இட்லி முதல் வடை வரை 16 வகை பிரெட் சமையல்!

இட்லி முதல் வடை வரை 16 வகை பிரெட் சமையல்! நம் எல்லோர் வீடுகளிலும் இருக்கிற பிரெட் பாக்கெட்தான்! இதை வைத்து பிரெட் சாண்ட்விச்சும் பிரெட் ஆம்...

இட்லி முதல் வடை வரை 16 வகை பிரெட் சமையல்! நம் எல்லோர் வீடுகளிலும் இருக்கிற பிரெட் பாக்கெட்தான்! இதை வைத்து பிரெட் சாண்ட்விச்சும் பிரெட் ஆம்லெட்டும் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், இட்லி, கொழுக்கட்டை, வடை, போண்டா.. என்றெல்லாம் விதம்விதமாக செய்து ருசித்திருக்கிறீர்களா? அப்படி ஒரு அட்டகாச வாய்ப்பைத்தான் கொடுத்திருக்கிறோம் இந்த இணைப்பிதழில்! சமையல் கலை நிபுணர் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கும் இந்த ரெசிபிகளை டிஷ்களாக்கி, சந்தோஷமாகுங்கள்.. சந்தோஷமாக்குங்கள்! ----------------------------------------------------------- பிரெட் தோசை தேவையானவை: சால்ட் பிரெட் துண்டுகள் - 3 முதல் 4, தோசை மாவு - ஒரு கப், பச்சைமிளகாய் - 2, வெங்காயம் - 1, மல்லித்தழை - சிறிது, எண்ணெய் - தேவை யான அளவு. செய்முறை: வெங்-காயம், பச்சை மிளகாய், மல்லித்-தழை மூன்றையும் பொடியாக நறுக்கி தோசை மாவுடன் சேர்த்து கலக்கவும். பிரெட் துண்டுகளை மாவில் முக்கி, தோசை கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். தக்காளி சாஸ் ஊற்றி பரிமாறவும். ________________________________________ பிரெட் பராத்தா தேவையானவை: பூரணத்துக்கு: உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும்), பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), சால்ட் பிரெட் துண்டுகள் - 3, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. மேல் மாவுக்கு: மைதா - 2 கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு டீஸ்பூன். செய்முறை: மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை சிறிது தண்ணீர் விட்டு கெட்டி பதத்தில் மிருதுவாக பிசையவும். ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை நன்றாக மசித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாயைச் சேர்த்து பிசையவும். பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து, உருளைக் கிழங்கு கலவையுடன் சேர்த்து பிசையவும். இத்துடன் சீரகத்தூள், உப்பு சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிசைந்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து சப்பாத்தி குழவியால் தேய்க்கவும். நடுவில் பிரெட் கலவை உருண்டையை வைத்து மூடி லேசாக பரத்தவும். இதை தோசை கல்லில் போட்டு இரு புறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். ________________________________________ பிரெட் இட்லி தேவையானவை: சால்ட் பிரெட் துண்டுகள் - 4, வேக வைத்த உருளைக்கிழங்கு - 2, தயிர் - ஒரு கப், இஞ்சி - பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1 (துருவியது), பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன். கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்-தழை, உளுத்தம்பருப்பு - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பிரெட் துண்டுகளை ஒரு மூடியின் உதவியால் வட்டமாக வெட்டிக் கெள்ளவும். உருளைக்கிழங்குடன் உப்பு, துருவிய வெங்காயம், பெருங்காயத்தூள், இஞ்சி-பச்சைமிளகாய் விழுதைச் சேர்த்து நன்றாக மசிக்கவும். தயிரைக் கடைந்து, அதில் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். வட்டமாக வெட்டி வைத்துள்ள பிரெட் துண்டில் உருளைக்கிழங்கு பேஸ்ட்டைத் தடவவும். இதன் மேல் சிறிது எண்ணெய் தடவவும். இதே போல் எல்லா துண்டுகளையும் செய்து கொள்ளவும். தோசை கல் காய்ந்ததும், மிதமான தீயில் உருளைக்கிழங்கு பேஸ்ட் கல்லில் படுமாறு பிரெட் வட்டங்களை கவிழ்த்து வைத்து, மேல்புறம் தயிரை சிறிது ஊற்றி, மூடி வைக்கவும். இரண்டு நிமிடம் வேக விட்டு எடுக்கவும். மல்லித்தழை தூவி பரிமாறவும். ________________________________________ பிரெட் உப்புமா தேவையானவை: சால்ட் பிரெட் துண்டுகள் - 10 (மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்), எண்ணெய் - -2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தக்காளி - 2, வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 2 (மூன்றையும் பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு வறுக்கவும். வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். தக்காளி, பச்சைமிளகாயைச் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும். பிறகு பிரெட் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி (தேவைப்பட்டால் எண்ணெய் சிறிது சேர்க்கலாம்) சூடாக பரிமாறவும். ________________________________________ பிரெட் பக்கோடா தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, வேக வைத்த உருளைக்கிழங்கு - 1, பச்சைமிளகாய் - 1, கடுகு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகை தாளித்து, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்க்கவும். பிறகு மஞ்சள்தூள், மசித்த உருளைக்கிழங்குடன் சிறிது உப்பு சேர்த்து மேலும் 3 நிமிடம் வதக்கவும். கடலை மாவில் தண்ணீர், உப்பு, மிளகாய்த்தூள், சமையல் சோடா சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். ஒரு பிரெட் துண்டின் மேல் ஒரு டீஸ்பூன் உருளைக்கிழங்கு கலவையை வைத்து பரப்பவும். அதன்மேல் ஒரு பிரெட் துண்டை வைத்து மூடி, அதை நான்கு துண்டுகளாக்கி, கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். கொத்தமல்லி சட்னி இதற்கு ஏற்ற சைட் டிஷ்! ________________________________________ பிரெட் ஊத்தப்பம் தேவையானவை: சால்ட் பிரெட் துண்டுகள் - 12, புளித்த மோர் - ஒரு கப், பெரிய வெங்காயம், தக்காளி - தலா 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் (அ) எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பிரெட்டின் ஓரங்களை வெட்டி விடவும். அதை மோரில் நனைத்து உப்பு சேர்த்து நைஸாக அரைத்து, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். தோசை கல் காய்ந்ததும், ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி, அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி லேசாக பரத்தவும். அதன் மேல் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், மல்லித்தழை, மிளகுத்தூள் எல்லாவற்றையும் கலந்து ஒரு டீஸ்பூன் தூவி வேக விடவும். மறுபுறம் திருப்பிப்போட்டு எண்ணெய் ஊற்றி பொன்னிறமானதும் எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். ________________________________________ பிரெட் குர்குரே தேவையானவை: சால்ட் பிரெட் துண்டுகள் - 6, கடலை மாவு - ஒன்றரை கப், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கடலை மாவு, வெங்காயம், மிளகாய்த்தூள், மல்லித்தழை, கரம்மசாலா தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். பிரெட்டை சிறு துண்டுகளாக்கி இந்த மாவில் முக்கி எடுத்து, தோசை கல்லில் போடவும். இருபுறமும் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக எடுத்தால் கரகரப்பான குர்குரே ரெடி! இதற்கு கொத்தமல்லி சட்னி நல்ல காம்பினேஷன். ________________________________________ பிரெட் கோஃப்தா தேவையானவை: சால்ட் பிரெட் துண்டுகள் - 8, பால் - தேவையான அளவு, வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 2, (இரண்டையும் பொடியாக நறுக்கவும்), உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து தோலுரிக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன், தக்காளி - 2 (தண்ணீர் விடாமல் அரைத்து சாறு எடுக்கவும்), மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பாலில் பிரெட்டை நனைத்து வேக வைத்த உருளைகிழங்குடன் பிசையவும். உப்பு சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தக்காளி ப்யூரியை (தக்காளி சாறு) ஊற்றி, மிளகாய்த்தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். பரிமாறுவதற்கு முன் பொரித்தெடுத்த பிரெட் கோஃப்தாக்களை அதில் போட்டு மல்லித்தழை தூவி பரிமாறவும். ________________________________________ பிரெட் டோக்ளா தேவையானவை: சால்ட் பிரெட் துண்டுகள் - 4 , கொத்தமல்லி சட்னி (கொத்தமல்லி, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து அரைத்தது) - 2 டேபிள்ஸ்பூன், தயிர் - 4 டேபிள்ஸ்பூன், மிளகு, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், கொப்பரை தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் தயிரை ஊற்றி, உப்பு, மிளகு சேர்க்கவும். கடுகை தனியாக தாளித்து வைத்துக் கொள்ளவும். பிரெட் துண்டுகளில் ஒன்றில் சட்னியையும், மற்றொன்றில் தயிரையும் ஸ்பூனால் பரப்பவும். இரண்டு துண்டுகளையும் ஒன்றாக சேர்த்து சிறிய சதுரங்களாக வெட்டவும். தாளித்த கடுகு, கொப்பரைத் துருவல், மல்லித்தழை தூவி பரிமாறவும். ________________________________________ தக்காளி பிரெட் தேவையானவை: உருளைக்கிழங்கு - 1 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்), தக்காளி - 1 (தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்), கறிவேப்பிலை - சிறிது, பச்சைமிளகாய் - 4, சால்ட் பிரெட் துண்டுகள் - 6, எண்ணெய் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். உருளைக்கிழங்கு வெந்ததும் தக்காளி ப்யூரியை (தக்காளி சாறு) ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும். சாறு கெட்டி யானதும் முக்கால் கப் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், கறி வேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் ஒவ் வொரு பிரெட் துண்டையும் கையால் அழுத்தி சாறில் நனையும்படி செய்யவும். தீயைக் குறைத்து மேலும் 5 நிமி டம் கொதிக்கவிடவும். மல்லித்தழை தூவி பரிமாறவும். ________________________________________ கலர்ஃபுல் பிரெட் சாட் தேவையானவை: கோதுமை பிரெட் துண்டுகள் (பிரவுன் கலர்) - 4, தயிர் - 2 கப், தேன் - ஒரு டேபிள்ஸ்பூன், ஓமப்பொடி, காராபூந்தி - தலா அரை கப், வெங்காயம், தக்காளி, மல்லித்தழை - தலா அரை கப், வறுத்த முந்திரி - அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: தயிரைக் கடைந்து தேன் சேர்த்து தனியே வைக்கவும். பிரெட்டின் ஓரத்தை எடுத்துவிட்டு முக்கோண மாக வெட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித் தெடுக்கவும். அதை பரிமாறும் தட்டில் வரிசையாக அடுக்கி அதன் மேல் ஒரு கரண்டி தேன் கலந்த தயிரை பரவலாக ஊற்றி, வெங்காயம், தக்காளி, மல்லித்தழையைப் பரத்தவும். பிறகு காராபூந்தி, ஓமப்பொடி, மிளகாய்த்தூள், வறுத்த முந்திரி என வரிசையாக தூவி பரிமாறவும். ________________________________________ பிரெட் வெஜ் நூடுல்ஸ் தேவையானவை: சால்ட் பிரெட் - 10 துண்டுகள், கேரட், வெங்காயம், பச்சை பட்டாணி - அரை கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து உடனே பிழியவும். ஐந்திலிருந்து ஆறு துண்டுகளை இதே போல் செய்து கெட்டியாக பிசையவும். அதை தேன்குழல் அச்சில் பிழிந்து ஆவியில் வேக வைத்து எடுத்து ஆற விடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பிறகு, கேரட், பட்டாணி, மிளகாய்த்தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும். இத்துடன் வெந்த பிரெட் நூடுல்ஸை சேர்த்து லேசாக கிளறி, மல்லித்தழை தூவி பரிமாறவும். ________________________________________ பிரெட் வெஜ் ஆம்லெட் தேவையானவை: சால்ட் பிரெட் துண்டுகள் - 6 முதல் 8, கடலை மாவு - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், குடமிளகாய் - அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கடலை மாவில் வெங்காயம், காரட், குடமிளகாய், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். தோசை கல் காய்ந்ததும் சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு பிரெட் துண்டை போட்டு, அதன் மேல் ஒரு கரண்டி கடலைமாவை பரவலாக ஊற்றவும். 2 நிமிடம் கழித்து மெதுவாக மறுபுறம் திருப்பிப் போட்டு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக எடுக்கவும். ________________________________________ பிரெட் போண்டா தேவையானவை: சால்ட் பிரெட் துண்டுகள் - 7, உருளைக்கிழங்கு - 3 (வேகவைத்து தோல் உரித்துக் கொள்ளவும்), பச்சை பட்டாணி - ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), பச்சைமிளகாய் - 2, எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும். பிறகு பட்டாணி, எலுமிச்சை சாறு, சர்க்கரை, உப்பு, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, ஆற வைத்து சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். ஒரு பிரெட் துண்டை தண்ணீரில் நனைத்து உடனே பிழிந்து நடுவில் உருளைக்கிழங்கு உருண்டையை வைத்து மூடி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். ________________________________________ இனிப்பு சேமியா பிரெட் தேவையானவை: இனிப்பு பிரெட் துண்டுகள் - 6, சேமியா - அரை கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், சர்க்கரைத்தூள் - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - கால் டீஸ்பூன், வெண்ணெய் - சிறிது, பாதாம், முந்திரி துண்டுகள் - தலா ஒரு டீஸ்பூன். செய்முறை: கடாய் காய்ந்ததும் நெய் ஊற்றி சேமியாவை வறுக்கவும். அதில் பாலை ஊற்றி கொதிக்க விடவும். சேமியா வெந்ததும் இறக்கி, ஏலக்காய்த்தூள், எசென்ஸ் சேர்த்து முள் கரண்டியால் கிளறி, ஆறவிடவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் குழைத்து, ஆற வைத்த சேமியாவை சேர்த்து கலக்கவும். பிரெட்டை வறுத்து, அதன்மேல் ஒரு டேபிள்ஸ்பூன் சேமியா கலவையைப் பரத்தி, பருப்பு துண்டுகளை தூவி பரிமாறவும். ________________________________________ பிரெட் மாம்பழ சாண்ட்விச் தேவையானவை: ஸ்வீட் பிரெட் துண்டுகள் - 6, மாம்பழம் - 1 (தோலுரித்துக் கொள்ளவும்), வெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: மாம்பழத்தை மெல்லிய வட்டங்களாக நறுக்கி ஃபிரிட்ஜில் வைக்கவும். பிரெட் துண்டுகளை வறுக்கவும். ஒரு பிரெட் துண்டின் மேல் வெண்ணெய் தடவி அதன் மேல் மாம்பழ துண்டுகளை வைத்து, மேல்புறம் மற்றொரு வறுத்த பிரெட் துண்டால் மூடி பரிமாறவும். இதுபோல் 2 (அ) 3 வரிசைகள்கூட செய்யலாம். குறிப்பு: பிரெட் துண்டுகள் சூடாக இருக்கவேண்டும். மாம்பழ துண்டு ஜில்லென்று இருக்க வேண்டும். இது வித்தியாசமான சுவையில் இருக்கும்.

Related

30 நாள் 30 வகை சமையல் 4787778534857476381

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item