உண்மையை நிலை நாட்டவும், கொடுமையை எதிர்க்கவும் துயரத்தை மாய்க்கவும் மட்டுமே குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும். வார்த்தைகள் பூவைப் போன்றது. அதைத்...

உண்மையை நிலை நாட்டவும், கொடுமையை எதிர்க்கவும் துயரத்தை மாய்க்கவும் மட்டுமே குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும்.
வார்த்தைகள் பூவைப் போன்றது. அதைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால்தான் மதிப்பைப் பெறமுடியும்
பிறர் குறையை காண்பவன் அரை மனிதன் ஆவான். தன் குறையைக் காண்பவன் முழு மனிதன் ஆவான்.
துன்பங்கள் எப்போதும் நிரந்தரம் அல்ல. அவை பாலத்தின் அடியில் ஓடுகின்ற தண்ணீரைப்போல ஓடிவிடும்.
அன்பில் நம்பிக்கை வை. அது துயரத்தில் கொண்டுபோய் விட்டாலும் பரவாயில்லை. இதயத்தை மூடாதே.
யாருக்கு மனநோய் பற்றி அச்சம் இருக்கிறதோ அவர்களை அச்சமே ஒரு நோயாக பிடித்துக் கொள்கிறது.
நாம் சேர்த்து வைக்கும் உண்மையான சொத்து நாம் செய்யும் தர்மங்கள்தான்.
அதிகம் கற்கக் கற்க நம்முடைய அறியாமையை அதிகமாக அறிந்து கொள்கிறோம்.
இருள் இருள் என சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதைவிட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை தேட முயற்சி.
குறைய வேண்டியது பாவம். நிறைய வேண்டியது புண்ணியம். தர்மமில்லாத சொத்தில் நலமில்லை.
அழிவு ஏற்படாமல் காக்கும் கருவியே அறிவு. அது பகைவரால் அழிக்க முடியாத உள் அரணும் ஆகும்.
மரணம் மன்னர்களின் அரண்மனையிலும் ஏழையின் குடிசையிலும் அழைக்காமலே சென்று கதவை தட்டும்.
உயர்ந்த பண்பாடு என்னும் சிறைக்குள் அடைபட்டு நேர்மை எனும் திட்டத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
உன்னிலும் தாழ்மையானவர்களிடம் பாசத்தையும், ஈகைக் குணத்தையும் கொண்டு அவர்களை அரவணை.
துன்பத்தையும் துயரத்தையும் சகித்துக் கொள்வதைவிட வாழ்க்கையில் பெரிய அனுபவம் கிடையாது.
நீங்கள் எதைச் செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கு உலகத்திற்கு உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.
ஒழுக்கம் ஒரு போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் போராட வேண்டும்.
தன்னைத் தானே தாழ்த்தி கொள்பவனைப் போல தரணியில் மோசமானவன் எவனுமில்லை.
அச்சமில்லாதிருப்பது தைரியமில்லை. நீதிக்காகப் போராடும் உள்ள உறுதியே தைரியம் ஆகும்.
உண்மையான பெரிய மனிதனுக்கு அடையாளம் பணிவாக இருத்தல் என்று நான் நம்புகிறேன்
Post a Comment