முட்டை புஜ்ஜிமா--சமையல் குறிப்பு
முட்டை புஜ்ஜிமா தேவையான பொருட்கள் முட்டை - 4 வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 100 கிராம் பச்சை மிளகாய் - 4 பால் - 4 டீஸ்பூன் மிளகுத்தூள் - ...

https://pettagum.blogspot.com/2011/09/blog-post_8101.html
முட்டை புஜ்ஜிமா
தேவையான பொருட்கள்
முட்டை - 4
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
பால் - 4 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முட்டை புஜ்ஜிமா
வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கியவுடன் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி கிளறி விடவும்.இப்போது பால்,மிளகுத்தூள்,தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.கலவையுடன் முட்டை சேர்த்து வெந்து உதிரி உதிரியாக வந்தவுடன் இறக்கிவிடவும்.
Post a Comment