கெண்டைக்கால்ல ஒரு கட்டி வந்திருக்கு--இயற்கை வைத்தியம்
கெண்டைக்கால்ல ஒரு கட்டி வந்திருக்கு.. அந்த கட்டியால அரையாப்புல நெறிகட்டி சிவந்திருக்கு.. இதனால நடக்க முடியாம ஒரே புடுங்கலா இருக்கு இப்போ கட...

https://pettagum.blogspot.com/2011/12/blog-post_9731.html
கெண்டைக்கால்ல ஒரு கட்டி வந்திருக்கு.. அந்த கட்டியால அரையாப்புல நெறிகட்டி சிவந்திருக்கு.. இதனால நடக்க முடியாம ஒரே புடுங்கலா இருக்கு
இப்போ கட்டிக்கு மேல பூசறதுக்கு மருந்து சொல்றேன் கவனமா கேட்டுக்க..
முருங்கை இலை
வேப்பிலை
கோவை இலை
இது மூணுலயும் சம அளவா 1 கைப்பிடி எடுத்து அதோட
மஞ்சள் - 1 துண்டு
சின்ன வெங்காயம் - 1
வசம்பு - 1 துண்டு
இது எல்லாத்தையும் ஒண்ணா சேத்து மைபோல அரச்சி கட்டிமேல பூசிக்கிட்டு வா கட்டி சீக்கிரம் ஆறிடும்.
அப்புறம்...
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக் காய், இது மூணையும் சம எடை வாங்கி ஒண்ணா சேத்து பொடியாக்கி தெனமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேன்ல கலந்து சாப்பிடச் சொல்லு. ராத்திரி படுக்கும்போது தெனமும் 1 டம்ளர் பால் சாப்பிடச் சொல்லு. உப்பு, புளி காரம் கொறச்சிக்கச் சொல்லு.. கட்டி தானா மறஞ்சிடும்.
மருந்தைச் சொல்லிவிட்டு, வைத்தியர் மீண்டும் தெருவில் சாரைசாரையாக சென்றுகொண்டிருக்கும் குழந்தைகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்.
Post a Comment