சொக்க வைக்கும் 30 வகை தொக்கு!

சொக்க வைக்கும் 30 வகை தொக்கு! சொக்க வைக்கிற தொக்குவின் ஸ்பெஷாலிட்டியே சொற்ப நிமிடங்களுக்குள் அதைத் தயாரித்து விடலாம் என்பதுதான்! பிஸியான வா...

சொக்க வைக்கும் 30 வகை தொக்கு! சொக்க வைக்கிற தொக்குவின் ஸ்பெஷாலிட்டியே சொற்ப நிமிடங்களுக்குள் அதைத் தயாரித்து விடலாம் என்பதுதான்! பிஸியான வாழ்க்கையில் ருசியாக குழம்பு வைக்க நேரமில்லையே என்று ஏங்கும் அத்தனை பேருக்கும் ‘கவலைப் படாதே சகோதரி’ என்று கை கொடுக்கும் ஒரே அயிட்டம் தொக்குதான்! சாப்பாடு, டிபன் என்று எல்லாவற்றுக்கும் ஏற்றது! ஒரு சில தொக்கு ருசிகள் ஏற்கெனவே உங்களுக்கு பழகிப் போயிருக்கலாம். ஆனால், ‘சுவையரசி’ படைத்துள்ள இந்த 30 வகை தொக்குகளும் உங்கள் நாக்கை ‘ஒன்ஸ்மோர்’ சொல்ல வைக்கும்! ‘அபார டேஸ்ட்’யா என்று ரசிக்க வைக்கும்! ‘‘தொக்குவின் புளி, காரத்தால் ஏற்படும் சூட்டைத் தணிப்பதற்காகவே நல்லெண்ணெயும் வெந்தயமும் அதிகமாகச் சேர்த்திருக்கிறேன்’’ என்கிறார். ரசித்து, சுவைக்க ரெடியா நீங்கள்? பிளம்ஸ் தொக்கு தேவையானவை: துண்டு-களாக நறுக்கிய புளிப்பான பிளம்ஸ் பழம் - ஒரு கப், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வெல்லம் - ஒரு சிறு துண்டு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அடி கனமான கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கி வைத்துள்ள பிளம்ஸ் துண்டுகளைப் போடவும். சிறிது வதங்கியதும் மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, சேர்த்து, சுருள வதங்கியதும் வெல்லம் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும்வரை கிளறி இறக்கவும். ________________________________________ மிளகு-கறிவேப்பிலை தொக்கு தேவையானவை: கறிவேப்பிலை - ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, புளி - கொட்டைப்பாக்கு அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, நல்லெண்ணெய் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு. செய்முறை: மிளகு, காய்ந்த மிளகாய் இரண்டையும் வறுத்து அதனுடன் புளி, கறிவேப்பிலை, வெல்லம், உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். பிறகு அடி கனமான கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரையில் சுருளக் கிளறி இறக்கவும். இது ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. ________________________________________ மாங்காய் இஞ்சி தொக்கு தேவையானவை: மண்போக கழுவி, தோல் சீவி துண்டுகளாக நறுக்கிய மாங்காய் இஞ்சி - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 10, புளி - எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: காய்ந்த மிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். பிறகு, நறுக்கிய மாங்காய் இஞ்சி, புளி, வறுத்த மிளகாய், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் தாளித்து அதில் அரைத்து வைத்துள்ள மாங்காய் இஞ்சியை சேர்த்துக் கிளறி இறக்கவும். ________________________________________ புதினா தொக்கு தேவையானவை: புதினா இலை - 2 கப், பச்சைமிளகாய் - 5, காய்ந்த மிளகாய் - 8, புளி - கொட்டைப்பாக்கு அளவு, நல்லெண்ணெய் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு புதினாவையும், பச்சைமிளகாயையும் லேசாக வதக்கிக் கொள்ளவும். பிறகு, வதக்கிய புதினா, பச்சைமிளகாயுடன், காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடாயில், எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து அரைத்த புதினா, மிளகாய் விழுதைச் சேர்த்து நன்றாகக் கிளறி சுருண்டு வந்ததும் இறக்கி விடவும். ________________________________________ கொத்துமல்லி தொக்கு தேவையானவை: காம்பு ஆய்ந்த பச்சை கொத்துமல்லி - 2 கப், காய்ந்த மிளகாய் - 10, புளி - கொட்டைப்பாக்கு அளவு, நல்லெண்ணெய் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கொத்துமல்லி, காய்ந்த மிளகாய், புளி, உப்பு நான்கையும் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைக்கவும். பிறகு கடாயில், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து அரைத்து வைத்துள்ள கொத்துமல்லி விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை கிளறி இறக்கவும். ________________________________________ தக்காளிக்காய் தொக்கு தேவையானவை: பழுக்காத பச்சைத் தக்காளி (நறுக்கியது) - ஒரு கப், பச்சைமிளகாய் - 10, எலுமிச்சம்பழம் - 1, வெந்தயம் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெந்தயத்தை வெறும் கடாயில் சிவக்க வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தக்காளிக்காய், பச்சைமிளகாய் இரண்டையும் லேசாக வதக்கி, ஆறியவுடன் உப்பு சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள பச்சைத் தக்காளி விழுதைச் சேர்த்து கிளறி, இறக்குவதற்கு 5 நிமிடத்துக்கு முன் எலுமிச்சம்பழ சாறை ஊற்றிக் கிளறி இறக்கவும். பச்சைப் பசேலென்ற இந்தத் தொக்கு சாப்பிட சுவையாக இருக்கும். ________________________________________ மிக்ஸட் வெஜிடபிள் தொக்கு தேவையானவை: நீர் சத்து இல்லாத காய்கறிகள் (நறுக்கியது) - 2 கப், காய்ந்த மிளகாய் - 15, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: காய்கறிகளை அதிக தண்ணீர் ஊற்றாமல் வேகவைத்து வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை லேசாக வறுத்துக் கொள்ளவும். பிறகு, வறுத்த மிளகாய், வேகவைத்த காய்கறிகள், புளி, உப்பு எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், வெந்தயப்பொடி தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து நன்றாக எண்ணெய் ஒட்டாமல் கிளறி, வற்றியதும் இறக்கவும். ________________________________________ வெந்தயத் தொக்கு தேவையானவை: வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 20, புளி - எலுமிச்சை அளவு, கடுகு (பொடிக்க) - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - அரை கப், கடுகு (தாளிக்க) - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெந்தயத்தை சிவக்க வறுத்துக் கொள்ளவும். கடுகை கால் டீஸ்பூன் எண்ணெயில் பொரித்து வைக்கவும், கால் டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும். புளியைச் சுத்தம் செய்து சுடுநீரில் ஊற வைக்கவும். பிறகு, வறுத்த கடுகையும், வெந்தயத்தையும் பொடி செய்து அதனுடன் ஊறவைத்த புளி, வறுத்த மிளகாய், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகைப் போட்டு வெடித்ததும் அரைத்து வைத்துள்ள வெந்தய விழுது, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை கிளறி இறக்கவும். ________________________________________ புளிப்பு மாங்காய் தொக்கு தேவையானவை: தோல் சீவி, செதில் செதிலாக சீவிய புளிப்பு மாங்காய் துண்டுகள் - ஒரு கப், வறுத்து அரைத்த வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, நல்லெண்ணெய் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: காய்ந்த மிளகாயை கால் டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து சீவி வைத்த புளிப்பு மாங்காய் துண்டுகளைச் சேர்த்துக் கிளறவும். சற்று வதங்கியதும் உப்பு, வெந்தயப்பொடி, வறுத்துப் பொடித்து வைத்த மிளகாய்ப்பொடி சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும். ________________________________________ நெல்லிக்காய் தொக்கு தேவையானவை: வேகவைத்து கொட்டை நீக்கிய முழு நெல்லிக் காய் துண்டுகள் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 12, வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், எலுமிச்சம் பழம் - 1, நல்லெண்ணெய் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வேகவைத்த நெல்லிக்காய், காய்ந்த மிளகாய், உப்பு, எல்லாவற்றையும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, மஞ்சள்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்து வைத்துள்ள நெல்லிக்காய் விழுதைச் சேர்த்து கிளறவும். இறக்குவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து கிளறி இறக்கவும். ________________________________________ கருணைக்கிழங்கு தொக்கு தேவையானவை: வேகவைத்த கருணைக்கிழங்கு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 12, புளி - எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கருணைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். புளி, மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை பெருங்காயத்தூள் போட்டுத் தாளித்து அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுதைச் சேர்க்கவும். பிறகு, அதில் மஞ்சள்தூள் போட்டு, சற்று வதங்கி-யதும் மசித்து வைத்துள்ள கருணைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ________________________________________ சின்ன வெங்காயத் தொக்கு தேவையானவை: சின்ன வெங்காயம் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 15, புளி - கொட்டைப்பாக்கு அளவு, எண்ணெய் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சின்ன வெங்காயத்தை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கவும். வதக்கிய வெங்காயம் ஆறியதும் அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும், கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு வெடித்ததும் வெங்காய விழுதைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ________________________________________ பச்சைமிளகாய் தொக்கு தேவையானவை: பச்சைமிளகாய் - ஒரு கப், புளி - எலுமிச்சை அளவு, வெல்லம் - கொட்டைப்பாக்கு அளவு, நல்லெண்ணெய் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பச்சைமிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். அதனுடன் உப்பு, புளி, வெல்லம் சேர்த்து, கெட்டியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து, அரைத்து வைத்துள்ள பச்சைமிளகாய் விழுதைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ________________________________________ புளி இஞ்சித் தொக்கு தேவையானவை: மண் போக கழுவி, தோல் சீவி, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப், புளி - எலுமிச்சை அளவு, வெல்லம் - கொட்டைப்பாக்கு அளவு, நல்லெண்ணெய் - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கி வைத்துள்ள இஞ்சியைப் போட்டு வதக்கவும். சற்று வதங்கியதும், புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும். அதில், உப்பு, வெல்லம் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும். ________________________________________ கீரைத் தொக்கு தேவையானவை: அரைக்கீரை -- 2 கப், பச்சைமிளகாய் - 4, காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்கு அளவு, சின்ன வெங்காயம் - 4, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கீரை, சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இதனுடன், புளி சேர்த்து கெட்டியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, அரைத்த கீரையைப் போட்டு சுருள வதக்கி இறக்கவும். சூடான சாதத்தில் சாப்பிட சுவையாக இருக்கும். குறிப்பு: இரண்டு நாட்களுக்குள் பயன் படுத்திவிடவேண்டும். ________________________________________ புளிப்பு தக்காளித் தொக்கு தேவையானவை: நறுக்கிய புளிப்பு தக்காளி - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 10, நல்லெண்ணெய் - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் காய்ந்த மிளகாயைப் போட்டு லேசாக வறுத்து, தக்காளி சேர்த்து வதக்கவும். சற்று வதங்கி-யதும் இறக்கி, ஆறவைத்து, உப்பு சேர்த்து, கெட்டியாக அரைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங் காயத்தூள் தாளித்து, அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும். மிக்ஸட் ஃப்ருட் தொக்கு தேவையானவை: பழக்கலவை -- 2 கப் (எந்தப் பழம் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்), காய்ந்த மிளகாய் - 10, எண்ணெய் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பழங்களை குக்கரில் வைத்து ஒரு விசில் வரும்வரை வேகவிடவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, மஞ்சள்தூள் தாளித்து, அரைத்த பழக் கலவையைச் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும். பண்டிகை நாட்களில் பழங்கள் மிகுதியாக இருந்துவிடும்போது இது போன்று தொக்கு செய்து சாப்பிடலாம். ________________________________________ சேப்பங்கிழங்கு தொக்கு தேவையானவை: நன்றாக வேகவைத்து தோலுரித்த சேப்பங்கிழங்கு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 10, புளி - கொட்டைப்பாக்கு அளவு, வெல்லம் - கொட்டைப்பாக்கு அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தனியாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சேப்பங்கிழங்கைக் குழைய வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை வறுத்து பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அதில் மசித்து வைத்துள்ள சேப்பங்கிழங்கைப் போடவும். அதனுடன் தனியாத்தூள், மஞ்சள்தூள், வறுத்துப் பொடித்த மிளகாய்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். புளியைக் கெட்டியாகக் கரைத்து, அதனுடன் உப்பு சேர்த்து சேப்பங்கிழங்கு கலவையில் விடவும். எல்லாம் சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் வெல்லத்தைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். சூப்பர் சுவையில் இருக்கும் இந்த சேப்பங்கிழங்கு தொக்கு! ________________________________________ பழ பரங்கிக்காய் தொக்கு தேவையானவை: முற்றிய பரங்கிக்காய் (நறுக்கியது) - ஒரு கப். காய்ந்த மிளகாய் - 5, பச்சைமிளகாய் - 5, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்கு அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பரங்கிக்காயை வதக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு இரண்டையும் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். இதனுடன் பரங்கிக்காய், பச்சைமிளகாய், புளி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, அரைத்த பரங்கிக்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ________________________________________ பேபிகார்ன் தொக்கு தேவையானவை: துண்டுகளாக நறுக்கிய பேபிகார்ன் - ஒரு கப், நறுக்கிய புதினா, மல்லித்தழை - சிறிது, பச்சைமிளகாய் - 3, மிளகாய்தூள் - கால் டீஸ்பூன், கரம்மசாலா தூள் - கால் டீஸ்பூன், பூண்டு - 2 பல், எலுமிச்சம் பழம் - அரை மூடி, எண்ணெய் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பேபிகார்ன் துண்டுகளை குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேகவிடவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு புதினா, மல்லித்தழை, பச்சைமிளகாய் போட்டு வதக்கி, அதனுடன் பூண்டு, பேபிகார்ன் சேர்த்து வதக்கி ஆறியவுடன் அரைக்கவும். கடாயில் மீதி உள்ள எண்ணெயை விட்டு கடுகு, மஞ்சள்தூள் தாளித்து, அரைத்த பேபிஃகார்ன் கலவையைச் சேர்க்கவும். சிறிது வதங்கியதும் அதில் மிளகாய்தூள், கரம்மசாலா தூள் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும். கடைசியாக எலுமிச்சம்பழ சாறை விடவும். சப்பாத்தி, பூரி போன்றவற்றுக்கு தொட்டுக் கொள்ளலாம். ________________________________________ அருநெல்லிக்காய் தொக்கு தேவையானவை: அருநெல்லிக்காய் (கொட்டையில்லாமல் நறுக்கியது) - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 10, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அருநெல்லிக்காயுடன், காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, மஞ்சள்தூள் போட்டு தாளித்து அரைத்த அருநெல்லி கலவையுடன், வெந்தயப்பொடி சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும். ________________________________________ வாழைப்பூ தொக்கு தேவையானவை: நறுக்கிய வாழைப்பூ துண்டுகள் - ஒரு கப், மாங்காய் துண்டுகள் - கால் கப், காய்ந்த மிளகாய் - 10, வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: நறுக்கிய வாழைப்பூ துண்டுகளை வேகவைத்து, நீரை வடித்துக் கொள்ளவும். இதனுடன் மாங்காய், காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயப்பொடி சேர்த்து தாளித்து, அரைத்த விழுதையும் சேர்த்து சுருளக் கிளறி கெட்டியாக வந்ததும் இறக்கவும். வாய்க்கு ருசியாக இருக்கும் இந்த வாழைப்பூ தொக்கு! ________________________________________ கிடாரங்காய் தொக்கு தேவையானவை: உப்பில் ஊற வைத்த கிடாரங்காய் - ஒரு கப் (கிடாரங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 5 நாள் ஊற வைத்து, தினமும் குலுக்கி விடவேண்டும்), காய்ந்த மிளகாய் - 15, வறுத்துப் பொடித்த வெந்தயம் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்து பொடித்துக் கொள்ளவும். பிறகு, மீதி எண்ணெயை விட்டு, கடுகு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, ஊறவைத்த கிடாரங்காயை போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், வெந்தயப்பொடி, வறுத்துப் பொடித்து வைத்த மிளகாய்தூள் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும். ________________________________________ வயலட் கத்தரிக்காய் தொக்கு தேவையானவை: பெரிய துண்டுகளாக நறுக்கிய வயலட் கத்தரிக்காய் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 10, புளி - கொட்டைப்பாக்கு அளவு, எண்ணெய் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கத்தரிக்காயை வதக்கிக் கொள்ளவும். இதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, புளி சேர்த்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில், மீதியுள்ள எண்ணெயை ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள கத்தரிக்காயையும் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும். கத்தரிக்காய் பிடிக்காதவர்கள்கூட இந்த தொக்கை விரும்பி சாப்பிடுவார்கள். நேந்திரங்காய் தொக்கு தேவையானவை: நறுக்கிய நேந்திரங் காய் - ஒரு கப், கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: நேந்திரங்காயைத் தனியாக வதக்கிக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு சேர்த்து வதக்கி வைத்துள்ள நேந்திரங்காயைப் போட்டு மேலும் மிக்ஸியில் ஒரு முறை அரைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்து வைத்துள்ள நேந்திரங்காய் கலவையைப் போட்டு நன்றாக வதக்கி இறக்கவும். ________________________________________ பாவக்காய் தொக்கு தேவையானவை: பொடியாக நறுக்கிய பாவக்காய் - ஒரு கப், புளி - கொட்டைப்பாக்கு அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வெல்லம் - கொட்டைப்பாக்கு அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன். தனியா - ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5, வெந்தயம் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: தனியா, காய்ந்த மிளகாய் மற்றும் வெந்தயத்தை வறுத்து பொடித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய பாவக்காயைப் போடவும். சற்று வதங்கியதும் மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். புளியை கால் கப் தண்ணீரில் கரைத்து, அதில் விட்டு, வெல்லத்தைப் போடவும். எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்து வரும்போது, வறுத்து அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கலந்து சுருண்டு வந்ததும் இறக்கவும். பாவக்காயின் கசப்புத்தன்மை தெரியாமல், சுவையாக இருக்கும். ________________________________________ கோங்கூரா தொக்கு தேவையானவை: புளித்த கீரை - 2 கப், காய்ந்த மிளகாய் - 12, வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்-பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்-தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கீரையை வதக்கிக் கொள்ளவும். இதனுடன், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு தாளித்து அரைத்த கீரை விழுதைச் சேர்ந்து, வெந்தயப் பொடியைச் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து எண்ணெய் பிரிந்துவரும் வரை கிளறி இறக்கவும். ________________________________________ பச்சை சுண்டைக்காய் தொக்கு தேவையானவை: பச்சை சுண்டைக்காய் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 10, புளி - கொட்டைப்பாக்கு அளவு, வெல்லம் - கொட்டைப்பாக்கு அளவு, வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சுண்டைக்காயை நசுக்கி உள்ளே உள்ள விதைகளை அலசி எடுத்து விடவும். அலசிய சுண்டைக்காயை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கவும். ஆறியதும், இதனுடன், காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் தாளித்து அரைத்த சுண்டைக்காய் விழுதைச் சேர்த்துக் கிளறவும். சற்று வதங்கியதும் வெந்தயப்பொடி, வெல்லம் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து வதங்கி சுருண்டு வரும்போது கிளறி இறக்கவும். பச்சை சுண்டைக்காய் நம் உடம்பில் உள்ள கெட்ட நீரை நீக்கும் தன்மை கொண்டது. ________________________________________ எலுமிச்சை இலை தொக்கு தேவையானவை: துளிரான எலுமிச்சை இலை - ஒரு கப், புளி - கொட்டைப்பாக்கு அளவு, வெல்லம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுத்து அதனுடன் எலுமிச்சை இலையைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதனுடன், உப்பு, புளி, வெல்லம் எல்லாவற்றையும் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்த தொக்கு பித்தத்துக்கு மிகவும் நல்லது. ________________________________________ பிரண்டைத் தொக்கு தேவையானவை: பொடியாக நறுக்கிய பிரண்டை - ஒரு கப், எள்ளு - ஒரு டீஸ்பூன், வெல்லம் - கொட்டைப்பாக்கு அளவு, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, மிளகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை - சிறிது, நல்லெண்ணெய் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: எண்ணெய் விடாத வெறும் கடாயில் எள்ளை வறுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு, அதில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மூன்றையும் வறுக்கவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் பிரண்டையை நன்றாக வதக்கிக் கொள்ளவும். வதக்கிய பிரண்டை, கறிவேப்பிலை, புளி, வெல்லம், உப்பு, வறுத்த எள்ளு, மிளகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கெட்டியாக அரைக்கவும் கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள பிரண்டை விழுதைச் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும். வாயு தொல்லைக்கு இந்த பிரண்டைத் தொக்கு சிறந்த நிவாரணி!

Related

30 நாள் 30 வகை சமையல் 923756424533195844

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item