ஈரல் முந்திரிப் பருப்பு வறுவல் தேவையான பொருட்கள் ஈரல் - 1/2 கிலோ முந்திரிப் பருப்பு - 10 சாம்பார் வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிர...
ஈரல் முந்திரிப் பருப்பு வறுவல்
தேவையான பொருட்கள்
ஈரல் - 1/2 கிலோ
முந்திரிப் பருப்பு - 10
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
மிளகுத்தூள் - 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1 குழிக்கரண்டி
செய்முறை
* ஈரலை சுத்தம் செய்து கியுப்களாக நறுக்கி கொள்ளவும்.
* அகலமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
* முந்திரி பருப்பையும் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நீர் ஊற்றி வேக வைக்கவும்.
* ஈரல் நன்கு வெந்து தொக்கு பதத்தில் வந்ததும் இறக்கி விடவும்.
------------------------------------------------------------------------------------------
ஆட்டு ஈரல் கிரேவி
* ஆட்டு ஈரல் - கால் கிலோ
* வெங்காயம் - இரண்டு (பெரியது)
* தக்காளி - 1 1/2 + பாதி (பெரியது)
* இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
* எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
* மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
* மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
* தனியா தூள் - கால் தேக்கரண்டி
* உப்பு - அரை தேக்கரண்டி (தேவைக்கு)
* கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி (பட்டை, ஏலம், கிராம்பு)
* பச்சைமிளகாய் - ஒன்று
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஈரலில் மேலிருக்கும் மெல்லிய தோலை அகற்றி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி அதில் உப்பு, சிறிது வினிகர் சேர்த்து இரண்டு நிமிடம் ஊற வைத்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும்.
வாயகன்ற வாணலி ஒன்றில் ஒரு மேசைகரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
லேசாக இஞ்சி பூண்டு விழுது நிறம் மாறியதும் பொடியாக நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கின ஒன்றரை தக்காளியை சேர்த்து கிளறவும், மீதி உள்ள பாதி தக்காளியை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.
தக்காளி வதங்கியதும் சுத்தம் செய்து தண்ணீர் வடித்து வைத்துள்ள ஈரலை சேர்க்கவும். ஈரல் சேர்த்ததும் ஒரு நிமிடம் நன்கு ஒரு சேர கிளறவும்.
மசாலா வகைகள் (மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, கரம்மசாலா) அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு நிமிடம் முடி போட்டு சிம்மில் வைக்கவும்.
கடைசியாக அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் மீதமுள்ள எண்ணெயை சேர்த்து நன்கு கிளறவும்.
தீயின் அளவை குறைத்து வைத்து மூன்று நிமிடம் கிரேவியை திக்காக விடவும்.அதிக நேரம் வைத்து ஈரலை வேக வைத்தால் ரொம்ப கட்டியாகிடும்.
சுவையான ஆட்டு ஈரல் கிரேவி ரெடி.
காலை உணவாக ப்ரெட்டில் வைத்து சாப்பிடுவார்கள். நாம் ப்ளையின் சாதம், மோர்குழம்புடன் (அ) சாம்பார் இவற்றுடன் தொட்டுக் கொள்ள செய்யலாம்.
ரொட்டி, சப்பாத்தி, பரோட்டாவிற்கும் பொருந்தும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. பிள்ளை பெறும் நேரத்திலும், பிள்ளை பெற்றதும் குறையும் இரத்தத்தின் அளவை அதிகப்படுத்தும்.
இதை சுட்டு சாப்பிட்டால் ரொம்ப நன்றாக இருக்கும். சீக்கிரம் வெந்துவிடும், ஆகையால் கரியை தீமூட்டி எல்லாம் சுட தேவையில்லை. அப்படியே மிளகுதூள் உப்பு தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு கம்பியில் கோர்த்து கேஸ் அடுப்பிலேயே சுடலாம்.
இந்த ஈரலை பல வகையாக செய்யலாம். கீரைசோறு என்னும் ஸ்பேர் பாட்ஸ் ரைஸும் தயாரிக்கலாம்.
-------------------------------------------------------------------------------------------------
ஈரல் வறுவல்
தேவையான பொருட்கள்:
ஆட்டு ஈரல் - 500 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
வர மிளகாய் - 4
இஞ்சி & பூண்டு விழுது - ஒரு டீ ஸ்பூன்
மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - ஒரு டீ ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணை - முன்று டேபிள் ஸ்பூன்
பட்டை, இலை - தாளிக்க
செய்முறை:
ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி.லி தண்ணீர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும்.
மிளக, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் வைக்க வேண்டும். வெங்காயத்தை நீள நீளமாகவும், பச்சை மிளகாயை சிறிது சிறிதாகவும் நறுக்கி வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பட்டை, இலை தாளிக்க வேண்டும்.
வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி, சிவந்ததும் ப. மிளகாய், கறிவேப்பிலை போட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி & பூண்டு விழுது, ம.பொடி, ஒரு டீ ஸ்பூன் உப்பு மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.
வதங்கியதும் ஈரல் கலவையைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். அடிக்கடி திறந்து கிளறி விட வேண்டும். தண்ணீர் வற்றியதும் இறக்க வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------
ஈரல் வறுவல்
தேவையான பொருள்கள்:
ஈரல் - அரை கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 2
சோம்பு - சிறிதளவு
இஞ்சி, பூண்டு - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 4
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, வெங்காயம், இஞ்சி,பூண்டு விழுது
சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கறிவேப்பிலை சேர்த்து
ஈரல் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
பிறகு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்க்க
வேண்டும். தண்ணீர் ஊற்றி மூடி நன்கு வேகவைத்து ட்ரையாக வரும்
வரை வதக்கி இறக்குவதற்கு முன்பாக மிளகு போட்டு தூவி கிளறி
கொத்தமல்லி தூவி இறக்கவும்.
--------------------------------------------------------------------------------------------
ஈரல் பொரியல்
தேவையான பொருட்கள்
ஆட்டின் ஈரல் - 200 கிராம்
வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தயிர் - 50 கிராம்
மிளகு தூள் - 2 கிராம்
கொத்துமல்லி, கறிவேப்பிலை
உப்பு
தாளிக்க சோம்பு, கறிவேப்பிலை, எண்ணெய்
தயாரிக்கும் முறை
ஆட்டின் ஈரலை வேகவைத்து பின்னர் அலசி வேண்டும் அளவிற்கு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஈரலில் உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். ஒரு பச்சை மிளகாயையும் கீறிப் போட்டு வதக்கவும்.
பின்னர் ஈரலை வாணலியில் போட்டு லேசாகக் கிளறி விடவும்.
இறக்கும்போது கொத்துமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
Post a Comment