முருங்கைக் கீரை ஏழைகளின் டானிக்---மூலிகைகள் கீரைகள்

நம் நாட்டில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கீரைகளில் முருங்கைக்கீரையும் ஒன்றாகும்.  முருங்கையை நம் வீட்டு மருத்துவர் என்றே சொல்லலாம்.  முர...

நம் நாட்டில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கீரைகளில் முருங்கைக்கீரையும் ஒன்றாகும்.  முருங்கையை நம் வீட்டு மருத்துவர் என்றே சொல்லலாம்.  முருங்கைக் கீரையை ஏழைகளின் டானிக் என்கின்றனர்.
.
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள்

உயிர்ச்சத்துக்களும், தாது உப்புக்களும் நிறைந்துள்ளன.  சுண்ணாம்புச்சத்தும் இரும்புச் சத்தும் மற்ற கீரைகளைவிட அதிகம் நிறைந்துள்ளது.  வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது.

மருத்துவப் பயன்கள்

 · முருங்கைக் கீரை, உடல் சூட்டைத் தணித்து, உடலுக்கு வலு கொடுக்கிறது.

· இளைத்த உடலைத் தேற்றும் தன்மையுடையது.

· இதில் அதிகளவு இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் நிறைந்திருப்பதால்  இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது.

· செரிமானச் சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறு ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் மலச்சிக்கல் நீங்குகிறது.

· மூல நோயின் பாதிப்பு குறைகிறது.

· மூக்கில் நீரேற்றம், தலைவலி போன்றவை ஏற்படாமல் தடுத்து சுவாசத்தை சீராக்குகிறது.

 · நுரையீரல் சளியைப் போக்குகிறது.

· வைட்டமின் ஏ இக்கீரையில் மிகுந்திருப்பதால் கண் பார்வையைத் தூண்டுகிறது.

· கண் நரம்புகளின் வறட்சியைப் போக்கி கண் எரிச்சல், கண் புகை, கண் காசத்தைப் போக்குகிறது.  மேலும் கண் நோய்கள் வராமல் தடுக்கிறது.

· பித்த மயக்கம் மற்றும் மாந்தம் முதலியவற்றை நீக்குகிறது.

எப்படி சாப்பிடுவது

முருங்கைக் கீரையை சுத்தம் செய்து அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து  நன்கு வதக்கி சாப்பிடலாம்.

முருங்கை இலையுடன் மிளகு சேர்த்து ரசம் செய்து சாப்பிட்டால் உடல் வலி, கை கால் அசதி முதலியவை நீங்கும்.


முருங்கைக்கீரையை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டால்  இரத்த சோகை வராமல் தடுக்கலாம்.

ஆண்கள் முருங்கைக்கீரையை நெய்யில் பொறித்து உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் வாலிபமும் வீரியமும் உண்டாகும்.

தாது விருத்தி உண்டாகும்.  இல்லற வாழ்க்கை இன்பமாகும்.

பெண்கள் இக்கீரையை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் இரத்த சோகையைத் தடுக்கலாம்.  பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு நன்றாக இருக்கும்.  மணமாகாத பெண்களுக்கு உண்டாகும் சூதக வயிற்று வலி இக்கீரையை சாப்பிட்டால் நீங்கும்.

Related

மூலிகைகள் கீரைகள் 4770563042107558267

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item