கோவைக்காய் தயிர் பச்சடி--சமையல் குறிப்பு
கோவைக்காய் தயிர் பச்சடி தயிரை நன்றாகக் கடைந்து, உப்பு மற்றும் சர்க்கரை சிறிதளவு சேர்த்து, அதில் கடுகையும் தாளித்துச் சேர்க்கவும். பிறகு, 7...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_3140.html
கோவைக்காய் தயிர் பச்சடி
தயிரை நன்றாகக் கடைந்து, உப்பு மற்றும் சர்க்கரை சிறிதளவு சேர்த்து, அதில் கடுகையும் தாளித்துச் சேர்க்கவும். பிறகு, 7 அல்லது 8 கோவைக்காய் துண்டுகளுடன் தேவையான அளவு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல், நறுக்கிய பச்சை மிள காய் 2, பொடித்த பாதாம் பாதாம் பருப்பு 2 ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். இதை தயிருடன் நன்கு கலக்கவும். இந்தப் பச்சடி, சாதத்துக்கும், சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
கமென்ட்: கெட்டித் தயிராக இருப்பது அவசியம். வெங்காயத்துக்குப் பதிலாக ஒரு பல் பூண்டை தட்டியோ அல்லது எண்ணெயில் வதக்கியோ சேர்த்தால் வாசனையாகவும், டேஸ்ட்டாகவும் இருக்கும்.
Post a Comment