பீட்ரூட் கோலா....சமையல் குறிப்பு
பீட்ரூட் கோலா. தேவையான பொருட்கள் பீட்ரூட் - 1/2 கிலோ தேங்காய் - 1/2 மூடி பொட்டுக்கடலை - ஒரு கப் சின்ன வெங்காயம் - 8 இஞ்சி பூண்டு விழுது - ...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_342.html
பீட்ரூட் கோலா.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 1/2 கிலோ
தேங்காய் - 1/2 மூடி
பொட்டுக்கடலை - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 8
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 6
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை கிராம்பு - சிறிதளவு
மஞ்சள்பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பச்சைக் கொத்துமல்லி - கைப்பிடி அளவு
ரீபைண்ட் எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
* பீட்ரூட்டை தோல் சீவி, பூப்போல துருவிக் கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து பீட்ரூட் துருவலைப் போட்டு தண்ணீர் சத்து இல்லாமல் சுருள வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* பொட்டுக் கடலையை தண்ணீர் விடாமல் நைசாக மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.
* தேங்காயுடன், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, பட்டை கிராம்பு, மஞ்சள்பொடி உப்பு, பச்சைக் கொத்துமல்லி சேர்த்து அரைக்கவும். தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியாக நைசாக அரைத்துக் கொள்ளவும்.
* அரைத்த விழுதுடன், பீட்ரூட் துருவல் சேர்த்து கலவை கெட்டியாக வருமாறு பொட்டுக்கடலை மாவை சேர்த்து பிசிறி மாவுக்கலவை தயாரிக்கவும். மாவுக்கலவை கெட்டியாக இருந்தால்தான் எண்ணெய் அதிகம் குடிக்காது.
* மாவை சிறு எலுமிச்சை உருண்டைகளாக உருட்டி சூடான ரீபைண்ட் எண்ணையில் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு
* வாழைக்காயை இட்லி தட்டில் வேக வைத்து துருவியும் இதேபோல் கோலா செய்யலாம்.
* முள்ளங்கியை துருவி வதக்கிப்போட்டு இதேபோல் கோலா செய்யலாம்.
* விருந்தின்போது பிரைட் ரைஸ், பிரியாணிக்கு ஏற்ற துணைப் பதார்த்தம் இது.
* கோலாவை ரொம்ப முறுக விடாமல் எடுத்து கோலா உருண்டை குழம்பு தயாரிக்கலாம்.
Post a Comment