உளுந்து அடை--சமையல் குறிப்புகள்
சுவையான உளுந்து அடை செய்வதற்கான எளிய குறிப்பு. தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 /2 கப் புழுங்கல் அரிசி – 1 /2 கப் கறுப்பு உளுந்து – 1 /...
சுவையான உளுந்து அடை செய்வதற்கான எளிய குறிப்பு.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி – 1 /2 கப்
- புழுங்கல் அரிசி – 1 /2 கப்
- கறுப்பு உளுந்து – 1 /2 கப்
- வர மிளகாய் – 4
- மிளகு – 15
- சீரகம் – 1 /2 தேக்கரண்டி
- பெருங்காயம் – சிறு துண்டு
- தேங்காய் – சிறிது
- கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிது
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
- அரிசி, பருப்பு ஆகியவற்றை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- இதனுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து பெரிய ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
- எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்த மாவில் கொட்டிக் கலக்கி தோசை ஊற்றவும்.
Post a Comment