குழந்தைகளின் ஞாபக சக்திக்கு--எளிய மருத்துவம்..--இய‌ற்கை வைத்தியம்

இன்றைய தலைமுறையினர் தங்களின் குழந்தைகள் ஞானக் குழந்தைகளாக மாற வேண்டும் என்று நினைக்கின்றனர்.  இதனால் பிறந்து ஒருவருடம் முடிந்தவுடனே குழந்தைக...

இன்றைய தலைமுறையினர் தங்களின் குழந்தைகள் ஞானக் குழந்தைகளாக மாற வேண்டும் என்று நினைக்கின்றனர்.  இதனால் பிறந்து ஒருவருடம் முடிந்தவுடனே குழந்தைகளுக்கு பல்வேறு பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கின்றனர்.  ஓடி விளையாட வேண்டிய வயதில் பயிற்சி என்ற பெயரில் குழந்தைகளுக்கு மன அழுத்தைத்தைக் கொடுக்கும் நிகழ்வுகளைத்தான் தற்போது செய்கின்றனர் பெற்றோர்கள்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது தற்போது இல்லாமலே போய்விட்டது.  வீடியோகேம், கம்ப்யூட்டர் கேம் தான் விளையாட்டு.

ஆனால் இவை உடலுக்கு பயிற்சி கொடுப்பது இல்லை.  போதாக்குறைக்கு மனதிற்கு அழுத்தத்தைக் கொடுப்பதாகத்தான் இருக்கின்றன.

ஆடி, ஓடி விளையாடினால்தான் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி உண்டாகும். குழந்தைகளின் உடல் வளர்ச்சி சீராக இருக்கும்.

இதனால்தான் பழங்காலத்தில் குழந்தைகளை ஆடி ஓடி விளையாட முன்னோர்கள் அனுமதித்தனர்.

ஆனால், இன்றைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை.  பள்ளியில் முதல் மார்க் வாங்கவேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு குழந்தைகளுக்கு அதிகம் பாடச் சுமைகளைக் கொடுக்கிறார்கள்.

இத்தகைய காரணங்களால் குழந்தைகள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி உடல் சோர்ந்து மனமும் சோர்ந்து காணப்படுவார்கள்.  இந்நிலையில் குழந்தைகளுக்கு ஞாபக மறதி உண்டாகிறது.  இத்தகைய மறதிக்கு, உளவியல் காரணத்தோடு, இரும்புச்சத்து பற்றாக்குறையும் ஒரு காரணம் என்று கண்டுபிடித்துள்ளனர்.  குழந்தைகளுக்கு ஏற்படும் இக்குறையைப் போக்க ஒரு எளிய மருத்துவம்.. 

இதற்கு

வல்லாரைக்கீரை    - 1 கைப்பிடி
ஆரைக்கீரை        - 1 கைப்பிடி
மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி
சீரகம்        - 1 ஸ்பூன்
சோம்பு        - 1 ஸ்பூன்
மிளகு        - 5
சின்ன வெங்காயம்    - 5
பூண்டுப்பல்        - 2

இவற்றை எடுத்து சூப் செய்து காலை மாலை என இருவேளையும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஞாபக மறதி நீங்கும்.  இரத்தத்தில் இரும்புச்சத்து அதிகரித்து உடல் சோர்வு நீங்கும்.

மேலும், வல்லாரை இலையை காயவைத்து பொடியாக்கி தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து காலையில் கொடுத்துவந்தாலும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.  நரம்புகள் பலப்படும். இதனால் குழந்தைகள் ஆடி, ஓடி விளையாட முடியும்.  அசதி பறந்தோடிவிடும்.

Related

மருத்துவ டிப்ஸ் 6029616421857352107

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item