நாண்--சமையல் குறிப்புகள்
நாண் வட இந்திய உணவுகளில் மிகவும் பிரபலமானது. நாண் தந்தூரி அவன் மூலம் பேக் செய்யப்படுக்கிறது. நாணில் மேலே அலங்கரிக்க கடுகு, சீரகம், வெங்க...
நாண் வட இந்திய உணவுகளில் மிகவும் பிரபலமானது. நாண் தந்தூரி அவன் மூலம் பேக் செய்யப்படுக்கிறது. நாணில் மேலே அலங்கரிக்க கடுகு, சீரகம், வெங்காய விதை, சோம்பு, பொடியாக நறுக்கிய மல்லிதழை, வதக்கிய பூண்டு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது . நாண் செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
- ஈஸ்ட்(Active dry yeast) – 1 பாக்கெட்(1 /4 அவுன்ஸ்)
- சர்க்கரை – 1 தேக்கரண்டி
- வெதுவெதுப்பான பால்(110-115°F) – 3 மேசைக்கரண்டி
- மைதா – 4 கப்
- தயிர் – 1 /2 கப்
- வெதுவெதுப்பான பால்(110-115°F) – 1 /2 கப்
- முட்டை அடித்தது – 1
- எண்ணெய் அல்லது வெண்ணெய் உருக்கியது – 1 மேசைக்கரண்டி
- உப்பு – 1 /2 தேக்கரண்டி
அலங்கரிக்க
நாணில் மேலே அலங்கரிக்க கொடுத்துள்ள பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். கடுகு, சீரகம், வெங்காய விதை, சோம்பு, பொடியாக நறுக்கிய மல்லிதழை, வதக்கிய பூண்டு.
செய்முறை
- நடுத்தரமான பாத்திரத்தில் ஈஸ்ட், சர்க்கரை, 3 மேசைக்கரண்டி வெதுவெதுப்பான பால் சேர்த்து கலந்து மூடி போட்டு 5 -10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
- ஒரு பெரிய கலக்கும் பாத்திரத்தில்(large mixing bowl) மைதா மாவைக் கொட்டி மாவின் நடுவில் ஒரு குழி செய்யவும். அதில் 1 /2 கப் பால்,தயிர் , முட்டை, ஈஸ்ட் அனைத்தையும் சேர்க்கவும். இதனுடன் எண்ணெய் அல்லது வெண்ணெய், உப்பு சேர்க்கவும்.
- மிக்சரை(Mixer) பயன்படுத்தினால், 10 நிமிடங்கள் மிருதுவாகும் வரை அடிக்கவும். அல்லது கையை பயன்படுத்தி பிசைந்தால் அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து தரையில் 10 நிமிடங்கள் மிருதுவாகும் வரை பிசையவும்.
- மாவை உருண்டையாக உருட்டி எண்ணெய் தடவிய பாத்திரத்தில் வைத்து பிளாஸ்டிக் பேப்பரால் மூடி வெது வெதுப்பான இடத்தில் மாவு இரு மடங்காகும் வரை, 1 -2 மணி நேரம் வரை அப்படியே வைக்கவும்.
- பின் உருண்டையை எடுத்து லேசாக உருட்டி, 8 – 10 சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை மீண்டும் பிளாஸ்டிக் பேப்பரினால் மூடி உருண்டை மீண்டும் உருவத்தில் இரு மடங்காகும் வரை வைக்கவும்.
- பேகிங் சீட்டை அவனில்(oven) வைத்து , அவனை(oven) 475-500°F முன்சூடு செய்யவும்.
- ஒவ்வொரு உருண்டையையும் வட்டமாக( oblong circle) உருட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு வட்டத்தின் மேலும் வெண்ணெய் அல்லது எண்ணையை லேசாக தடவிக் கொள்ளவும். அலங்கரிக்க வேண்டுமெனில் அலங்கரிக்க கொடுத்துள்ள பொருட்களில் ஏதேனும் ஒன்றை தூவி விடலாம். கைகளால் லேசாக அமிழ்த்தி விடவும்.
- அனைத்தையும் பேகிங் சீட்டில் வைத்து 5 நிமிடங்கள் அல்லது லேசாக பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும்.
- விருப்பமெனில் நாணை அவனில் இருந்து எடுத்த பிறகு வெண்ணெய் அல்லது நெய் தடவிக் கொள்ளலாம்.
Post a Comment