சமையலறை குறிப்பு --வீட்டுக்குறிப்புக்கள்
1. கண்ணாடிப் பாத்திரங்களில் உள்ள கறையை நீக்க உப்பும் வினிகரும் உபயோகித்து கழுவலாம். 2 லிப்ஸ்டிக் கறையை போக்க யுக்லிப்டஸ் ( Eucalyptus) ஆயி...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_331.html
1. கண்ணாடிப் பாத்திரங்களில் உள்ள கறையை நீக்க உப்பும் வினிகரும் உபயோகித்து கழுவலாம்.
2 லிப்ஸ்டிக் கறையை போக்க யுக்லிப்டஸ் (Eucalyptus) ஆயில் உபயோகியுங்கள்.
3 எண்ணெய் பிசுக்கு உள்ள பாத்திரங்களைச் சுத்தப்படுத்த முதலில் கடலை மாவைத் தடவி பின் சோப் நீர் கொண்டு அலம்புங்கள்.
4 மட்டன் சிக்கன் இவற்றை அரைக்க மிக்ஸி பயன்படுத்தப்பட்டால் அதன் பின் 2 பிரட் துண்டுகள் போட்டு அரையுங்கள். பிசுக்கும் வாடையும் போயே போச்சு.
5 பாத்திரங்கள் சமையலின் போது அடிப்பிடித்து விட்டால் அதில் சோப் நீரை நிரப்பி 10 நிமிடங்கள் கொதிக்க வைத்தப் பின் கழுவுங்கள்.
நல்லெண்ணெய்
1 நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் ரத்தத்தில் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கிறது.
2 நல்லெண்ணெயில் உள்ள லினோலிக் அமிலம்; ரத்தத்தில் நல்ல கொலஸ்டிராலைக் அதிகரிக்கிறது.
3 ஒற்றை தலைவலி உள்ளவர்கள் நல்லெண்ணெயில் பூண்டு மிளகைத் தட்டிப் போட்டுக் காய்ச்சி ஆறிய பின் தலையில் தேய்த்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
4 முட்டை வெள்ளைக்கரு நல்லெண்ணெய் பாசிப்பயறு மாவு கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் பருக்கள், சுருக்கங்கள் வராது.
5 வெதுவெதுப்பபாக சூடேற்றிய நல்லெண்ணெயைத் தலையில் தடவி மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு வராது. கண்கள் குளிர்ச்சி பெறும். தலை முடி நரை வெடிப்பு இன்றி கண்கள் நன்றாக குளிர்ச்சி பெறும்.
6 குளிர் காலங்களில் தோலில் உள்ள வெடிப்பு நீங்கவும் வெயிற்காலங்களில் தோல் உணர்தல் நீங்கவும் நல்லெண்ணெய் தடவலாம். நல்லெண்ணெயில் உள்ள ஏவையஅin நு தோல் பளப்பளப்பிற்கு மிகவும் அவசியம்.
Post a Comment