எல்லாம் வரும் நபி(ஸல்) அவர்களுக்கும் வந்தது. முஹம்மது பின் அப்துல் வஹாப் (ரஹ்) அவர்களுக்கும் கடும் எதிர்ப்பு வரத்தான் செய்தது. ஆனாலும் நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டிய அழகிய பொறுமையை கடைப்பிடித்து,  எதிர்க்கும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு மனங்களை மாற்றினார்கள்.  ஆனால் நமது ஆலிம்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை. ஷைத்தான் கைப்பிடிக்குள் இருப்பவர்களுக்கு பொறுமையாய் இருக்கமுடியாது.
சமுதாயத்தில் பிரிவினை
என்ன செய்தார்கள்? இஸ்லாத்தில் முதல் பிரிவினை செய்து கட்சி ஆரம்பித்த கவாரிஜ்கள் வழியைப்பின்பற்றி, இணைவைக்கும் இமாமை பின்பற்றுவது ஹாரம் என காபிர் பத்வா கொடுத்து ஊருக்கு ஊர் தனிப்பள்ளி கட்டி தங்கள் இயக்க,  கூலி ஆலிம்களை குடியேற்றினார்கள். அதை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக காட்டினான். தவ்ஹீத் பள்ளிவாசல் என்று பெயர்வைத்து, இதுநாள்வரை தொழுத பள்ளிகளை ஷிர்க் பள்ளிகளாக மாற்றிவிட்டார்கள்.  ஆக, குடும்பத்தில் பிரிவினை, பள்ளியில் பிரிவினை ஒன்றுபட்ட மஹல்லா ஜமாத்தில் பிரிவினை.
முஸ்லிம்களை இரண்டாகப் பிரித்தனர்
எல்லோரும் முஸ்லிம்கள் என்று ஒன்றுபட்டிருந்த சமுதாயத்தில் பிரிவினையை உண்டாக்கி, தங்களை தவ்ஹீத் முஸ்லிம்கள் என்றும், மற்றவர்கள் இணைவைக்கும் முஸ்லிம்கள் என்றும் இரண்டாகப் பிரித்தனர். பிளந்தனர். தங்களுக்கென்று தனி இயக்கத்தை ஆரம்பித்து அதற்கு ‘ஜாக்ஹ்” என்று பெயரிட்டு, முஸ்லிம்களை இஸ்லாத்தின் பால் அழைக்காமல், தங்கள் இயக்கத்தின் உள்ளே இழுத்து பதவி கொடுத்து பத்திரப்படுத்தினர்.
சத்தியத்தை சொல்லும்பொழுது கடும் எதிர்ப்பு வரத்தான் செய்யும் நபிமார்கள் எதிர்க்கப்பட்டார்கள்,  அடிக்கப்பட்டார்கள்,  ஏன் கொலையும் செய்யப்பட்டார்கள். ஆனால் மதனி ஆலிம் இதற்க்கெல்லாம் அவர் தயாரில்லை. சொகுசாக மார்க்கம் சொல்ல ஆசைப்பட்டதால்,  தனி புரோகித சபை, தனி இயக்கம், தனிப்பள்ளி ஏற்ப்படுத்தி தலைவராகிவிட்டார்.
இயக்க ஆலிம்களின் பிரிவினை செயல்களுக்கு குர் ஆனிலும், ஹதீஸ்களிலும்,  நபிமார்கள் வரலாறுகளிலும், சத்திய சஹாபா பெருமக்கள் வாழ்க்கையிலும்,  ஆலிம் பெருமக்கள் இமாம்கள் வாழ்விலும் ஏதேனும் ஆதாரங்கள் உண்டா என்று தேடிப்பார்த்தாலும் ஒன்றும் கிடைக்கவில்லை. மாறாக, நபி(ஸல்) அவர்களால் சபிக்கப்பட்ட கேடுகெட்ட கவாரிஜ்கள் மற்றும் மனோஇச்சையை பின்பற்றி தங்கள் அறிவு சொல்வதே மார்க்கம் என்ற முத்தஷீலாக்களிடமே ஆதாரம் கிடைக்கிறது.
ஆகவேதான்,  இன்று இயக்க ஆலிம்கள் நடத்துவது “கள்ளத் தவ்ஹீத் கம்பெனி” என்று கூறுகின்றோம். முஸ்லிம்களிடம் இயக்க வெறியை ஏற்படுத்தி தங்கள் இயக்கத்தை வளர்ப்பதற்காக பாடுபடுகின்றனர். கூலி ஆலிம்களை சப்ளை செய்ய தனி மதரசாக்கள், இங்கிருந்து வெளியேறும் கூலி ஆலிம்களுக்காக தனி ஜாக்ஹ் TNTJ பள்ளிவாசல்கள்.
பிரிந்து கிடந்த மக்களை நபி (ஸல்) அவர்கள் தவ்ஹீத் மூலம் ஒற்றுமை படுத்தி ஒரே சகோதரர்கள் ஆக்கினார்கள், ஆனால் நமது கள்ளத் தவ்ஹீதுகள் ஒன்றாக இருந்த சமூதாயத்தை தவ்ஹீதை சொல்லி பிரித்துவிட்டார்கள். பிரிவினை செய்வது சாத்தானின் வழி என்று அல்லாஹ் கூறுகின்றான்.
“எனக்கும் , என் சகோதரருக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணிய பின்னரும். . . . . . . . ” —அல் குர்ஆன். 12:100.
சமுதாய பிரிவினை கொடிய பாவம்.  கூறுவது அல்குர்ஆன்
1.  “ எவர்கள் தங்களிடம் தெளிவான வசனங்கள் வந்த பின்னரும் தங்களுக்குள் (கருத்து) வேறுபட்டு பிரிந்து போனார்களோ அவர்களைப்போல நீங்களும் ஆகி விட வேண்டாம். இத்தகையவர்களுக்கு மகத்தான வேதனை உண்டு. ” –அல் குர்ஆன். 3:105.
2.  “ எவர்கள் தங்கள் மார்க்கத்தை பிரித்து (அவர்களும்) பல பிரிவினராக ( JAQH, TNTJ, INTJ etc…) பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உங்களுக்கு யாதொரு சம்பந்தமுமில்லை. . . . . ” –அல் குர்ஆன். 6:159.
3.  “ எனினும் ( யூதர்கள், கிறிஸ்தவர்கள், இயக்க ஆலிம்கள் ) தங்களுடைய வேதத்தை(ப் புரட்டி) பலவாறாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடம் உள்ளவற்றைக்கொண்டு சந்தோசம் அடைகின்றனர். நீங்கள் அவர்களை ஒரு காலம் வரையில் அவர்களுடைய மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்க விட்டு விடுங்கள். ” –அல் குர்ஆன். 23:52-53.
4.  “ எவர்கள் தங்கள் மார்க்கத்திற்க்குள் பிரிவினையை உண்டு பண்ணி பல பிரிவுகளாக பிரித்து,  அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள (தவறான) வைகளைக்கொண்டு சந்தோசப்ப்படுகின்றனரோ ( அவர்களுடன் சேர்ந்து விடாதீர்கள்). ” –அல் குர்ஆன். 30:32.
நபிமார்கள் வரலாற்றில் நல்லதொரு படிப்பினை.   
“ அறிவுடையவர்களுக்கு (நபிகளாகிய) இவர்களுடைய சரித்திரங்களில் நல்லதோர் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது.  “ -அல் குர்ஆன். 12:111
யூனுஸ்(அலை) அவர்கள் அல்லாஹ் மீது கோபம் கொண்டு தான் சமூகத்தாரை விட்டு பிரிந்த ஓடினார்கள். அதன் விளைவாக மீன் வயிற்றில் வைக்கப்பட்டார்கள் இதற்கு காரணம் அல்லாஹ்வின் கட்டளைக்காக பொறுத்திருக்காமல் தானாக சமூதாயத்தை பிரிந்து சென்றதே. “நீங்கள் உங்கள் இறைவனுடைய கட்டளைக்காக பொறுத்திருங்கள். (கோபம் தாங்காது)மீன் வயிற்றில் சென்றவரைப்போல் நீங்களும் ஆகிவிடவேண்டாம். ” -அல் குர்ஆன். 68:48.
அல்லாஹ் நாடியவரை தண்டிப்பான், தான் நாடியவரை மன்னிப்பான். இது அவனது நாட்டம். ஆனால் சமூதாயத்தை விட்டு பிரியவோ பிரிக்கவோ கூடாது. நமது கள்ள தவ்ஹீதுகள் இதைத்தான் செய்கிறார்கள்”. சுன்னத் ஜமாஅத் மக்கள் தர்கா சென்று இணைவைக்கிறார்கள்.  ஆகவே அவர்களிடமிருந்து பிரித்துக்காட்டவே “தவ்ஹீது இயக்கம்” என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.
யூனுஸ்(அலை) மக்கள்,  மனம்மாறி அல்லாஹ்விடம் தவ்பா செய்து திருந்தியது போல் நமது மக்களும் இன்ஷாஅல்லாஹ் நாளை திருந்தலாம். அதுவரை அவர்களிடம் தொடர்ந்து நேர்வழியை உபதேசம் செய்து வருவதே நமது பணி. கள்ள தவ்ஹீதுகள் செய்ததென்ன? அல் ஜமாத்தை உடைத்து கூறு போட்டு ஓடிப்போய் ஷைத்தான் ஜமாத்தை ஏற்படுத்தியதுதான்.
ஷுஐப் (அலை) அவர்கள் கூறுவதை பாருங்கள். “என் மக்களே! என்னால் இயன்றவரை உங்களைச் சீர்த்திருத்துவதைத் தவிர (வேறொன்றையும்) நான் விரும்பவில்லை. அல்லாஹ்வின் உதவியின்றி நான் (உங்களை சீர்திருத்தும் விசயத்தில்) வெற்றியடைய முடியாது. அவனையே நான் நம்பியிருக்கின்றேன். அவனையே நான் நோக்கியும் இருக்கின்றேன். ” குர்ஆன். 11:88
கள்ளத் தவ்ஹீதுகள் கடைப்பிடிப்பது நபிமார்கள் வழிமுறையையா? அல்லது ஷைத்தானின் வழிமுறையா? கள்ளத் தவ்ஹீது கம்பெனியில் சேர்ந்துவிட்டால் உடனே சொர்கத்திற்கு அல்லாஹ் டிக்கெட் கொடுத்துவிடுவான் என்று நம்ப வைக்கிறார்கள். இது ஷைத்தான் காட்டும் வீண் நம்பிக்கை.
மூஸா (அலை) அவர்களிடம் அழகிய படிப்பினை.
மூஸா (அலை) தன் சமூகத்தாரிடம் அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த அருட்கொடைகளை நினைவூட்டி எதிரிகளிடம் போர் புரியும்படி கட்டளை இடுகிறார்கள். ஆனால் இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாமல் மாறு செய்கிறார்கள் இதனால் மூஸா (அலை) அவர்கள் அம்மக்களுக்கு காபிர் பத்வா கொடுத்து அவர்களை பிரிக்கவில்லை.
ஏனெனில் மனிதர்களை தரம் பிரிக்கக்கூடியவன் படைத்த ரப்புல் ஆலமின் மட்டுமே, எனவே அல்லாஹ்விடமே பிரிக்கும் தீர்ப்பை வேண்டுகிறார்கள்.
“ என் இறைவனே! நிச்சயமாக என் மீதும், என் சகோதரர் மீதும் தவிர, (மற்ற எவர் மீதும்) எனக்கு அதிகாரமில்லை, ஆகவே பாவிகளாகிய இந்த மக்களிலிருந்து நீ எங்களை பிரித்துவிடுவாயாக! “ என்று பிரார்தித்து கூறினார். ” -அல் குர்ஆன். 5:25.
பாவியான மக்கள் என்று தெரிந்தும் அந்த மக்களை விட்டு பிரிந்து போகும் முடிவை அவர் எடுக்கவில்லை. அதிகாரமுள்ள அல்லாஹ்விடமே ஒப்படைக்கின்றார்.  நபி(ஸல்) அவர்களும் மக்கத்து இனைவைப்பவர்களின் கொடுமைகளையெல்லாம் தாங்கி தொடர்ந்து அதே காபதுல்லாஹ்விலேயே தமது இபாதத்களை செய்கிறார்கள். அல்லாஹ் அனுமதி கொடுத்தபின்பே மதீனா ஹிஜ்ரத் செய்து அங்குதான் முதல் பள்ளி கட்டுகிறார்கள.
தனிப்பள்ளி கட்டுவதற்கு கள்ளத் தவ்ஹீதுகள் சொன்ன காரணம்,  “சுன்னத்தான முறையில் தொழவதற்கு முடியவில்லை, அடிக்கிறார்கள், உதைக்கிறார்கள், எவ்வளவு நாட்கள் நாங்கள் அடி வாங்குவது. ஆகவே தனிப்பள்ளி. ”
அன்று மூஸா(அலை) மக்களுக்கும் இதேநிலைதான், ”அவர்களும் தங்களை பிர் அவ்ன், அவன் இனத்தவர்கள் துன்புறுத்துவார்களோ என்று பயந்துகொண்டே இருந்தனர். ” -அல் குர்ஆன். 20:94. ஆனாலும் அல்லாஹ் தனிப்பள்ளி கட்டி அவர்களை தொழச்சொல்லவில்லை.
“ நீங்கள் இருவரும் உங்களுடைய மக்களுக்காக மிஸ்ரில் பல வீடுகளை அமைத்துக்கொண்டு,  உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக்கி (அவற்றில்) தவறாது தொழுது வாருங்கள். ” -அல் குர்ஆன். 10:87.
நபி(ஸல்) அவர்களும் ஆரம்பத்தில் அர்ஹம் (ரலி) அவர்கள் வீட்டிலேயே தொழுது வந்தனர்.
அல்லாஹ் கூறுகிறான் “நபிமார்கள் சரித்திரங்களில் நல்ல படிப்பினை உளளது. ” . இஸ்ரவேலர்களுக்கு சொன்ன செய்தியை இறுதி உம்மத்தின் அல்குர்ஆனில் இடம்பெறச் செய்ததின் காரணம், நாம் தவறு செய்துவிடக்கூடாது என்பதுதான். கள்ள தவ்ஹீத் கம்பெனிகளுக்கு இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க நேரமில்லை. கம்பெனி புது Branch பிராஞ்ஜை எந்த ஊரில் தொடங்கலாம் என்பதே சிந்தனை.
மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வை சந்திக்க சென்றபின் சாமிரி என்பவன் முஸ்லிம்களை வழிகெடுத்து காளைக்கன்றை வழிபடச் சொல்கின்றான். திரும்பி வந்த மூஸா(அலை), இவர்கள் நிலையைப்பார்த்து கோபம் கொண்டு தன் சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களைப்பிடித்து இழுக்கிறார்.
“ என் தாயின் மகனே! என் தலையையும் தாடியையும் இழுக்காதீர்! (அச்சமயம் நான் அவர்களை விட்டு விலகி இருந்தால்) “இஸ்ராயீலின் சந்ததிகளுக்கிடையில் நீங்கள் பிரிவினையை ஏற்படுத்திவிட்டீர். எனது வார்த்தைகளை கவனிக்கவில்லை” என்று நீங்கள் கடுகடுப்பீரென்று நிச்சயமாக நான் பயந்தே அவர்களுடன் இருந்தேன்” என்று கூறினார்.  –அல் குர்ஆன். 20:94.
மற்றொரு வசனத்தில், ”இந்த மக்கள் என்னை பலவீனப்படுத்தி என்னை கொலை செய்து விடவும் முற்பட்டனர். ” -அல் குர்ஆன். 7:150.
அயோக்கியர்களின் கடைசி புகலிடம்
இரு நபிமார்களின் உரையாடல்களிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினை, ஒன்றுபட்ட முஸ்லிம் சமூதாயம் ஷைத்தானின் சூழ்ச்சியில் வீழ்ந்து அறியாமையின் காரணமாக இணைவைத்தாலும், தொடர்ந்து அம்மக்களிடம் இனைவைப்பின் தீமையை சொல்லிக் கொண்டிருக்கவேண்டும். அவர்களை ஷைத்தானிடம் கையளித்துவிட்டு ஓடிவிடக்கூடாது.
ஆனால், நமது கள்ள தவ்ஹீதுகள் செய்ததென்ன? ஓடுகாலி ஜமாஅத்,  தனிப்பள்ளி அதிலும் அடிதடி, போலிஸ்,  கோர்ட், வம்பு வழக்கு, வாய்தா, வசூல். இறுதியில் அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியலிலும் புகுந்து விட்டார்கள்.
நமது அரசியல் கட்சிகள் பல உட் பிரிவு அமைப்புகளை வைத்திருப்பர்,  உதாரணமாக,  மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி என்று பலதரப்பு மக்களையும் இணைத்துக்கொள்வர். இதுபோல்,
இப்லீசும் தன் கட்சியை 72 குழுவாக பிரித்து நரகத்திற்கு தயார் செய்துள்ளான்.  தர்கா அணி, தரீக்கா அணி, பித்அத் அணி, பித்னா அணி. . .  இந்த வரிசையில் தவ்ஹீத் பிரிவுக்கு ஆள் பிடிக்கின்ற வேலையை மதனியிடமும், உலவியிடமும் ஒப்படைத்துள்ளான். வேலை வேகமாக நடக்கின்றது.
கிதாபுத் தவ்ஹீத்-முஹம்மத் இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்)
மூச்சிற்கு முன்னூறு தரம் தவ்ஹீத் கோஷம் போடும் மூடர்கள்,  “கிதாபுத் தவ்ஹீத்” நூல் எழுதி மதனி வகையறாக்களுக்கு அலிப் . . பே. . . சொல்லிக்கொடுத்த முஹம்மத் இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்) அவர்கள்,  தவ்ஹீத் பிரச்சாரத்திற்காக தனி இயக்கம் எதையேனும் ஆரம்பித்தார்களா? அல்லது குறைந்த பட்சம் தொழுவதற்காகவாவது தனி தவ்ஹீத் பள்ளி கட்டி தொழுதார்களா? ஏதேனும் ஆதாரம் உண்டா?
அன்றிருந்த பித்அத் இமாம்களைப்பின்பற்றி அதே பள்ளியில் தான் தொழுதனர். யாருக்கும் காபிர் பத்வா அளித்ததில்லை. ஒன்றுபட்ட முஸ்லிம் ஜமாத்தை பிரிக்கவில்லை. விடாது தொடர்ந்து நல்லுபதேசம் செய்து அம்மக்களை மாற்றினார்கள். தன்னை சாராத மக்களை காபிர் என்று கூறுகின்றார், என்ற குற்றச்சாட்டு அவர் மீது கூறப்பட்டது.
இதற்க்கு ஹிஜ்ரி 1218 முஹர்ரம் 8 ம் தேதி மக்காவில் மன்னர் சவூது பின் அப்துல் அஜீஸ் உடன் இருக்கும்பொழுது அவரது மகன் அப்துல்லாஹ் ஒரு கடிதம் எழுதுகிறார்.
“ எங்கள் மத்ஹப்பின் பெயர் “அஹ்லுல் சுன்னத் வல் ஜமாஅத்” சஹாபா பெருமக்கள் சென்ற வழியில் செல்வதே எங்கள் கொள்கை. எந்த மத்ஹப் இமாமையும் பின்பற்றி செல்வதை நாங்கள் குற்றம் சொல்லமாட்டோம். . ஒரு இமாமைத்தான் பின்பற்றவேண்டும் என்று யாரும் நிர்ணயிக்கவில்லை. எமது இபாதத் வழிமுறைகளில் ஹம்பலி மத்ஹப்பை பின்பற்றுகிறோம்”. எந்த ஒரு முஸ்லிமையும் அவர் காபிர் எனச்சொன்னதில்லை.
இன்று மதனியும் உலவியும் பின்பற்றுவது இமாம் முஹம்மத் இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்) அவர்கள் கூறிய தவ்ஹீத் அல்ல, மாறாக வழிகெட்ட முத்தசீலாக்களை.  இஸ்லாமிய நெடுஞ்சரித்திரத்தில் தங்களை தவ்ஹீதுகள் “அஹ்லுல் தவ்ஹீத்” என்று முதன்முதலில் அழைத்துக் கொண்டவர்கள். முத்தசீலாக்களே!.  இரண்டாவது நமது கள்ள தவ்ஹீதுகள்.
தவ்ஹீத் என்ற வார்த்தையை இமாம் அவர்கள்,  மக்கள் அமல் செய்வதற்காக அதாவது அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குங்கள், வேறு எவரிடமும் கை ஏந்தாதீர்கள். என்று அமல் செய்யச்சொன்ன வார்த்தை,  இன்று கள்ளக் தவ்ஹீத்களால் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு, பேனர், பேட்ஜ், பேரணி, விளம்பரம் தலைவர் நிர்வாகிகள், என்று வளர்ந்து மல்டிநேசனல் கம்பெனியாக மாறிவிட்டது. இவர்கள் கள்ளத் தவ்ஹீதைச் சொல்லி கம்பெனி நடத்துவது வளைகுடா காசில்தான்.
அல்லாஹ்வுக்கு அஞ்சுபவர்களே ஆலிம்கள்!.
ஏராளமான மார்க்க அறிஞர்கள் மக்கா, மதீனா சென்று மார்க்கத்தை கற்று தம் மக்களுக்கு நேர்வழியை காட்டியிருக்கிறார்கள். இமாம் அபூ ஹனிபா, இமாம் அஹமது இப்ன் ஹம்பல், இமாம் ஷாபி, இமாம் புகாரி, முஸ்லிம், ஷேக் அல்பானி (ரஹ்) என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
மதீனாவில் கல்வி கற்றுச்சென்று தமது சொந்த நாட்டில் எவரேனும் தனி தவ்ஹீது இயக்கம் ஆரம்பித்து தனிப்பள்ளி கட்டியதாக வரலாறு உள்ளதா? இன்று குர்ஆனுக்கு அடுத்ததாக சிறப்பித்துக்கூறப்படும் புகாரி ஹதீஸை தொகுத்த இமாம் புகாரி அவர்கள் சுமார் 16 ஆண்டுகள் மக்கா, மதீனாவில் மார்க்கம் கற்றார்கள்.
ஹிஜ்ரி, 250 ல் தமது சொந்த நாடு (உஸ்பெஸ்கிஸ்தான்) புகாராவிற்கு திரும்புகிறார்கள்.  இமாம் அவர்களை வரவேற்க வரலாறு காணாத மக்கள் வெள்ளம். இவரது செல்வாக்கை கண்டு ஆட்சியாளர்களே அஞ்சும் அளவிற்கு மக்கள் கூட்டம். இதைப்பயன்படுத்தி தவ்ஹீதை சொல்கிறேன் என்று தனி இயக்கம் ஆரம்பித்து, தனிப்பள்ளி கட்டியிருக்கலாம், எதுவும் செய்யவில்லை.
மக்களை பிரிக்கும் மாபாதகத்தை உண்மையான எந்த ஆலிம்களும் செய்யமாட்டார்கள், நமது மதனியார், மதீனாவில் 4, 5 வருடத்தை கழித்துவிட்டதாலே தமிழ் நாட்டில் தனிக்கடையை திறந்துவிட்டார். இவருக்கு போட்டியாக உலவியார் பெரிய கம்பெனியை ஆரம்பித்தார்.
இமாம் புகாரி (ரஹ்) அவர்களுக்கு தெரியாத தவ்ஹீதா வீணாப்போன தீன்களுக்கு தெரிந்துவிட்டது.  புகாரி(ரஹ்) அவர்களும் தன் சொந்த செலவில் ஒன்றைகாட்டினார்கள். தனிப்பள்ளி அல்ல,  பிரயாணிகள் வந்து தங்கிச்செல்ல இலவச விடுதி.  தமது கைகளால் கல் எடுத்துவந்து கட்டினார்கள்.
இதைப்பார்த்த அவரது மாணவர், முஹம்மத் ஹாதிம் வராக் என்பவர், தான் கல் எடுத்து வருகிறேன், இவ்வேலையை என்னிடம் தாருங்கள் என்று கேட்டபொழுது, இமாம் அவர்கள் சொன்ன பதில், ” நாளை மறுமையில் இந்த வேலைக்காக அல்லாஹ்விடம் கூலி பெற ஆசைப்படுகிறேன். ”
நமது கள்ளத்தவ்ஹீதுகள் கட்டிய தனிப் பள்ளிகளுக்கும், அங்கு நடந்த அடிதடி. கோர்ட் கேஸ்களுக்கும் அல்லாஹ் இருமடங்கு கூலியை இன்ஷா அல்லாஹ் மறுமையில் கொடுப்பான். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘பள்ளிகளுக்காக முஸ்லிம்கள் சண்டையிட்டு அடித்துக்கொள்ளும் நாள் வராத வரை மறுமை நாள் வராது. ” அறிவிப்பவர்: அனஸ் இப்ன் மாலிக் (ரலி) ஆதாரம்:அபூதாவூது. . 449.
முஸ்லிம்கள் ஜாக்கிரதை!
இன்று ஜாக்ஹ் ன் துணை நிறுவனங்களாக 23 கம்பெனிகளின் லிஸ்டைப் போட்டு,  இந்தக்கம்பெனிகள் “தொய்வின்றி தொடர்ந்து நடத்த நிதி தாரீர்!” என்று கை ஏந்துவது ஏன்? ஏகத்துவத்தை மீண்டும் கட்டியெழுப்பிய முஹம்மத் இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்) அவர்கள் எந்த இயக்கத்தை ஏற்படுத்தினார்? எந்த ஜாமியாவை நடத்தி தனிப்பள்ளிகட்டி கூலி ஆலிம்களை சப்ளை செய்தார்? ஒன்றுமேயில்லை.
“ நபியே! நமது தூதை தெளிவாக எத்திவைப்பதை தவிர உம்மீது வேறு எந்த கடமையும் இல்லை!” -அல் குர்ஆன். 5:92
தொடர்ந்து தவ்ஹீதைச் சொல்லியே மக்கள் மனங்களை அல்லாஹ்வின் அருளைக்கொண்டு மாற்றினார்கள். தர்காக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்தன. கள்ளத் தவ்ஹீதுகள் செய்த சாதனை என்ன?
இவர்களின் தலைமைபீடமான கோட்டாரில் இன்றும்,  பாவா காசிம் ஒலியுல்லா இவர்களுக்கும் சேர்த்து அருள் வழங்கிக்கொண்டுதான் இருக்கிறார். ஒரே ஊரில் தர்கா வியாபாரம் ஒருபக்கம்,  தவ்ஹீத் வியாபாரம் மறு பக்கம் நடக்கிறது. கூரை ஏறி கோழி பிடிக்காதவர், வானம் ஏறி வான்கோழி பிடிக்கப்போகிறார்? இவர்கள் முஸ்லிம்களின் பொருளை பிடுங்கி இருளை விற்கின்றார்கள்.
Tri-Nitro-Toluene–ஜமாஅத்தில் ஈமானுக்கு வேட்டு.
Pஜை யின் கள்ள தவ்ஹீது கம்பெனியைப்பற்றி நாம் அதிகம் சொல்ல தேவையில்லை. இவரது முரீதுகளைத்தவிர மற்றவர்கள் அனைவரும் இவரது தவ்ஹீது தரீக்காவை விளங்கிவிட்டனர். முஸ்லிம்களுக்கு ‘குப்ர்’ பத்வா கொடுத்து,  கொடுத்து இறுதியில் இவரும்  குப்புற விழுந்துவிட்டார். இதுதான் பொய்யர்களின் வழிமுறை.  அன்று அரேபியா பொய்யன் முசைலமா “ஸஜ்ஜா” என்ற கிறித்துவ பெண்ணிடம் பங்கு போட்டு பங்கப்பட்டான். இந்தியப்பொய்யன் மிர்சா குலாம் காதியானி,  முஹம்மதி பேகம் என்ற பெண்ணிடம் மையல் கொண்டு மண்ணாப்போனான். இப்பொழுது தமிழ் நாட்டிலும் இம்முறை நடக்கின்றது.  “ஊருக்கே குறி சொன்ன பல்லி. . . கழனிப் பானையில் விழுந்ததாம் துள்ளி”.
பீர் அண்ணன் சொல்வதுதான் இஸ்லாம். ஜகாத் ஒருமுறை கொடுத்தால் போதும் என்று சொன்னாலும் சரி,  பன்றித்தோல் வியாபாரம் கூடும் என்றாலும், சரி அவரது இயக்க முரிதுகள் அப்படியே பின்பற்றுவார்கள். சுருக்கமாகச்சொன்னால்,  “பீரண்ணன் கை பிரேதங்களாக” புரட்டப்படுகிறார்கள்.
முரீதுகளுக்கு இயக்க வெறியூட்டி மந்திரித்து விடுவதால் ஆங்காங்கு பள்ளிகளில் அடிதடி,  கடைசியில் கைத்துப்பாக்கியும் களத்திற்கு வந்து காவு வாங்கிவிட்டது. இதை திருவிடச்சேரி திருவிளையாடல் என்று கூறலாம். ஒரு முஸ்லிமை கொன்றால் நிரந்தர நரகம் என்ற அடிப்படை அறிவில்லாதவர்களை நல்ல தவ்ஹீத் என்று சொல்லாமா? கள்ள தவ்ஹீத் என்றுதான் சொல்லமுடியும்.
ஒரே ஒரு வார்த்தை. . . .  ஓஹோன்னு வாழ்க்கை. !
அந்த வார்த்தை எது தெரியுமா? கலிமா ஷஹாதத். “அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ் அஷ்ஹது அன்னமுஹம்மதுர் ரசூலில்லாஹ்”
இந்த கலிமா சொன்ன மனிதர்களை அல்லாஹ்,  முஸ்லிம் என்ற அழகிய பெயரில் அழைக்கின்றான்.  ஆனால் கள்ள தவ்ஹீதுகளுக்கு முஸ்லிம் என்று சொல்வது கசப்பாக உளளது, அசிங்கப்படுகிறார்கள்,  முஸ்லிம் என்று சொல்ல வெட்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களுக்குத்தாங்களே புதிதாக வைத்துக்கொண்ட,  “ஸலபி”,  “தவ்ஹீத்” பெயரில் அழைக்கவே விரும்புகிறார்கள்.
சவூதி அரேபியாவின் நீதித்துறை அமைச்சர், Dr. முஹம்மத் பின் அப்துல் கரீம் அல் ஈசா அவர்கள்,  ரியாத், இமாம் முஹம்மது பின் சவூத் இஸ்லாமிய பல்கலைகழகத்தில் பேசும்பொழுது,  “சலபியிசத்தை இஸ்லாமாக மொழிபெயர்கக்கூடாது. ஸலபி என்பது எடுத்து நடக்கவேண்டிய ஒன்று. அது ஒரு பெயரல்ல. ” என்று கூறியது கவனிக்கத்தக்கது. ( Salabism should not be interpreted as islam. Salabism is only a descriptive approach, not a name”.  —Arab News. 13, Feb. 2012. )
இன்று ஸலபியும், தவ்ஹீதும் தனிப்பெயர் இயக்கங்களாகி மக்களை பிரிக்கின்றன.  முஸ்லிமும், தவ்ஹீதும் ஒன்றையொன்று பிரிக்கமுடியாத ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை.  நாணயத்தில் கறை படிவதுபோல், ஒரு முஸ்லிமின் சொல்,  செயல்,  எண்ணங்களில்,  ஷிர்க்,  பித்அத், மாஷியத் போன்ற கறைகள் படியக்கூடும்.
ஆயினும் எவர் உள்ளத்தில் கடுகளவு ஈமான் இருந்தாலும் அவர் வெற்றி பெற்றுவிடுவார். உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன். ஆகவே முஸ்லிம் என்று அல்லாஹ் வைத்த பெயரிலேயே ஒன்றுபடுவோம். அல்லாஹ்வின் அளப்பெரிய கருணையையும் மன்னிப்பையும் வேண்டியவர்களாக முஸ்லிம்களாகவே மரணிப்போம்.
இயக்க ஆலிம்களின் தவ்ஹீத் எனும் பிரிவினை, செய்வினையில் சிக்கிவிடாமல் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!
“மெய்யாகவே எவர்கள் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை மறுமையிலும், இம்மையிலும், (“கலிமா தையிப்”) உறுதிமிக்க இவ்வார்த்தையைக்கொண்டு அல்லாஹ் அவர்களை உறுதிப்படுத்துகிறான். . ” -அல் குர்ஆன். 14:27.

Related

பெட்டகம் சிந்தனை 8436354011629805382

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item