பகாரா தொக்கு--சமையல் குறிப்பு
பகாரா தொக்கு இரண்டு கத்திரிக்காயைப் பொடியாக நறுக்கி, நல்லெண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு பெரிய வெங்காயம், 3 பூண்டு...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_15.html
பகாரா தொக்கு
இரண்டு கத்திரிக்காயைப் பொடியாக நறுக்கி, நல்லெண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு பெரிய வெங்காயம், 3 பூண்டு பல், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், கொஞ்சம் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறினால்... படுடேஸ்ட்டான பகாரா தொக்கு ரெடி!
கமென்ட்: கத்திரிக்காயை எண்ணெயில் பொரித்து வதக்கும்போது, வாசனை போய்விடும். சுட்டு வதக்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.
Post a Comment