ரசிக்க ருசிக்க! ரைஸ் கேக்
ரசிக்க ருசிக்க! ரைஸ் கேக் தேவையானவை பச்சரிசி - அரை கப், புழுங்கலரிசி - அரை கப், வாழைப்பழம் - 2, சர்க்கரை - ஒரு கப், தேங்காய் துருவல் - அர...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_4218.html
ரசிக்க ருசிக்க!
ரைஸ் கேக்
தேவையானவை
பச்சரிசி - அரை கப்,
புழுங்கலரிசி - அரை கப்,
வாழைப்பழம் - 2,
சர்க்கரை - ஒரு கப்,
தேங்காய் துருவல் - அரை கப்,
உப்பு - ஒரு டீஸ்பூன்,
ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு, திராட்சை - தலா
ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
சோடா உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: அரிசிகளை 3 மணி நேரம் ஊறவிட்டு, தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். மாவு தளர இருந்தால், ஒரு மெல்லிய துணியில் கட்டிவைத்து நீரை வடிக்கவும். பிறகு, வாழைப்பழத்தையும் சர்க்கரை யையும் சேர்த்து மிக்ஸியில் கூழாக்கி, அரிசி மாவுடன் சேர்த்து உப்பு, சோடா உப்பு, ஏலத்தூள் கலந்து, இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். (முந்தின நாள் இரவே கூட இந்த மாவை தயாரித்து வைத்துக் கொள்ளலாம்).
முந்திரிப்பருப்பை நான்கு துண்டுகளாக உடைத்து, நெய்யில் வறுத்தெடுக்கவும். அதே நெய்யில் திராட்சையையும் வறுக்கவும். குக்கர் பாத் திரத்தில் ஒரு மெல்லிய வெள்ளை துணியை ஈரமாக்கி விரிக்கவும். அதன் மீது, வறுத்த முந்திரி, திராட்சையை தூவி, மேலே ஒன்றரை அங்குல கனத்துக்கு மாவுக்கலவையை ஊற்றி, மீண்டும் முந்திரி, திராட்சையை தூவி மூடவும். இதை அப்படியே குக்கரில் வைத்து, வெயிட் போடாமல் 15 நிமிடங்களுக்கு வேகவைத்தெடுத்து துண்டுகள் போடுங்கள். இதுதான் ரைஸ் கேக்.
குறிப்பு: இட்லி பாத்திரத்தில் காய் வடித்தட்டை கவிழ்த்து போட்டு ஈரத் துணியை விரித்து அதன் மீதும் மாவுக் கலவையை வைத்து வேக வைக்கலாம்.
ரைஸ் கேக்: வாழைப் பழத்துக்குப் பதிலாக ஆப்பிள், பப்பாளி போன்ற பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
---------------------------------------------------------------------------------
Post a Comment