சமையல் குறிப்புகள்! சுவையான சம்மந்தி
சம்மந்தி தேவையானவை: சின்ன வெங்காயம் - 4 காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப தனியா - 2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கு ஏற்ப தேங்காய் - சிறிதளவு எ...

https://pettagum.blogspot.com/2011/06/blog-post_9648.html
சம்மந்தி
தேவையானவை:
சின்ன வெங்காயம் - 4
காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
தனியா - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
தேங்காய் - சிறிதளவு
எண்ணெய் - தாளிக்க
செய்முறை:
வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
முதலில் வெறும் கடாயில் காய்ந்த மிளகாய், தனியாவை போட்டு வறுக்கவும்.
பின்பு சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
அதே பாத்திரத்தில் தேங்காயை போட்டு லேசாக பிரட்டி விட்டு எடுக்கவும்.
அனைத்தையும் எடுத்து நன்கு ஆற வைத்து அரைக்கவும்.
சுவையான சம்மந்தி தயார்.
வெங்காயத்தை லேசாக எண்ணெய் தடவி அடுப்பில் சுட்டு செய்தாலும் சுவையாக இருக்கும். எல்லாவற்றுக்கும் ஏற்ற சைடு டிஷ்.
Post a Comment