கொண்டைக் கடலை மசாலா---சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள்: கொண்டைக் கடலை – ஊறவைத்து வேகவைத்தது. உருளைக் கிழங்கு – விருப்பமிருந்தால் – 2 தக்காளி – 4 அல்லது 5 கரம் மசாலா – 1/2 தே...

கொண்டைக் கடலை – ஊறவைத்து வேகவைத்தது.
உருளைக் கிழங்கு – விருப்பமிருந்தால் – 2
தக்காளி – 4 அல்லது 5
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள்
உப்பு
அரைக்க:
இஞ்சி - 3/4 இன்ச்
பூண்டு – 3 பல்
பச்சைமிளகாய் – 3 அல்லது 4
மல்லித்தூள் (அல்லது வறுத்த மல்லி) – 2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய்
கடுகு+உளுந்தம்பருப்பு
வெங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
- ஊறவைத்த கொண்டைக் கடலையை நன்றாக குக்கரில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும்.
- உருளைக் கிழங்கை நறுக்கிக் கொள்ளவும்
- வெங்காயத்தை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
- தக்காளியை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
- அடுப்பில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம் வதக்கவும்.
- கொ.கடலை, உ.கிழங்கு மற்றும் தக்காளி சேர்க்கவும்
- தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
- மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.
- மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, ப. மிளகாய் மற்றும் மல்லித்தூள் ஆகியவற்றை அரைக்கவும்.
- அடுப்பில் உள்ள குழம்பில் அரைத்தவற்றையும் சேர்க்கவும்.
- நன்றாக காய்ந்ததும் இறக்கிவிடவும்.
Post a Comment