முருங்கை மட்டன் குருமா--சமையல் குறிப்பு
முருங்கை மட்டன் குருமா தேவையான பொருட்கள் மட்டன் - 1/2 கிலோ கடலைபருப்பு - 1/2 ஆழாக்கு முருங்கைக்காய் - 4 இஞ்சி - சிறுதுண்டு பூண்டு - 4 பல் த...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_7208.html
முருங்கை மட்டன் குருமா
தேவையான பொருட்கள்
மட்டன் - 1/2 கிலோ
கடலைபருப்பு - 1/2 ஆழாக்கு
முருங்கைக்காய் - 4
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 4 பல்
தேங்காய் - 1/4 மூடி
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 200 கிராம்
பச்சைமிளகாய் - 4
தயிர் - 1 கப்
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா இரண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி
செய்முறை
முருங்கை மட்டன் குருமா
கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.மட்டனை சுத்தம் செய்து வேக வைக்கவும். தேங்காய்,இஞ்சி, பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி இவற்றை நறுக்கி கொள்ளவும். மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கறிவேப்பிலை இவை சேர்த்து தாளிக்கவும்.இப்போது சிறிது தண்ணீர் சேர்த்து கடலைப் பருப்பையும் போடவும்.
தொடர்ந்து வேக வைத்த மட்டன் துண்டுகளையும், முருங்கைக் காய் துண்டுகளையும் சேர்த்து நன்கு வேகவிடவும்.பின் தயிரை சேர்த்து, தொடர்ந்து வெங்காயம், தக்காளி, மிளகாய் இவற்றையும் சேர்த்து வதக்கவும்.திட்டமான தண்ணீர் சேர்த்து கெட்டியாக வேகவைத்து இறக்கினால் நாக்கை சுண்டி இழுக்கும் சுவை நிறைந்த குருமா தயார்.
Post a Comment