தாயாவதை தடுக்கும் `பி.சி.ஓ.எஸ்'--ஹெல்த் ஸ்பெஷல்

பெண்களிடம் தற்போது `பி.சி.ஓ.எஸ்' எனப்படும் `பாலிஸிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்' பாதிப்பு பெருகிக் கொண்டிருக்கிறது. இந்த நோயின் அறிகுறிகள...

பெண்களிடம் தற்போது `பி.சி.ஓ.எஸ்' எனப்படும் `பாலிஸிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்' பாதிப்பு பெருகிக் கொண்டிருக்கிறது. இந்த நோயின் அறிகுறிகளை உணர்ந்து சிகிச்சை செய்து கொள்கிறவர்கள் 40 சதவீதம் என்றால், 60 சதவீதம் பேர் அறிகுறியை உணராமல் அந்த நோய்த்தன்மையுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்ற நோய்களைப் போல் இதையும் தொடக்கத்திலே கண்டறிந்தால், எளிதாக கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.

கண்டுபிடித்து, கட்டுப்படுத்தாமலே விட்டால் அது இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் உருவாகும் சூழலை அதிகரிக்கும். குழந்தையின்மைக்கும் இது முக்கிய காரணமாகும். தாய்மையடைய முடியாமல் தவிக்கும் பெண்களில் 60 சதவீதம் பேர் `பி.சி.ஓ.எஸ்` பாதிப்பிற்குள்ளானவர்களாக இருக்கிறார்கள், என்கிறது சமீபத்திய ஆய்வு. பி.சி.ஓ.எஸ். என்றாலே மாதவிலக்கு கோளாறு ஏற்பட வேண்டும் என்பதில்லை. சினைப்பையில் கட்டி இருக்க வேண்டும் என்பதில்லை.

இவை இரண்டும் சரியாக இருந்தாலும், பி.சி.ஓ.எஸ். பாதிப்பு இருக்கும். பி.சி.ஓ.எஸ். பாதிப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும், அது தாய்மைக்கு தடையாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோயாளிகளில் 30 சதவீதத்திற்கு குறைவானவர்களுக்கு மட்டுமே மாதவிலக்கு கோளாறு ஏற்படுகிறது. 9-10 வயது சிறுமிகளாக இருக்கும்போதே பெற்றோர், அவர்களை கவனித்தால், பி.சி.ஓ.எஸ். பாதிப்பை தொடக்கத்திலே கண்டறிந்து விடலாம்.

- சிறுமிகளாக இருக்கும்போதே மார்பக வளர்ச்சி அதிகமாக இருப்பது.

- சிறுவயதிலே பூப்படைவது.

- அதிக எடை.

- அளவுக்கு அதிகமாக மெலிந்து போதல்.

- எப்போதும் படுக்க வேண்டும் என்று தோன்றுதல், படுத்தால் தூக்கம் வராத நிலை.

- பின் கழுத்து, கை மூட்டுகள், கையை மடக்கும் பகுதிகளில் கறுப்பு நிறம் படருதல், முகத்தில் கறுப்பு படை தோன்றுதல்.

- முகத்தில் எண்ணைத் தன்மை அதிகரித்தல். காலை நேரங்களில் மூக்கில் மட்டும் அதிக எண்ணைத்தன்மை தோன்றுதல்.

- ஒற்றைத் தலைவலி. ...

மேற்கண்ட அனைத்தும் இன்சுலின்- லெப்டின் ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மையால் தோன்றுவதாகும். முகத்தின் கீழ் பாகம் மட்டும் குண்டாகுதல், பற்கள் முன்நோக்கி துறுத்துதல், மார்பு பகுதியும்- தோள் பகுதியும் மட்டும் பெரிதாகுதல், கழுத்து குண்டாகுதல் போன்றவை ஸ்டீராய்ட் ஹார்மோனால் ஏற்படும் பாதிப்பாகும்.

ஆறு மாதங்கள் வரை மாதவிலக்கு வராமல் இருத்தல், வந்தாலும் ஒன்றிரண்டு நாட்களில் முடிந்து போதல், அல்லது நிற்காமல் வெளியாகிக் கொண்டிருப்பது, குழந்தையின்மை, 90 நாட்களுக்குள் அபார்ஷன் ஆவது, மீசை வளர்தல், தாடி வளர்தல், உடலில் தேவையற்ற இடங்களில் எல்லாம் முடி வளர்தல், மிக அதிகமாக தலை முடி உதிர்தல் போன்றவைகளும் பி.சி.ஓ.எஸ். அறிகுறிகளாகும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 3180967013978383021

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item