உலாவியில் விளையாடும் புத்தம் புதிய HTML 5 விளையாட்டுக்கள்.
கணினியில் விளையாட்டுக்களை ஆன்லைன் மூலம் தறவிறக்கிதான் விளையாட வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லாமல் ஆன்லைன் மூலம் நாம் HTML 5 புத்தம் புதிய...


கணினியில் விளையாட்டுக்களை ஆன்லைன் மூலம் தறவிறக்கிதான் விளையாட வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லாமல் ஆன்லைன் மூலம் நாம் HTML 5 புத்தம் புதிய விளையாட்டுக்களை நம் உலாவியிலே விளையாடலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
HTML 5 இணையமொழியில் உருவாக்கியுள்ள புத்தம் புதிய விளையாட்டுக்களை இனி ஆன்லைன் மூலம் எளிதாக உலாவியிலே விளையாடலாம் நமக்க்கு உதவுவதற்காகவே ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://html5games.com
html 5 இணைய மொழியில் உருவாக்கப்படும் விளையாட்டுக்கள் தற்போது அதிவேகமாக அனைவரிடமும் பிரபலமாகிவருகிறது. இந்நிலையில் HTML 5 விளையாட்டுக்களை மட்டும் குறிவைத்து பிரத்யேகமாக ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் பிரபலமான அனைத்து HTML 5 விளையாட்டுக்களையும் ஆன்லைன் மூலம் எளிதாக நம் உலாவியின் மூலமே விளையாடலாம். விளையாட்டு கணினியில் நிறுவக்கூடாது என்ற கட்டளையும் இல்லாமல் உலாவி மூலமே விளையாடும் இந்த HTML 5 விளையாட்டுக்கள் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 2D விளையாட்டு முதல் 3D விளையாட்டு வரை அனைத்தையும் உலாவி மூலமே விளையாடலம் என்பதும் HTML 5-ன் தனிச்சிறப்பு. குழந்தைகள் முதல் இணைய உலாவி மூலம் விளையாட்டு விளையாட விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
Post a Comment