சமையல் குறிப்புகள்! இளநீர் கோழி
இளநீர் கோழி தேவையான பொருட்கள் கோழி- அரைக்கிலோ இளநீர்-3கப் பூண்டு-4பல் இஞ்சி-1"துண்டு உப்பு-தேவையான அளவு டிப்பிங் சாஸ் செய்ய: பச்சை த...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post.html
இளநீர் கோழி
தேவையான பொருட்கள்
கோழி- அரைக்கிலோ
இளநீர்-3கப்
பூண்டு-4பல்
இஞ்சி-1"துண்டு
உப்பு-தேவையான அளவு
டிப்பிங் சாஸ் செய்ய:
பச்சை தக்காளி(தக்காளி காய்)-2
பச்சை மிளகாய்-15 முதல் 20
சின்னவெங்காயம்-3
பூண்டு-2பல்
உப்பு-தேவையான அளவு
சர்க்கரை(சீனி)-1/4தேக்கரண்டி
எண்ணெய்-1மேசைக்கரண்டி
தேங்காய் எண்ணெய்-1தேக்கரண்டி
செய்முறை
கோழியை சுத்தம் செய்து நடுத்தர அளவு துண்டுகளாக்கவும்.
பாத்திரத்தில் இளநீர் விட்டு இஞ்சி பூண்டை நசுக்கி சேர்க்கவும்.
கோழித்துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
கோழி வெந்ததும் இறக்கி வைக்கவும்.
டிப்பிங் சாஸ் செய்ய:
எண்ணெய் தவிர மற்ற பொருட்கள் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். ( இடிகல்லில் அல்லது அம்மியில் அரைத்தால் சுவை நன்றாக இருக்கும்)
வானலியில் எண்ணெய் சூடாக்கி அரைத்த கலவையை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
இறக்கியதும் தேங்காய் எண்ணெய் கலந்து இளநீரில் வேகவைத்த சூடான கோழியுடன் பரிமாறவும்.
குறிப்பு:
கோழியை
இளநீரில் வேக வைப்பதால் பஞ்சு போன்று மிக மென்மையாக இருக்கும். காரமான
டிப்பிங் சாஸில் முக்கி சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தேங்காய்
எண்ணெயிலேயே அரைத்த விழுதை வதக்கினால் இன்னும் சுவையாக இருக்கும்.
Post a Comment