மாங்காய் வத்தல் குழம்பு--சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள் மாங்காய் வத்தல் - 8 துண்டுகள், சுண்டைக்காய் வத்தல் - 12, சி. வெங்காயம் - 10, பூண்டுபல் - 10, மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்,...

தேவையான பொருட்கள்
- மாங்காய் வத்தல் - 8 துண்டுகள்,
- சுண்டைக்காய் வத்தல் - 12,
- சி. வெங்காயம் - 10,
- பூண்டுபல் - 10,
- மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்,
- கொத்தமல்லிதூள் - 3 டீஸ்பூன்,
- தேங்காய்துருவல் - 1/4 கப்,
- கடுகு - 1 டீஸ்பூன்,
- உ. பருப்பு - 1/2 டீஸ்பூன்,
- வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
- சீரகம் - 1/2 டீஸ்பூன்,
- வெல்லம் - ஒரு நெல்லிக்காய் அளவு,
- கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு.
செய்முறை
- மாங்காய் வத்தலை 15 நிமிடம் சுடுதண்ணீரில் ஊறவிடவும்.
- தேங்காயை அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- சி.வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும்.
- ஒரு வாணலியில் 1/4 கப் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
- கடுகு, உ. பருப்பு வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- சுண்டைவத்தலை போட்டு வதக்கவும்.
- வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
- மிளகாய்தூள், கொத்தமல்லிதூள் போட்டு வதக்கவும்.
- புளியை கரைத்து ஊற்றவும்.
- அரைத்த தேங்காயை சேர்க்கவும்.
- மாங்காய்வத்தல், உப்பு போடவும்.
- அடுப்பை குறைந்த தணலில் வைத்து கொதிக்கவிட்டு எண்ணெய் தெளிந்ததும் வெல்லத்தை போட்டு இறக்கவும்.
Post a Comment