சிறுநீர் சிவப்பா போகுதா...இயற்கை வைத்தியம்
. பள்ளிக் கூடங்களில் ஆண்டு இறுதித் தேர்வு நெருங்கும் நேரம். மாணவர்கள் மாலை நேரங்களில் தெருவிளக்குகளிலும், வீட்டுத் திண்ணைகளிலும்...

பள்ளிக் கூடங்களில் ஆண்டு இறுதித் தேர்வு நெருங்கும் நேரம். மாணவர்கள் மாலை நேரங்களில் தெருவிளக்குகளிலும், வீட்டுத் திண்ணைகளிலும் அமர்ந்து தீவிரமாகப் படித்துக்கொண்டிருந்தார்கள். சில மாணவர்கள் சிறப்பு வகுப்புகள் முடிந்து பெருத்த புத்தகப் பொதியுடன் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டு இருந்தார்கள்.
உற்சாகத்தையும் அறிவு வெளிச்சத்தையும் மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டிய கல்வி அவர்களுக்கு சுமையாகி சோர்வு நடை போடவைத்திருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த வைத்தியர், பழைய கல்வி முறையை மனதுக்குள் அசைபோட்டார்.
குருகுல வாசம், ஏட்டுப்பள்ளிகள், என பழைய கல்வி முறை எதார்த்த வாழ்வோடு பிண்ணிப் பிணைந்ததாக இருந்தது. வைகரைப் பொழுதில் எழுதல், நீராடுதல், கடவுளை வழிபடுதல், பின்னர் குருவணக்கம் என அடிப்படை ஒழுக்க நெறிகளுடன் போதிக்கப்பட்ட கல்விமுறையாக அது இருந்தது.
உலகியல் வாழ்வை எதிர்கொள்ளும் முழுமையான மன வளர்ச்சியையும், உறுதியையும், மாணவர்களுக்கு அளிக்கும் திறன் கெண்டதாக அந்த பழைய கல்விமுறை இருந்து வந்தது.
ஆனால், இன்றைய கல்வி முறை வெளி உலகைப் பற்றிய எந்த அறிவையும் மாணவர்களுக்கு வழங்குவதில்லை. மனித உறவுகள் குறித்து எந்த மதிப்பீடும் இல்லாத தலைமுறையை நவீன கல்வி உருவாக்கி வருகிறது.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நோஞ்சான்களாகவே தற்காலப் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
நவீன கல்வி குறித்தும், தரிகெட்டுத் தடுமாறும் தற்போதைய தலைமுறை பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்த வைத்தியரின் கவனம் அருகில் யாரோ வந்து அமர்வதையடுத்து அந்தப்பக்கம் திரும்பியது.
தனக்குத் தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற இளைஞன் மிகப் பவ்யமாக தனது அருகில் வந்து அமர்ந்ததைப் பார்த்த வைத்தியர், புன்னகையுடன் அவனை வரவேற்றார்.
என்னப்பா.. வீட்டுல அப்பா அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா... என்ன.. நீ மட்டும் தனியா வந்திருக்கே.. எதாவது பிரச்சனையா.. வேலையெல்லாம் எப்பிடி போயிக்கிட்டு இருக்கு..
வரிசையாக வைத்தியரிடமிருந்து வெளிவந்த கேள்விகளுக்கு புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்த ஆறுமுகம், சிறிது தயக்கத்துடன் தான் வந்த காரணத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.
தாத்தா... எனக்கு ரொம்ப நாளாவே சிறுநீர் கழிக்கும்போது சிவப்பு கலந்த மஞ்சளா வெளியேறுது.. அப்ப பயங்கரமான வலி ஏற்படுது..
இதப்பத்தி வீட்டுல சொல்ல தயக்கமா இருந்துது.. வேற யாருகிட்டயும் சொல்லவும் முடியல.. அப்பா உங்கள அடிக்கடி பாக்க வற்ரது எனக்குத் தெரியும்... அதான் இதுக்கு உங்ககிட்ட எதாவது மருந்து கேக்கலாம்னு வந்தேன்.. ரொம்ப கஷ்டமா இருக்கு தாத்தா..
இளைஞன் ஆறுமுகம் கொன்னதை பரிதாபத்துடன் கூர்ந்து கவனித்துக் கேட்ட வைத்தியர், அவனது தோளில் தட்டிக் கொடுத்தார்.. அதெல்லாம் ஒண்ணும் பயமில்லை.. தைரியமா இரு.. இதெல்லாம் சாதாரண பிரச்சனைதான்.. சரிபண்ணிடலாம்..
தொடர்ந்து ஓய்வில்லாம அலையிறதால ஏற்படுற பிரச்சனைதான் இது.
வெயில்ல அலையும்போது நெறய தண்ணீர் குடிக்கணும்.. இளநீர் அப்பப்ப குடிக்கணும்.
இப்ப நான் சொல்ற மருந்த வாங்கி அம்மாக்கிட்ட சொல்லி செய்து சாப்பிடு.. எல்லாம் சரியாப்போகும்.
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் -3
வெந்தயம் - 1 தேக்கரண்டி
மிளகு - 5
கறிவேப்பிலை- 4 கொத்து
நன்னாரி வேர்- 5 கிராம்
இவற்றை எடுத்து இடித்து 1 கப் நீரில் கொதிக்க வைத்து பாதியா சுண்டக் காய்ச்சி கசாயம் செய்து சாப்பாட்டிற்கு முன்னால் குடிச்சிக்கிட்டு வா.. எல்லாம் சரியாப்போகும்.
இது ஒண்ணும் சொல்லக்கூடாத ரகசிய வியாதி இல்ல.. அலைச்சலால ஏற்படுறதுதான். மருந்த சாப்பிடு.. ஒரு வாரம் கழிச்சி என்ன வந்து பாரு.. என்று ஆறுமுகத்துக்கு ஆறுதலும், தைரியமும் சொல்லி அனுப்பினார் வைத்தியர்.
Post a Comment