தயிர் ஜிலேபி தேவையானவை: பச்சரிசி மாவு - 4 கப், உளுந்து மாவு - 3 கப், தயிர் - 6 கப், சர்க்கரை - 400 கிராம், ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன், க...

தயிர் ஜிலேபி
தேவையானவை: பச்சரிசி மாவு - 4 கப், உளுந்து மாவு - 3 கப், தயிர் - 6 கப், சர்க்கரை - 400 கிராம், ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: பச்சரிசி மாவு, உளுந்து மாவு மாவு, தயிர் மூன்றையும் ஒன்றாகக் கலந்து 24 மணி நேரம் ஊற விடவும். சர்க்கரையை இளம் பாகு பதத்தில் காய்ச்சி... ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்க்கவும்.
தட்டையான கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அடுப்பை 'சிம்’மில் வைக்கவும். கரைத்து வைத்துள்ள மாவிலிருந்து ஜிலேபிகள் பிழிந்து, நன்கு வெந்ததும் எடுக்கவும். அவற்றை பாகில் போட்டு தோய்த்து, வேறு பாத்திரத்தில் வைக்க... சூப்பரான தயிர் ஜிலேபி ரெடி!
தயிர் ஜிலேபி: பச்சரிசி மாவுடன் சிறிதளவு சோள மாவும் சேர்த்தால் கெட்டியாகவும், கூடுதல் சுவையுடனும் இருக்கும்.
---------------------------------------------------------
Post a Comment