இளமை அரங்கம்! நட் ஃபிங்கர்ஸ்
இளமை அரங்கம்! நட் ஃபிங்கர்ஸ் தேவையானவை பாசிப்பருப்பு - ஒரு கப், ரவை - கால் கப், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - கால் கப், முந்திரிப்பருப்பு,...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_18.html
இளமை அரங்கம்!
நட் ஃபிங்கர்ஸ்
தேவையானவை
பாசிப்பருப்பு - ஒரு கப்,
ரவை - கால் கப்,
பொடியாக நறுக்கிய
மல்லித்தழை - கால் கப்,
முந்திரிப்பருப்பு, வெள்ளரி விதை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
இஞ்சி-பச்சை மிளகாய்
விழுது - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
சோம்பு - ஒரு டீஸ்பூன், கரம்மசாலாதூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
பிரெட் தூள் - ஒரு கப்,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை மலர வேகவைத்து, நீரை வடித்துவிட்டு, நன்கு மசித்துக்கொள் ளுங்கள். இதனுடன் ரவை, மல்லித் தழை, தூளாக்கிய முந்திரி, வெள்ளரி விதை, உப்பு மற்றும் மசாலா பொருட்களையும் சேர்த்துக் கலந்து பிசையவும். இக்கலவையை உருண்டை களாகப் பிடித்து, விரல் போல நீளமாக உருட்டிக்கொள்ளவும். இதனை பிரெட் தூளில் புரட்டி, எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும். இந்த நட் ஃபிங்கர்ஸை சுடச்சுடப் பொரித்து, தக்காளி சாஸ§டன் சாப்பிட்டால், பிரமாதமாக இருக்கும்.
நட் ஃபிங்கர்ஸ் : பிரெட் தூளுக்கு பதில் ரஸ்க் தூள் சேர்த்தால் சூப்பராக இருக்கிறது. கொஞ்சம் புதினாவை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொண்டால், எளிதில் ஜீரணமாகும்.
----------------------------------------------------------------
Post a Comment