தக்காளி ஊத்தாப்பம் --சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 /2 கப் புழுங்கல் அரிசி – 1 /2 கப் தக்காளி – 1 /4 கிலோ ஊற வைத்த கடலைப்பருப்பு – 1 மேசைக்கரண்டி பொடியா...
தேவையான பொருட்கள்
- பச்சரிசி – 1 /2 கப்
- புழுங்கல் அரிசி – 1 /2 கப்
- தக்காளி – 1 /4 கிலோ
- ஊற வைத்த கடலைப்பருப்பு – 1 மேசைக்கரண்டி
- பொடியாக அரிந்த வெங்காயம் – 1 /4 கப்
- மல்லிதழை, கறிவேப்பிலை – சிறிது
- துருவிய தேங்காய், காரட் – விருப்பத்திற்கேற்ப
- பச்சை மிளகாய் விழுது – 2 – 3 பச்சை மிளகாய்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
- அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- தக்காளியை ஜூஸ் செய்து, அரைத்த மாவில் கொட்டிக் கலக்கவும்.
- இதனுடன் ஊற வைத்த கடலைப்பருப்பு, பொடியாக அரிந்த வெங்காயம், மல்லிதழை, கறிவேப்பிலை, துருவிய தேங்காய், காரட் மற்றும் தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து 2 – 3 மணி நேரம் புளிக்க வைத்த பிறகு ஆப்பம் சுடவும்.
Post a Comment