30 வகை இனிப்பு, காரம் பலகாரம்! 30 நாள் 30 வகை சமையல்

தேவையானவை: சர்க்கரை இல்லாத கோவா - அரை கப், சர்க்கரை - கால் கப், மஞ்சள் ஃபுட் கலர் - கால் டீஸ்பூன். தேங்காய் பூரணத்துக்கு: தேங்காய் துருவல் ...

தேவையானவை: சர்க்கரை இல்லாத கோவா - அரை கப், சர்க்கரை - கால் கப், மஞ்சள் ஃபுட் கலர் - கால் டீஸ்பூன். தேங்காய் பூரணத்துக்கு: தேங்காய் துருவல் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் கப். செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தேங்காய் துருவலை சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கி ஆறவிடவும். பூரணம் ரெடி! மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் கோவா, சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்து, கையில் ஒட்டாமல் வரும்வரை கிளறி ஆற விடவும். இப்போது இந்த கோவாவிலிருந்து சிறிய உருண்டையை எடுத்து உள்ளங்கையில் வைத்துத் தட்டி, நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, நன்றாக உருட்டி வைக்கவும். லேசான சூட்டில் லட்டின் மேல் லேசாக கத்தியால் கீறிவிடவும். தேவையானவை: அரிசி மாவு - அரை கப், வறுத்த உளுந்து மாவு - அரை டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசி மாவு, உளுந்து மாவு, வெண்ணெய், கேசரி பவுடர், சீரகம், உப்பு சேர்த்துப் பிசையவும். இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து கைகளினால் முறுக்கு சுற்றவும். முறுக்கு சுற்றத் தெரியாதவர்கள் மாவை அச்சில் போட்டு முறுக்கு சுற்றி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தேவையானவை: வெண்ணெய், சர்க்கரைத்தூள் - தலா அரை கப், மாரி பிஸ்கட் தூள் - ஒரு கப், முந்திரி, பாதாம் தூள் - கால் கப், கோகோ பவுடர், சாக்லேட் பவுடர் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், கொப்பரை தேங்காய் துருவல் - தேவையான அளவு. சாக்லேட் ஐசிங் செய்ய: ஐஸிங் சர்க்கரை (எல்லா டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கும்) - ஒரு கப், கோகோ பவுடர் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், சுடுநீர் - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன், செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரைத்தூள் சேர்த்து மிருதுவாகக் குழைக்கவும். இதில் பொடித்த முந்திரி, பாதாம் தூள், பிஸ்கட் தூள், கோகோ பவுடர், சாக்லேட் பவுடர், எசன்ஸ் சேர்த்து நன்றாகப் பிசைந்து, சிறிய உருண்டைகளாக செய்து வைக்கவும். (உருட்ட வராமல் போனால், இன்னும் சிறிது பிஸ்கட் தூளை சேர்த்துக் கொள்ளலாம்) கோகோ பவுடர், ஐஸிங் சர்க்கரை இரண்டையும் சுடு தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். சாக்லேட் ஐசிங் ரெடி! ஒரு தட்டில் கொப்பரை தேங்காயை தூவவும். ஏற்கெனவே தயாரித்துள்ள உருண்டைகளை இந்த சாக்லேட் ஐசிங்-ல் அமிழ்த்தி, தேங்காய் துருவலில் புரட்டி எடுக்கவும். தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், சோள மாவு - அரை கப், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், கடலை மாவு - ஒரு சிறிய கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசி மாவு, சோள மாவு, பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து தேன்குழல் அச்சில் போட்டுப் பிழியவும். இதை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தேவையானவை: விதை நீக்கிய பேரீச்சம்பழம் - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், பால் - ஒன்றரை கப், சர்க்கரை - 2 கப், நெய் - கால் கப். செய்முறை: பேரீச்சம்பழத் துண்டுகளை பாலில் அரைமணி நேரம் ஊற வைத்து, தேங்காய் துருவலுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் விழுதைப் போட்டு சர்க்கரை சேர்த்துக் கிளறவும். நெய் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும். கலவை கெட்டியாக, ஓரங்களில் ஒட்டாமல் வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டி லேசான சூட்டில் துண்டுகள் போடவும். தீபாவளிக்கு முந்தைய நாள் (முதல் நாள்) 'தன த்ரயோதசி'. ஹிமா என்ற மன்னனின் மகனுக்கு திருமணமான 4-வது நாள் மரணம் என்ற சாபம் இருந்தது. இதை அறிந்த அவன் மனைவி அவனை உறங்கவிடாமல் வீடெங்கும் விளக்குகள் ஏற்றி வைத்து பாடல்கள் பாடிக்கொண்டிருந்தாள். பாம்பு உருவத்தில் அவனது உயிரை எடுக்க வந்த எமன் விளக்குகளின் ஒளியிலும் பாடலின் இசையிலும் மயங்கி அவன் உயிரை எடுக்காமல் சென்றுவிட்டான். அதன் பிறகு விளக்குகள் ஏற்றி வைத்து ஆராதிப்பது வழக்கமாகி விட்டது. தேவையானவை: மைதா மாவு - அரை கப், இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மைதா மாவுடன் இஞ்சி விழுது, மிளகுத்தூள், மசாலாத்தூள், வெண்ணெய், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் உப்பு சேர்த்துப் பிசையவும். இந்த மாவில் சிறிது எடுத்து சப்பாத்திகளாக இடவும். அதன்மேல் ஒரு சிறிய டப்பாவின் மூடியை வைத்து வட்டமாக வெட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். தீபாவளிக்கு மறுநாளை (மூன்றாவது நாள்) வட இந்தியர்கள் 'கோவர்த்தன பூஜை'யாகக் கொண்டாடுகிறார்கள். கிருஷ்ண பரமாத்மா கோவர்த்தன மலையைத் தூக்கி பெருமழையிலிருந்து மக்களைக் காத்த தினம் இது. தேவையானவை: பால் பவுடர், துருவிய தேங்காய், சர்க்கரைத்தூள் - தலா அரை கப். செய்முறை: பால் பவுடர், தேங்காய், சர்க்கரைத்தூள் மூன்றையும் நன்றாகப் பிசைந்து தட்டில் கொட்டி சமப்படுத்தி, ஃபிரிட்ஜில் வைத்து செட் ஆனதும் துண்டுகள் போடவும். தீபாவளிக்கு மறுநாள் லக்ஷ்மி பூஜையும் கூட. அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைந்தபோது லஷ்மி பாற்கடலிலிருந்து வெளிவந்த தினம் இது. தேவையானவை: கொள்ளு, கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, அவல், வறுத்த பாதாம், முந்திரி, வேர்க்கடலை, கலர் காராபூந்தி (கடலைமாவில் விரும்பிய கலர் பொடியை சேர்த்து தண்ணீர் விட்டுக் கரைத்து பூந்தி கரண்டியில் தேய்த்து பொரித்தெடுக்கவும்), ஓமம், அரிசி மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அவல், கறிவேப்பிலையை பொரிக்கவும். கடலைப்பருப்பு, கொள்ளு இரண்டையும் தனித் தனியே ஊற வைத்து, உலர்த்தி பொரித்துக் கொள்ளவும். கடலைமாவு, அரிசி மாவு, ஓமம், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து ஓமப்பொடி அச்சில் போட்டுப் பிழிந்து கொள்ளவும். பொரித்த கொள்ளு, கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, வறுத்த பாதாம், முந்திரி, வேர்க்கடலை, கலர் காராபூந்தி, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வறுத்த கறிவேப்பிலை, ஓமப்பொடி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாகக் குலுக்கி காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். குழந்தைகளுக்குப் பிடித்த கலர் சீரக மிட்டாய்களை வாங்கி மிக்ஸருடன் கலக்கலாம். நாலாவது நாள் அன்னகூடை தினமாக மதுராவில் கொண்டாடப்படுகிறது. எல்லா விதமான இனிப்புகளும் 'போக்' என்ற பெயரில் மலைபோல் குவிக்கப்படுகிறது. பாலாபிஷேகம், அலங்காரங்கள் முடிந்து 'போக்' பிரசாதமாக படைக்கப்படுகிறது. தேவையானவை: மைதா - 2 கப், வெண்ணெய் - அரை கப், எண்ணெய் - தேவையான அளவு, வெல்லம் - அரை கிலோ. செய்முறை: மைதாவுடன் வெண்ணெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). இந்த மாவில் சிறிது எடுத்து சப்பாத்திகளாக இட்டு, கத்தியால் துண்டுகள் போடவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, அதில் இந்தத் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். பொரித்த சப்பாத்தித் துண்டு ஒரு கப் என்றால் வெல்லம் 2 கப் எடுத்துக் கொள்ள வேண்டும். கடாயில் சிறிது தண்ணீர் விட்டு அதில் வெல்லத்தைப் போட்டு, பாகு வைக்கவும் (சிறிது பாகை தண்ணீரில் விட்டு, கையில் எடுத்தால் உருட்ட வர வேண்டும். இதுதான் பதம்). இந்தப் பாகை, பொரித்து வைத்துள்ள துக்கடாவின் மேல் விட்டுக் கலக்கவும். ஆறியதும் எடுத்து டப்பாவில் வைக்கவும். ஐந்தாவது நாளுக்கு 'பையா தூஜ்' என்று பெயர். சகோதரர்களை வீட்டுக்கு அழைத்து ஆரத்தி எடுத்து அவர்கள் நெற்றியில் திலகமிடுவது பெண்களின் வழக்கம். அப்படிச் செய்தால் சகோதரருக்கு நீண்ட ஆயுளும் வெற்றியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தேவையானவை: வறுத்து அரைத்த உளுந்து மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - அரை கப், புதினா - ஒரு கைப்பிடி, இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: புதினாவை அரைத்து அரிசி மாவில் போட்டு, உளுந்து மாவு, இஞ்சி விழுது, மசாலாத்தூள், வெண்ணெய், சீரகம், மிளகுத்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துப் பிசையவும். சின்னச் சீடைகளாக உருட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், மிதமான தீயில் உருட்டிய சீடைகளைப் போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். தேவையானவை: அரிசி - 4 கப், பயத்தம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா அரை கப், வெண்ணெய் அல்லது நெய் - கால் கப், வெல்லம் - ஒரு கிலோ, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: அரிசி, பயத்தம்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் தண்ணீர் விட்டு நெய் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துக் கொள்ளவும். பெரிய துளை உள்ள முறுக்கு அச்சில் மாவைப் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும். இதை சிறிய துண்டுகளாக ஒடித்து வைக்கவும். ஒரு கப் முறுக்கு துண்டுகளுக்கு 2 கப் வெல்லம் என எடுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு, இளம் பாகு பதம் (உருட்டும் பதம்) வந்ததும் எடுத்து, முறுக்கு துண்டுகளின் மேல் விடவும். ஆறியதும் தனித் தனியாக வந்து விடும். தேவையானவை: ஆப்பிள் துண்டுகள் - 6, கடலை மாவு, அரிசி மாவு - ஒரு கப், வெண்ணெய் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஆப்பிள் துண்டுகளை தோல் சீவி நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, வெண்ணெய், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசையவும். மாவை நாடா அச்சில் போட்டு, எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும்.. சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகமாக தங்கியிருக்கும் 'லிட்டில் இந்தியா'வில் தீபாவளியன்று 2 கி.மீ. தூரத்துக்கு ஒளி விளக்குகள் பிரகாசிக்கும். தேவையானவை: விதை நீக்கிய பேரீச்சம்பழ துண்டுகள் - ஒரு கப், பால் - அரை கப், முந்திரி, தேங்காய் துருவல் - தலா ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப். செய்முறை: முந்திரியை அரை மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து நீரை வடித்து, தேங்காய் துருவலுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை கடாயில் போட்டு சிறிது நேரம் வதக்கி, சர்க்கரை சேர்த்து கெட்டியாக கிளறி எடுத்து வைக்கவும். பேரீச்சம்பழத்துடன் சிறிது பால் சேர்த்து மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். முந்திரி விழுதை வடைபோல் தட்டி நடுவில் பேரீச்சை உருண்டையை வைத்து மூடி, விரும்பிய வடிவத்தில் தட்டி வைக்கவும். தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், வெற்றிலை - இரண்டு, ஓமம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, மிளகு - 2 டீஸ்பூன், பூண்டு - 4 பல், துளசி இலை - ஒரு கைப்பிடி, வறுத்து அரைத்த உளுந்து மாவு - 2 டேபிள்ஸ்பூன், கடலை மாவு - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு, வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: வெற்றிலை, துளசி, இஞ்சி, பூண்டு, மிளகு, ஓமம் ஆகியற்றை மிக்ஸியில் நைஸாக அரைத்து அரிசி மாவு, கடலை மாவு, வறுத்த உளுந்து மாவு, உப்பு, வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவில் சிறிது எடுத்து முறுக்கு அச்சில் போட்டு காயும் எண்ணெயில் பிழிந்து வேகவிட்டு எடுக்கவும். தேவையானவை: அரிசி மாவு, வறுத்து அரைத்த கம்பு மாவு, வறுத்த தினை மாவு, கேழ்வரகு மாவு - தலா ஒரு கப், வெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன், எள் - 4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசி மாவுடன் கம்பு மாவு, திணை மாவு, கேழ்வரகு மாவு, வெண்ணெய், எள், மிளகாய்த்தூள், உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவில் சிறிது எடுத்து உருட்டி ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு தட்டவும். இதை எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். தேவையானவை: கசகசா - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், முந்திரித்தூள், பொட்டுக்கடலை, தேங்காய் துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன், ரவை - ஒரு கப் (மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்), உப்பு - கால் டீஸ்பூன், நெய் - 4 டேபிள்ஸ்பூன், சர்க்கரைத்தூள் - 6 டேபிள்ஸ்பூன். செய்முறை: மாவாக அரைத்த ரவையுடன் கால் டீஸ்பூன் நெய் விட்டு, சிறிது தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். திரும்பவும் பிசைந்து, 10 முதல் 15 நிமிடம் ஊற விடவும். கசகசா, பொட்டுக்கடலை, தேங்காய் துருவல் இவற்றை லேசாக வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், உப்பு, சர்க்கரைத்தூள், முந்திரித்தூள் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து நன்றாகக் கலக்கவும். ஊறிய ரவை மாவிலிருந்து சிறிது எடுத்து அப்பளமாக இடவும். நடுவில் பொட்டுக்கடலை பூரணத்தை ஒரு டேபிள்ஸ்பூன் வைத்து ஓரங்களில் தண்ணீர் தொட்டு நன்றாக அழுத்தி மூடி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

Related

30 நாள் 30 வகை சமையல் 6565142629947020693

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item