முளைப்பயிறு அவல் சாலட்:---பழங்களின் பயன்கள்
முளைப்பயிறு அவல் சாலட்: முளைகட்டிய பயிறு, ஊற வைத்த அவலுடன், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு , 1ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து...

முளைகட்டிய பயிறு, ஊற வைத்த அவலுடன், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு , 1ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் கழித்து சாப்பிடவும்.. சுவையான சத்தான அவல் சாலட் ரெடி..
மருத்துவ குணங்கள்:
உடலில் இருக்கும் வெப்பத்தினை தணிக்கிறது, மலசிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது, இந்த சாலட்டை சுகர்காரங்க சாப்பிடுவது நல்லது.
தக்காளி சாலட்:
தக்காளியினை சின்ன சின்ன துண்டாக நறுக்கி அதன் மீது மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
வெள்ளரி , தயிர் சாலட்:
திக்கான தயிரில் வட்டமாக நறுக்கிய வெள்ளரிக்காயினை போட்டு அதில் மிளகுத்தூள், உப்பு, சீரகத்தூள் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.. வெயில் காலத்துக்கு ஏற்ற சாலட் இது.
Post a Comment