கரகர..மொறுமொறு.. -30 வகை பக்கோடா!

கரகர..மொறுமொறு.. -30 வகை பக்கோடா! 'காய்கறி தோல் பக்கோடா', 'பால் பக்கோடா' என்று அரிதான 30 வகை பக்கோடாக்களை தொகுத்து, சமைத்து...

கரகர..மொறுமொறு.. -30 வகை பக்கோடா! 'காய்கறி தோல் பக்கோடா', 'பால் பக்கோடா' என்று அரிதான 30 வகை பக்கோடாக்களை தொகுத்து, சமைத்துக் காட்டி அசத்தியிருக்கிறார் 'சுவையரசி' . வெங்காயம் மற்றும் காலிஃப்ளவரில் மட்டுமே பக்கோடாவை அறிந்திருக்கும் நமக்கு, நிச்சயம் இது ஒரு வரப்பிரசாதம் தானே!.. ------------------------------------------------------------------------------------------- முத்து பக்கோடா தேவையானவை: ஜவ்வரிசி - அரை கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊற விடவும். நீரை வடித்து விட்டு, அதில் அரிசி மாவு, எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து, எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும். --------------------------------------------------------------------------------------------- தயிர் பக்கோடா தேவையானவை: பாம்பே ரவை, தயிர் - தலா அரை கப், கடலை மாவு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைமிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பாம்பே ரவையை வெறும் கடாயில் லேசாக வறுத்துக் கொள்ளவும். இதனுடன் தயிர் சேர்த்துக் கலந்து, கடலை மாவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பிறகு, கடலைப்பருப்பையும் உளுத்தம்பருப்பையும் 20 நிமிடம் ஊறவைத்து சேர்க்கவும். பச்சைமிளகாய், தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து உப்பு சேர்த்து, எல்லாவற்றையும் கெட்டியாகக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சிறு சிறு பக்கோடாக்களாக போட்டு பொரித்தெடுக்கவும். ------------------------------------------------------------------------------------------- டிரை ஃபுரூட் பக்கோடா தேவையானவை: முந்திரி - அரை கப், பாதாம், கடலை மாவு - தலா கால் கப், பிஸ்தா - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு, வெண்ணெய், சோளமாவு - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். மிளகை பொடித்துக் கொள்ளவும். கடலை மாவு, சோள மாவு, உப்பு, வெண்ணெய், அரைத்தப் பொடிகள் எல்லாவற்றையும் கலந்து நன்றாகப் பிசறி, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். ---------------------------------------------------------------------------------- சில்லி பக்கோடா தேவையானவை: பொடியாக நறுக்கிய பஜ்ஜி மிளகாய் - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பஜ்ஜி மிளகாய், பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து நெய் விட்டு பிசறி, பிறகு தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். ------------------------------------------------------------------------------------------ தூள் பக்கோடா தேவையானவை: நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒரு கப், கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: வெங்காயத்துடன் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து, சிறிது தண்ணீரைத் தெளித்துப் பிசறவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், பிசைந்த கலவையை நன்றாக கைகளால் உதிர்த்துப் போட்டு உதிரியான பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். ------------------------------------------------------------------------------------------ பழப் பக்கோடா தேவையானவை: தோல் நீக்கி, நறுக்கிய ஆப்பிள், பப்பாளி, விதையில்லாத கொய்யா, மாதுளை எல்லாம் சேர்ந்த கலவை - ஒரு கப், மைதா மாவு - அரை கப், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், கரகரப்பாக பொடித்த காய்ந்த மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பழக்கலவையுடன் மைதா மாவு, சோள மாவு, உப்பு, பொடித்த மிளகாய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கலந்து, சிறு பக்கோடாக்களாக எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். ---------------------------------------------------------------------------------------------- மிக்ஸட் வெஜிடபிள் பக்கோடா தேவையானவை: வெங்காயம், கேரட், பீன்ஸ், குடமிளகாய், பீட்ரூட், அவரைக்காய், உருளைக்கிழங்கு சேர்ந்த காய்கறிக் கலவை, கடலை மாவு - தலா ஒரு கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: காய்கறிகளை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலந்து எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். ------------------------------------------------------------------------------------- இஞ்சி பக்கோடா தேவையானவை: துருவிய இஞ்சி - அரை கப், ரவை - கால் கப், கோதுமை மாவு, சோள மாவு, கடலை மாவு - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: துருவிய இஞ்சியுடன் ரவை, கோதுமை மாவு, சோள மாவு, கடலை மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகக் கலந்து, எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். ------------------------------------------------------------------------------- ஆரஞ்சு தோல் பக்கோடா தேவையானவை: பொடியாக நறுக்கிய ஆரஞ்சு பழத் தோல் - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - கால் கப், அரிசி மாவு, மைதா மாவு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு. செய்முறை: ஆரஞ்சு பழத் தோல், பொட்டுக்கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, கெட்டியாகக் கலந்து கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியையும் சேர்த்துக் கலந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். ----------------------------------------------------------------------------------- கம்பு-கடலை பக்கோடா தேவையானவை: கொண்டக்கடலை, கம்பு மாவு - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 4, பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கொண்டக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, இதனுடன் கம்பு மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயில் விட்டு, காய்ந்ததும் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். ------------------------------------------------------------------------------------- கீரை பக்கோடா தேவையானவை: உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பயத்தம்பருப்பு சேர்ந்த கலவை - ஒரு கப், பொடியாக நறுக்கிய ஏதேனும் ஒரு கீரை - அரை கப், அரிசி - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பச்சைமிளகாய் - 3, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பருப்புக் கலவையுடன், அரிசி, காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைக்கவும். இதனுடன், உப்பு, பெருங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து அதனுடன் கீரையை சேர்த்துக் கலந்து, பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். ---------------------------------------------------------------------------------- நெல்லிக்காய் பக்கோடா தேவையானவை: துருவிய நெல்லிக்காய் - ஒரு கப், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: துருவிய நெல்லிகாயுடன் சோள மாவு, அரிசி மாவு, கடலை மாவு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கெட்டியாகக் கலந்து, தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, எண்ணெயில் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். ------------------------------------------------------------------------------------------- ராகி தேங்காய் பக்கோடா தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒன்றரை கப், பச்சைமிளகாய் விழுது, அரிசி மாவு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், வறுத்த ரவை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: தேங்காயை நன்றாக அரைத்து பாலெடுத்துக் கொள்ளவும். இந்த தேங்காய்ப் பாலில், ராகி மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள் பச்சைமிளகாய் விழுது, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். பிறகு, பக்கோடாக்களாக பொரித்தெக்கவும், ------------------------------------------------------------------------------------- காய்கறி தோல் பக்கோடா தேவையானவை: காய்கறி தோல் கலவை (சௌசௌ, கேரட், பீட்ரூட், பூசணி, கோஸ் இதழ், முள்ளங்கி, வெங்காய இதழ், கொத்தமல்லி தண்டு.. இந்தக் காய்கறிகளை நன்றாகக் கழுவி தோல்களை சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்) - ஒரு கப், கோதுமை மாவு - முக்கால் கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், ரவை - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறி தோல் கலவையைப் போட்டு அதில் கோதுமை மாவு, அரிசி மாவு, ரவை, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாகக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். ------------------------------------------------------------------------------------------ வெண்டைக்காய் பக்கோடா தேவையானவை: சிறியதாக நீளவாக்கில் நறுக்கிய வெண்டைக்காய் - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கடலைமாவுடன் அரிசி மாவு, வெண்டைக்காய், வெங்காயம், மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, அதில் கலந்து வைத்துள்ள மாவை உதிர்த்தாற்போல் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். ---------------------------------------------------------------------------------- புதினா பட்டாணி பக்கோடா தேவையானவை: பொடியாக நறுக்கிய புதினா - ஒரு கப், பச்சைப் பட்டாணி - கால் கப், துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன், பயத்தம் மாவு - அரை கப், அரிசி மாவு - கால் கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பச்சைப்பட்டாணியை மிக்ஸியில் லேசாக ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதில் புதினா, இஞ்சி, பயத்தம் மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாகக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். ---------------------------------------------------------------------------------- பஞ்சதானிய பக்கோடா தேவையானவை: கொள்ளு, உளுந்து, தினை, ராகி, கோதுமை சேர்ந்த தானியக் கலவை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 5, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: தானியங்களை 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதில் கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் கலந்து வைத்துள்ள தானிய கலவையைப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். ---------------------------------------------------------------------------------- அவல் பக்கோடா தேவையானவை: அவல் - ஒரு கப், ரவை - கால் கப், ஊறவைத்த பயத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: அவலை 2 நிமிடம் தண்ணீரில் போட்டு, பிறகு பிழிய வும். அதனுடன் ரவை, பயத்தம்பருப்பு, பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, கெட்டியாகக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் கலந்து வைத்துள்ள அவல் கலவையைப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். -------------------------------------------------------------------------------- பேபிகார்ன் பக்கோடா தேவையானவை: மெல்லியதாக நறுக்கிய பேபிகார்ன் - ஒரு கப், சோள மாவு, கடலை மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மைதா மாவு - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பேபிகார்ன், சோள மாவு, மைதா மாவு, கடலை மாவு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கெட்டியாகக் கலந்து எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். --------------------------------------------------------------------------------- மூலிகை பக்கோடா தேவையானவை: கற்பூரவல்லி, துளசி, தூதுவளை போன்ற மூலிகை இலைகள் - அரை கப், கடலைப்பருப்பு - ஒரு கப், அரிசி - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: இலைகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பையும் அரிசியையும் அரை மணி நேரம் ஊற வைத்து மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்து, இலைகளை அதனுடன் சேர்த்துக் கலந்து பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். ------------------------------------------------------------------------------- புளிப்பு பக்கோடா தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், மாங்காய் துருவல் - அரை கப், பச்சைமிளகாய் - 4, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: வெறும் கடாயில் அரிசி மாவை லேசாக வறுத்து, மாங்காய் துருவல், பச்சைமிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாகக் கலந்து, எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். புளிப்பு, கார சுவையுடன் நன்றாக இருக்கும். ---------------------------------------------------------------------------- அருகம்புல் பக்கோடா தேவையானவை: நுனி பாகமாக பொடியாக நறுக்கிய அருகம்புல் - அரை கப், பயத்தம்பருப்பு - ஒரு கப், கோதுமை மாவு - கால் கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பயத்தம்பருப்பில் தண்ணீர் சேர்த்து குழைய வேக விடவும். இதனுடன் பொடியாக நறுக்கிய அருகம்புல், கோதுமை மாவு, ராகி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும். எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். ------------------------------------------------------------------------- மிக்ஸட் பருப்பு பக்கோடா தேவையானவை: பட்டாணி பருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்ந்த கலவை - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பச்சைமிளகாய் - 2, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: பருப்பு வகைகளை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். இதனுடன் காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், பெருங்காயம், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும். இந்த மாவில் வெண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் கலந்து பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். வெண்ணெய் சேர்ப்பதால் பக்கோடா மெத்தென்று இருக்கும். ------------------------------------------------------------------------------ புழுங்கலரிசி கார பக்கோடா தேவையானவை: புழுங்கலரிசி - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4 (அ) மிளகு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடித்த எள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: புழுங்கலரிசியை ஊறவைத்து தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் (அ) மிளகு, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பெருங்காயத்தூள், பொடித்த எள் சேர்த்துக் கலந்து எண்ணெயில் பொரித் தெடுக்கவும். மாவு சற்று தளர்வாக இருந்தால் சிறிது கடலைமாவைக் கலந்து கொள்ளலாம். ------------------------------------------------------------------------------------ முளைப்பயறு பக்கோடா தேவையானவை: முளைகட்டிய பயறு - ஒரு கப், பச்சைமிளகாய் - 4, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா கால் கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: முளைகட்டிய பயறுடன் பச்சைமிளகாய் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இந்த மாவில் உப்பு, எலுமிச்சைச் சாறு, அரிசி மாவு, வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாகக் கலந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். --------------------------------------------------------------------------- சேமியா பக்கோடா தேவையானவை: வேகவைத்த உருளைக்கிழங்கு, வறுத்த சேமியா - தலா அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, பச்சைமிளகாய் - சிறிதளவு, கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: வேகவைத்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி, கொத்தமல்லி, பச்சைமிளகாய் கடலைமாவு, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். கடைசியாக வறுத்த சேமியாவை சேர்த்துக் கலந்து எண்ணெயில் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். --------------------------------------------------------------------------------------- மசாலா பக்கோடா தேவையானவை: பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய் - 2, கிராம்பு - 1, கசகசா - ஒரு டீஸ்பூன், சோம்பு, சீரகம், மிளகு - தலா கால் டீஸ்பூன், கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் (அ) நெய் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், இஞ்சி, கொத்தமல்லி, பச்சைமிளகாய் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: மசாலா சாமான் அனைத்தையும் வெறும் கடாயில் லேசாக வறுத்து பொடித்துக் கொள்ளவும். இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெண்ணெய் சேர்த்து பிசறி, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். ------------------------------------------------------------------------------------------- பால் பக்கோடா தேவையானவை: பால் - 3 கப், மைதா மாவு - ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பாலைக் காய்ச்சி ஒரு கப்பாக குறுக்கவும். இதனுடன் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, பச்சைமிளகாய், கொத்தமல்லி சேர்த்து கெட்டியாகக் கலந்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். ---------------------------------------------------------------------------------------- பனீர் பக்கோடா தேவையானவை: துருவிய பனீர் - ஒரு கப், கோதுமை மாவு - அரை கப், கடலை மாவு, சோள மாவு - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, பச்சைமிளகாய் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: துருவிய பனீரில் கோதுமை மாவு, கடலை மாவு, சோள மாவு, பச்சைமிளகாய், உப்பு, பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து கெட்டியாகக் கலந்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். --------------------------------------------------------------------------------------- சீஸ் பக்கோடா தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், மைதா மாவு, துருவிய சீஸ் - தலா கால் கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, செய்முறை: துருவிய சீசுடன், கடலை மாவு, மைதா மாவு, மிளகாய்த்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து கெட்டியாகக் கலந்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Related

30 நாள் 30 வகை சமையல் 3604589468637137400

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item